என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "grand wedding"
- பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.
- மணமக்களின் குடும்பத்தினர் மணமக்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் அதில் உள்ளது.
திருமணத்தை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலர் தங்களது திருமணம் பிரமாண்டமாகவும், வித்தியாசமாகவும் நடைபெற வேண்டும் என நினைப்பார்கள். சிலர் எளிமையான முறையில் திருமணத்தை நடத்துவார்கள். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பனி சிகரத்தில் நடைபெற்ற பிரமாண்ட திருமண காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது.
சுவிட்சர்லாந்தில் உள்ள ஸ்னோ அல்பைன் சிகரங்களில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. 2,222 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பனி சிகரத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தின் போது மணமக்கள் ஐஸ்கியூப்பில் இருந்து வெளிப்படும் காட்சிகள் மற்றும் வீடியோவின் பின்னணியில் இசை தொகுப்பு ஆகியவை பயனர்களை கவர்ந்துள்ளது. மணமக்களின் குடும்பத்தினர் மணமக்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் அதில் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
குஜராத் மாநிலம், சபர்கந்தா மாவட்டம், ஹிம்மத்நகர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பரோட். இவரது மகன் அஜய் பரோட் பிறந்த சில நாட்களிலேயே அவரது தாயார் மரணம் அடைந்தார். பிறவியிலேயே கற்றல் குறைபாட்டுடன் வளர்ந்த அஜய்க்கு சிறு வயதில் இருந்தே இசைமீது அதிக நாட்டம்.
யார் வீட்டு திருமணம் மற்றும் சுபகாரியங்களில் ஸ்பீக்கரில் பாட்டு சத்தம் கேட்டுவிட்டால் அங்கு ஆஜராகி விடும் அஜய் இசைக்கேற்ப குத்தாட்டம் போட்டு கும்மாளமாக மகிழ்வது வாடிக்கை.
நாட்கள் செல்லச்செல்ல பருவ வயதை எட்டியபோது உறவினர்களின் இல்லங்களில் நடைபெறும் திருமண விழாக்களை பார்க்கும்போது, தனக்கும் அப்படியொரு சுபநிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்ற தீராத ஏக்கம் அஜயின் இதயத்தில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது.
எனக்கு ஏன் இப்படி எல்லாம் செய்யவில்லை? என்று வெகுளித்தனமாக அஜய் கேட்ட கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத அவரது தந்தை விஷ்ணு பரோட் சுக்குநூறாக நொறுங்கிப் போனார்.
தற்போது 27 வயதாகும் அஜய் அதற்கேற்ற உடல் மற்றும் அறிவு வளர்ச்சி இல்லாதிருப்பதால் அவருக்கேற்ற மாதிரி மணமகளை தேடுவதில் உள்ள சிக்கலையும் சிரமத்தையும் எப்படி அவரிடம் கூறி விளக்குவது? என்று உறவினர்களும் தடுமாறினர்.
சமீபத்தில் தனது தந்தையின் சகோதரர் மகனின் திருமணத்துக்கு சென்றுவந்த பிறகு அஜயின் திருமண ஏக்கம் விஸ்வரூபம் அடைந்ததை உணர்ந்த அவரது தந்தை உறவினர்களிடம் பேசி ஒரு முடிவுக்கு வந்தார்.
அஜய்க்கு திருமணம் செய்விக்க சுபமுகூர்த்த நாள் நிச்சயிக்கப்பட்டது. உற்றார், உறவினர்களுக்கு எல்லாம் அழைப்பிதழ்கள் வினியோகிக்கப்பட்டன.
குஜராத்தி மொழியின் மிக பிரபலமான பாடல்களை வாத்திய குழுவினர் இசைத்தபோது சுமார் 200 பேர் நடனமாட மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனார் மணமகன் அஜய்.
ஒருவழியாக மகனின் திருமண ஆசையை நிறைவேற்றிய திருப்தியுடன் தனது வீட்டின் அருகாமையில் உள்ள சமூக நலக்கூடத்தில் சுமார் 800 பேருக்கு தடபுடலான அறுசுவை விருந்து படைத்து மகிழ்ந்தார், விஜய் பரோட்.
இந்த வினோத திருமணத்துக்கு வந்தவர்களில் பலருக்கு அஜய் பரோட் போல இனி யாரும் பிறக்கவே கூடாது என்னும் வேதனை ஏற்பட்டிருக்கலாம். ஆனால், விஷ்ணு பரோட்டை போன்றதொரு பாசக்கார தந்தை கிடைத்தால் இப்படி பிறந்தாலும் தவறில்லை என்ற எண்ணம் அவர்களில் சிலருக்கு தோன்றி இருக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்