என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Government Library"
- கலெக்டர் செந்தில்ராஜ் செய்துங்கநல்லூர் நூலக கட்டிடத்தினை பார்வையிட்டார்.
- புதிய கட்டிடத்திற்கான வரைபடத்தினை உருவாக்கும்படி பொறியாளருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
செய்துங்கநல்லூர்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் நூலக கட்டிடம் கட்டிடம் தர வேண்டும் என்று செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோர் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜிடம் கடந்த வாரம் நேரில் சந்தித்து மனு கொடுத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் செந்தில்ராஜ் செய்துங்கநல்லூர் நூலகத்துக்கு ஆய்வு செய்ய வருகை தந்தார். அவர் அங்குள்ள பழமையான நூலக கட்டிடத்தினை பார்வையிட்டார். மேலும் நூலகத்துக்கு வருகை தரும் வாசகர்களுக்காக புதிய கட்டிடம் கட்ட பட வேண்டிய இடத்தினை பார்வையிட்டார். அதன் பின் கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் பாக்கிய லீலா, மேலாளர் மகேந்திர பிரபு, செய்துங்கநல்லூர் கிளார்க் சங்கரபாண்டியன் ஆகியோரிடம் ஆலோசனை செய்தார்.
அதன்பின் அதற்கான வரைபடத்தினை உருவாக்கும்படி பொறியாளருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து அங்கிருந்தவர்களை சந்தித்து மக்கள் குறை கேட்டார். கலெக்டருடன் சார் ஆட்சியர் கவுரவ்குமார், நெல்லை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசக்திய வள்ளி, ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், கருங்குளம் சேர்மன் ராஜேந்திரன் உள்பட பலர் உடன் வந்தனர்.