search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government Sivdasmeena Study"

    • ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாஆய்வு செய்தார்.
    • வைராபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் திடக்கழிவுகளை எரியூட்டும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை) சிவ்தாஸ் மீனா ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஈரோட்டுக்கு வந்தார்.

    இன்று காலை அவர் காளை மாட்டு சிலை அருகே ஸ்மார்ட் சிட்டி மூலம் மாநகராட்சி சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டு வரும் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார். வணிக வளாகத்திற்குள் சென்று பணி குறித்து கேட்டு அறிந்தார்.

    இதனை தொடர்ந்து அவர் சோலாரில் தற்போது புதிதாக அமைக்கப்பட்ட வரும் பஸ் நிலைய பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.

    இதைத்தொடர்ந்து ஈரோடு பஸ் நிலையத்தில் விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் வைராபாளையத்தில் உள்ள நுண்ணுயிர் உரக்கூடம் மற்றும் திடக்கழிவுகளை எரியூட்டும் எந்திரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, நகர் நல அலுவலர் பிரகாஷ், மாநகர பொறியாளர் மதுரம், செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற் பொறியாளர் பாஸ்கர் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×