search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government welfare assistance"

    • 1,122 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.
    • ரூ.4.84 லட்சம் மதிப்பீட்டில் பாரவலசு முதல் வாய்க்கால்மேடு வரை உள்ள சாலையை ஓரடுக்கு கப்பி சாலையாக அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 1,122 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

    ஈரோடு மற்றும் சென்னிமலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    ஈரோடு மாவட்டத்தி ற்கென பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் அமைச்சர் முத்துசாமி சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1000 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகைகளையும் வழங்கினார்.

    மேலும் 34 பயனாளி களுக்கு ரூ.23,35,050 மதிப்பீ ட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முத்ராகடன், மாற்றுத்திறனாளிகடன், சிறுவணிகக் கடன், சம்பளக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்கு ழுக்கடன், பயிர்கடன், நடைமுறை மூலதனக்கடன், கூட்டுப்பொறுப்புக் குழு பயிர்கடன், சுயஉதவிக்கு ழுகடன் என மொத்தம் 1,122 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டில் பல்வேறுஅரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    தொடர்ந்து ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சி லட்சுமி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்பாட்டு பணியினையும், பேரோடு ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு த்துறையின் சார்பில் ரூ.48.35 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டிடம் கட்டும் பணியினையும்,

    கதிரம்பட்டி ஊராட்சி பவளத்தாம் பாளையத்தில் 15-வது நிதிக்குழு மற்றும் ஊரகவளர்ச்சி நிதியின் கீழ் ரூ.8.52 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கதொட்டி அமைக்கும் பணியினையும், ஊரக வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் தங்கம் நகரில் சாலை மேம்பாட்டு பணியினையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் கவுண்டச்சி பாளையம் ஊராட்சி கரட்டுபாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.32.20 லட்சம் மதிப்பீட்டில் கரட்டுபாளையம் முதல் அண்ணமார் கோவில் வரை ஓரடுக்கு கப்பிசாலை அமைக்கும் பணியினையும், புங்கம்பாடி ஊராட்சி பாரவலசு பகுதியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.4.84 லட்சம் மதிப்பீட்டில் பாரவலசு முதல் வாய்க்கால்மேடு வரை உள்ள சாலையை ஓரடுக்கு கப்பி சாலையாக அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

    வடமுகம் வெள்ளோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் பெருந்துறை ஆர்.எஸ் ஊராட்சி ஒன்றி ய நடுநிலைப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினையும், முகாசி புலவன்பாளையம் ஊராட்சி ஆரிய காட்டு வலசு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.21.34 லட்சம் மதிப்பீட்டில் அரியங்காட்டு வலசு முதல் தண்ணீர்பந்தல் வரை ஓரடுக்கு கப்பி சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.1.51 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் ஆர்.டி.ஓ. சந்தோஷினிசந்திரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார், துணைமேயர் செல்வராஜ், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் பிரகாஷ் (ஈரோடு), காயத்திரி இளங்கோ (சென்னிமலை), கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜ்குமார், இணை இயக்குநர்கள் சின்னசாமி (வேளாண்மை), பழனிவேல் (கால்நடை பராமரிப்பு த்துறை), ஈரோடு தாசில்தார் பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட தொடர்புடையதுறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ×