search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "GRANDMOTHER'S PETTION TO THE COLLECTOR"

    • பணம், பாக்கு, பழத்துடன் மூதாட்டி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.
    • கோரிக்கைகளை நிறைவேற்றி தர கோரி மனு அளிக்க வந்தார்.

    திருச்சி:

    லால்குடி வட்டம், அலுந்தலைப்பூா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஆா். சரஸ்வதி (வயது 73). கணவரை இழந்த இவா், தேநீரகம் நடத்தி வந்தாா். இவரது மகன் அரவிந்தராஜ் (27), தாய்க்கு துணையாக இருந்து வந்தார்.

    இந்நிலையில் இவர்கள் நடத்தி வந்த தேனீர் கடை புறம்போக்கு இடத்தில் வைத்திருப்பதாகக் கூறி, அதை சிலா் அகற்றிவிட்டனா். இதையடுத்து, தங்களுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி, அதிலேயே ஒரு பகுதியை தேநீரகத்தை நடத்திக் கொள்ள முடிவு செய்து கட்டுமானப் பணிகளுக்காக அஸ்திவாரம் தோண்டினா்.

    இதற்கிடையில் கட்டுமானத்துக்கு அனுமதி கோரி உள்ளாட்சி அமைப்பிடம் விண்ணப்பம் செய்தனா். ஆனால், பல்வேறு காரணங்களை கூறி, அனுமதியளிக்காமல் தாமதப்படுத்தி வந்தனா்.

    இதுதொடா்பாக ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்தும் பலன் இல்லை. மேலும், கலெக்டர் அலுவலகத்திலும் 3 முறைகளுக்கு மேல் மனு அளித்தும், அந்த மனுக்கள் வட்டார வளா்ச்சி அலுவலகத்துக்கு திரும்ப அனுப்பிவிடுகின்றனா். இதனால் விரக்தியடைந்த தாயும், மகனும் கலெக்டர் அலுவலகத்திற்கு மீண்டும் மனு அளிக்க வந்தனா்.

    அப்போது அவர்கள் கலெக்டர் வளாகத்தில் தரையில் துண்டு விரித்து அமா்ந்து, மற்றொரு துண்டை விரித்து வெற்றிலை, பாக்கு, பழங்கள் பரப்பில் கையில் மனுவுடன் அமா்ந்தனா். இந்த செயலை ஆட்சியரகத்துக்கு வந்த பலரும் வியப்புடன் பாா்த்துச் சென்றனா்.

    இதுதொடா்பாக, அரவிந்தராஜ் கூறியது: வயதான தாயாா் பலமுறை அழைத்தும் அரசு அதிகாரிகள் யாரும் வந்து இடத்தை பாா்த்து உரிய அனுமதி பெற்றுத்தரவில்லை. எனவே, தங்களது வீட்டுக்கு சிறப்பு விருந்தினா்களை அழைப்பதை போன்று பழம், பணம், பாக்குடன் வந்து கோரிக்கை மனு அளிக்க வந்துள்ளோம்.

    ஆட்சியா் இல்லாததால் எங்களது மனுவை பெற்றுக் கொண்ட அலுவலா்கள் மீண்டும் வட்டார வளா்ச்சி அலுவலத்துக்கே பரிந்துரைத்துள்ளனா். இந்த முறையாவது எங்களது பிரச்னைக்கு உரிய தீா்வு கிடைக்க வேண்டும் என்றாா் அவா்.

    ×