என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » green plan scheme
நீங்கள் தேடியது "Green Plan Scheme"
திருவண்ணாமலையில், சென்னையில் இருந்து சேலம் வரை அமைக்கும் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
ஆர்ப்பாட்டத்தில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விஸ்தரிப்பு நில எடுப்பு தனி தாசில்தார் அலுவலகத்திலும், திருவண்ணாமலை உதவி கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர்.
பசுமை வழிச்சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 910 அடி அகலத்திற்கும் அமைக்க உள்ளதாக தெரிகிறது.
இதனால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு ஏரி, குளம், கிணறுகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு நீர் வளம், நில வளம், மலை வளம், வன வளம் அழிந்து எங்கள் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் பாழாகும். மக்களிடம் இருந்து விளை நிலம் அபகரிக்கப்படும்.
இவ்வாறு அமைக்கப்படும் 8 வழிச் சாலை தங்களுக்கு தேவையில்லை. மேலும் இந்த 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை கைவிட வேண்டும். இந்த நிலையில் இத்திட்டத்திற்காக அளவர்களை பணிக்கு எடுத்து அளவீடு செய்யும் பணி தொடங்குவதாக தெரிகிறது. அளவர்களை அளவீடு பணிக்கு தேர்வு செய்யும் பணியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
×

X