என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » govt officer dies
நீங்கள் தேடியது "govt officer dies"
கும்மிடிப்பூண்டி அருகே சாலையை கடக்க முயன்ற போது வேன் மோதிய விபத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ரெயில் நிலையம் எதிரே வசித்து வந்தவர் சந்தானக் கிருஷ்ணன்(வயது82). ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரி. இவரது மனைவி அருணா. மகன் சதிஷ் (42).
நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை சந்தானக் கிருஷ்ணன், அவரது மனைவி அருணா, மகன் சதிஷ் ஆகிய 3 பேரும் கடக்க முயன்றனர்.
அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து ஆரம்பாக்கம் நோக்கி வந்த மினி வேன் திடீரென சந்தானக்கிருஷ்ணன் மீது மோதுவது போல் வேகமாக வந்தது. இதனைக்கண்ட சதிஷ், தந்தையை காப்பாற்ற முயன்றார்.
இதில் அவர்கள் 2 பேர் மீது வேன் மோதியது. படுகாயம் அடைந்த இருவரும் சென்னை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி சந்தானக்கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். சதீசுக்கு தொடர்ந்து தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து மினி வேன் டிரைவர் ஆரம்பாக்கத்தை அடுத்த பாட்டைகுப்பம் கிராமத்தைச்சேர்ந்த பிரேம் என்பவரை கைது செய்தனர்.

×

X