search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guava Fruit"

    • பழனியில் கொய்யாப்பழம் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
    • அரசு குளிர்சாதன கிட்டங்கி அமைத்துதர கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பழனி:

    பழனியில் கொய்யாப்பழம் விலை கடும் வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.6 முதல் ரூ.20 வரை விலை போவதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    பழனியை அடுத்த ஆயக்குடி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் கொய்யா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தினந்தோறும் தோட்டங்களில் பறிக்கப்படும் கொய்யா பழங்கள் ஆயக்குடி கொய்யா சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஆயக்குடியில் இருந்து தமிழகம் முழுவதும் கொய்யாப்பழம் தினந்தோறும் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது . மேலும் கேரளா, பெங்களூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் கொய்யாப்பழம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் சந்தையில் 20 கிலோ அடங்கிய கொய்யாப்பழப்பட்டி ரூ.1200 முதல் ரூ.1600 வரை விலை போனது. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் சந்தைக்கு அதிக அளவில் விவசாயிகள் கொய்யாப்பழங்களை கொண்டு வந்தனர்.

    இதன் காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்து 20 கிலோ அடங்கிய கொய்யாப்பழப்பட்டி ரூ.120 முதல் ரூ.400 வரை மட்டுமே விலைபோனது. தற்போது விலை சரிந்து விற்பனையாவதால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. தோட்டத்தில் கொய்யாப்பழம் பறிப்பதற்கான கூலிக்கு கூட விலை கட்டுபடியாகவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

    அரசு இதுபோன்ற காலங்களில் கொய்யாப்பழங்களை பாதுகாத்து வைத்திருக்கும் வகையில் குளிர்சாதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குளிர்காலத்தில் தவறாமல் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும். அதிலிருக்கும் தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
    குளிர்காலத்தில் தவறாமல் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும். அதிலிருக்கும் தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும்.

    கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.

    கொய்யாப்பழத்தில் கார்போஹைட்ரேட் அளவு மிகவும் குறைவு. குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்டிருக்கும் உணவுகளை சாப்பிடுவது எடை குறைப்புக்கு உதவும் என்பது பலகட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கொய்யாப்பழத்தில் கலோரியும் குறைவுதான். அதனால் எடை இழப்புக்கு தூண்டு கோலாக அமையும்.

    புரதத்திற்கு பசியை தூண்டும் ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உண்டு. கொய்யாப்பழத்தில் புரதம் அதிகமாகவே இருப்பதால் தினமும் சாப்பிட்டு வரலாம்.

    குடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் வைட்டமின் பி-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி1, பி3, பி6 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அவை செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டவை. எடை இழப்புக்கும் துணைபுரிபவை. அதனால் கொய்யாப்பழத்தை தவிர்க்காமல் சாப்பிட்டு வருவது நல்லது.

    நீரிழிவு நோயாளிகளும் கொய்யாப்பழம் சாப்பிடலாம். அதிகபடியான இன்சுலின் தடுப்பு மருந்து உபயோகிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும். இன்சுலினின் செயல்பாடு சீராக நடைபெறுவதற்கு கொய்யாப்பழம் உதவும்.

    கொய்யாப்பழ இலைகளை கொண்டு தேனீர் தயாரித்தும் பருகலாம். நீரிழிவு பிரச்சினைக்கு அது நிவாரணம் தரும்.
    ×