என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » gudka abduction
நீங்கள் தேடியது "Gudka abduction"
கேரளாவுக்கு காரில் கடத்திய 25 கிலோவுக்கும் மேல் குட்காவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutka
கோவை:
கோவை மாநகர் தெற்கு சரக உதவி கமிஷனர் ரமேஷ்கிருஷ்ணன் மற்றும் போத்தனூர் போலீசார் நேற்று நள்ளிரவு ஈச்சனாரி சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் பின்சீட்டில் சிறு, சிறு மூட்டைகள் கிடந்தன. இதுகுறித்து கேட்ட போது காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த மூட்டைகளை பிரித்து பார்த்த போது அது தடை செய்யப்பட்ட குட்கா என்பது தெரியவந்தது.
25 கிலோவுக்கும் மேல் குட்காவை கைப்பற்றிய போலீசார் காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த சுதிர் (33), அனஸ்(22), ஆலுவாவை சேர்ந்த சித்திக்(23) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இவர்கள் பெங்களூரில் இருந்து இவற்றை வாங்கிச் செல்வதாக கூறி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், குட்கா பிடிபட்டது குறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்களிடம், கைப்பற்றப்பட்ட குட்கா மூட்டைகளை ஒப்படைத்து விடுவோம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேல்விசாரணை நடத்துவார்கள் என்றனர். #Gutka

×

X