என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Green Jersey"
- ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது.
- 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் நாளமறுநாள் தொடங்க உள்ளது. 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. ஒவ்வோரு அணியும் ஜெர்சி தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து அணியும் தங்களது வீரர்கள் பயிற்சி செய்யும் வீடியோவையும் அவ்வது பதிவிட்டு வருகின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஏற்கனவே தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய நிலையில் அவர்களது 2-வது ஜெர்சியை இன்று அறிமுகப்படுத்தியது. அதுமட்டுமல்லாம அதற்கான உபகரணங்களும் அணி வீரர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு ஆர்சிபி பச்சை நிற ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. அப்போது முதல் இப்போ வரையும் சில போட்டிகளில் பச்சை நிற ஜெர்சியுடன் விளையாடுவதை வழக்கமாக ஆர்சிபி அணி கொண்டுள்ளது.
2011 முதலே ஆர்சிபி "கோ க்ரீன்" என்ற கலாச்சார முன்னெடுப்பை நிகழ்த்தி வருகிறது. இதன் மூலமாக வருங்கால தலைமுறையினருக்கு தூய்மையான மற்றும் பசுமையான சூழ்நிலையை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை தருகிறது.
- வரும் 23-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூர் அணிகள் மோதுகிறது.
- பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
16-வது ஐபிஎல் சீசனுக்கான கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே சென்று அமர்ந்து பார்க்கும் நிலை உள்ளது.
ஐபிஎல்-லில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இந்த முறை கோப்பையை வெல்ல தீவிரம் காட்டி வருகிறது. அந்த அணியில், அதிரடி வீரர்களான டு பிளஸ்சிஸ், கோலி, மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் உள்ளனர்.
இந்த நிலையில், வரும் 23-ம் தேதி பெங்களூருவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள போட்டியில் பெங்களூரு அணி பச்சை நிற ஜெர்சியில் களமிறங்க உள்ளது.
இந்த தகவலை அந்த அணி தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், அதில், எங்களின் இந்த சிறப்பான பச்சை நிற ஜெர்சிகள் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.