என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gulam Nabi Azad"
- பிரதமர் மோடி, அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டு.
- தேவைப்பட்டால் பகலில் சந்திப்பேன். ஏன் இரவில் சந்திக்க வேண்டும்? என பரூப் அப்துல்லா பதிலடி.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தெரிவித்துள்ள குலாம் நபி ஆசாத், கட்சி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் தலைவரான பரூக் அப்துல்லா இரவு நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித் ஷாவை ரகசியமாக சந்தித்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதற்கு பரூக் அப்துல்லா பதில் அளித்துள்ளார். குலாம் நபி ஆசாத் குற்றச்சாட்டுக்கு பரூக் அப்துல்லா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
நான் பிரதமர் மோடி அல்லது உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க வேண்டும் என்றால், பகல் நேரத்தில் அவர்களை சந்திப்பேன். நான் அவர்களை ஏன் இரவு நேரத்தில் சந்திக்க வேண்டும். பரூப் அப்துல்லா பற்றி அவதூறாக நினைப்பது என்ன காரணம்?. யாரும் அவருக்கு மாநிலங்களை சீட் வழங்காதபோது, நான் அவருக்கு மாநிலங்களை சீட் கொடுத்தேன். ஆனால் இன்று அவர் இதையெல்லாம் பேசுகிறார்.
அவர்கள் எனது இமேஜை கேவலப்படுத்தவும், ஒவ்வொரு விஷயத்திலும் எனது பெயரை இழுக்கவும் விரும்புகிறார்கள். பிரதமர் மற்றும் மத்திய உள்துறை மந்திரி வீட்டில் அமர்ந்திருக்கும் தங்களது முகவர்களின் பெயர்களை அவர் வெளியிட வேண்டும். அவர் மக்களுக்கு உண்மையைப் புரியும்படி சொல்ல வேண்டும்" என்றார்.
அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர்.
பின்னா குலாம் நபி ஆசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தோம். அவர் ஐசியு வார்டில் உள்ளார். அவரது உடல்நிலையில் இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குடும்பத்தினருக்கு திருப்தி அளித்துள்ளது. அவர் சில தினங்களில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று நம்புவோம். இதற்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.
இவ்வாறுஅவர் கூறினார். #KarunanidhiUnwell #KauveryHospital #GhulamNabiAzad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்