search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government hospital theft"

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் திருட்டு நடந்து வருவதால் நோயாளிகள் பீதியடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் தினந் தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு விபத்து, அறுவை சிகிச்சை, மகப்பேறு என்று நோயாளிகள் வந்த வண்ணம் இருப்பதால் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் பரபரப்பாகவே காணப்படும்.

    இங்கு மகப்பேறு மருத்துவ பிரிவை தவிர உள் வார்டுகளில் எங்கும் கண்காணிப்பு கேமிரா கிடையாது. இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் தங்குபவர்களின் பொருட்கள் தொடர்ந்து திருடு போய் வருகிறது.

    விபத்துகளில் சிக்கி காயமடைந்து சுய நினைவற்று கிடக்கும் நோயாளிகளிடமும், அவர்களுடன் தங்கி இருப்பவர்களிடமும் பணம், செல்போன் ஆகியவை திருடு போய் வருகிறது. காலையில் எழுந்து பார்க்கும் போதுதான் தங்கள் பொருட்கள் திருடு போனதை அவர்களால் அறிய முடிகிறது.

    ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் இருந்தும் இதுபோன்ற திருட்டு தினசரி நடப்பதால் யாரிடம் புகார் செய்வது என தெரியாமல் சென்று விடுகின்றனர்.

    சிகிச்சையில் உள்ளவர்களே இது போன்ற பொருட்களை திருடுவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தாலும் அவர்களை பிடிக்க முடிவதில்லை. ஒரு வார்டில் என்று இல்லாமல் பெரும்பாலான வார்டுகளில் இது போன்ற திருட்டு சம்பவங்கள் தினசரி நடந்து வருகிறது. எனவே ஆயிரக்கணக்கான நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் அரசு ஆஸ்பத்திரியில் முக்கிய இடங்களிலாவது கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×