என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Guduvanchery"
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பத்ம நாபன் (வயது 72). ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்.
இவர் அதே பகுதியில் காலை சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவ்வழியே வந்த கார் திடீரென பத்மநாபன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பத்மநாபன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விபத்து ஏற்படுத்திய காரின் விபரம் தெரிய வில்லை. இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.
செங்கல்பட்டு:
நந்திவரம், கூடுவாஞ்சேரி, காலனி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 36). ரவுடியான இவர் மீது கொலை, அடிதடி வழக்குகள் உள்ளன.
நேற்று மாலை அவர் அதே பகுதியில் உள்ள மதுக்கடையில் மது குடித்து விட்டு நண்பர்களுடன் வெளியே வந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் கண்ணனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பரிதாபமாக இறந்தார். உடனே கொலைக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது. இதுகுறித்து கூடுவாஞ்சேரி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மது குடிக்கும் போது கண்ணனுக்கும், உடன் இருந்த கூட்டாளிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கண்ணனின் நண்பர்கள் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
கொலையுண்ட கண்ணனுக்கு லட்சுமி என்ற மனைவியும், 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சென்னை:
சென்னை ஆதம்பாக்கம் நியூ காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் சரவணன்.
சாய்ராம் கல்லூரியில் இவர் இரண்டாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். கடந்த 22-ந்தேதி மாலையில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்ற மாணவர் சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுபற்றி மறுநாள் அவரது தாய் சங்கரி ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஆனால் சரவணன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது தெரியாமல் இருந்தது. இதனால் சரவணனின் பெற்றோர்கள் தவித்து வந்தனர்.
இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியில் கல்குவாரியில் வாலிபர் ஒருவரின் உடல் தண்ணீரில் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இது காஞ்சிபுரம் மாவட்ட காயார் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியாகும். போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் ஆதம்பாக்கத்தில் மாயமான மாணவர் சரவணன் உடல் என்பது தெரிய வந்தது. சரவணனின் தலையில் பெரிய வெட்டுக்காயம் இருந்தது. அவரது கை நரம்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தன. கடந்த 22-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற சரவணனை மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்று கடத்தி கொலை செய்துள்ளனர்.
பின்னர் பெரிய கல்லை கட்டி உடலை குவாரியில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சரவணனை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை.
சரவணனுக்கு நண்பர்கள் அதிகம். வீட்டை விட்டு வெளியில் சென்ற அவர் எங்கு சென்றார்? கொலையாளிகளிடம் சிக்கியது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. கடந்த 22-ந்தேதி காணாமல்போன அன்று சரவணன் கடைசியாக யார்-யாரிடம் பேசியுள்ளார் என்பது பற்றிய பட்டியலை போலீசார் சேகரித்துள்ளனர். அதனை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காதல் தகராறில் கொலை நடந்ததா? நண்பர்களோடு ஏற்பட்ட பிரச்சினையில் சரவணன் தீர்த்துக்கட்டப்பட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது இதுதொடர்பாக சரவணன் படித்துவந்த என்ஜினீயரிங் கல்லூரியில் விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சரவணன் கொலை செய்யப்பட்டிருக்கும் விதத்தை பார்க்கும்போது, கொலையாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.
இதன்மூலம் கூலிப்படையினர் சரவணனை கடத்திச் சென்று கொலை செய்து கை, கால்களை கட்டி கல்குவாரியில் வீசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவர் சரவணனின் உடலை மீட்ட காயர் போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இன்று உடல் பிரேத பரிசோதனை செய்யப்ப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
மாயமாகி 7 நாட்களுக்கு பின்னர் சரவணன் உடல் மீட்கப்பட்டதால் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டது. அவரது போட்டோ மற்றும் பெற்றோர் கூறிய அடையாளத்தை வைத்தே சரவணனின் உடல் அடையாளம் காணப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்