search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gundam Chariot Festival"

    • குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.
    • சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    ஈரோடு:

    ஈரோட்டில் பிரசித்தி பெற்ற கருங்கல்பாளையம் சின்னமாரியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

    இதனைத்தொடர்ந்து கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் மற்றும் தேர் திருவிழா இன்று நடைபெற்றது.

    குண்டம் விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து குண்டத்துக்கு தேவையான விறகுகளை மாரியம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து நேற்று இரவு குண்டம் பற்றவைக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலின் தலைமை பூசாரி பிரகாஷ் அம்மனை வழிபட்டு முதலில் குண்டம் இறங்க அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து இன்று தேர் வடம் பிடித்து இழுத்தலும், கோவில் கரகம் நிகழ்ச்சியும் நடந்தது. நாளை பொங்கல் மற்றும் மாவிளக்கு எடுத்தலும், அதனை தொடர்ந்து கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    குண்டம் மற்றும் தேர் திருவிழாவை முன்னிட்டு சின்ன மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • மாலை தேர் திருவிழா நடைபெறுகிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று இரவு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து கடந்த 9-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும், கொடி ஏற்ற நிகழ்ச்சியும் நடந்தது. 10-ந் தேதி மலர் அலங்காரமும், 11-ந் தேதி சந்தனக்காப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    பின்னர் 12-ந் தேதி பெண்கள் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், சுவாமி பரிவாரங்கள் உடன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. காலை 6 மணி அளவில் குண்டம் விழா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை தேர் திருவிழா நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை பூத வாகன காட்சியும், 15-ந் தேதி மலர் பல்லக்கு நிகழ்ச்சியும், 16-ந் தேதி குதிரை வாகனத்தில் தெப்பத்தேர் மஞ்சள் நீர் உற்சவம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 17-ந் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது.

    • இன்று இரவு பாரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது.
    • நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் பண்டிகை நிறைவடைகிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பண்டிகை கடந்த மாதம் 16-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், தேர் இழுக்கும் நிகழ்வை தொடர்ந்து 4 நாட்கள் தேர் முக்கிய விதிகள் வழியாக வலம் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து நேற்று மாலை தேர் நிலையை வந்து அடைந்தது.

    இதனை தொடர்ந்து இன்று இரவு பாரிவேட்டை விமர்சையாக நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து நாளை மஞ்சள் நீராட்டுதலுடன் பண்டிகை நிறைவடைகிறது.

    இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    • குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை தொடங்குகிறது.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் விமரிசையாக குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டு குண்டம் தேர் திருவிழா பூச்சாட்டுதலுடன் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது. தொடர்ந்து 22-ந் தேதி மகிஷாசூர மர்தனமும், 28-ந் தேதி கிராமசாந்தியும், 29-ந் தேதி காலை 11 மணிக்கு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினத்தில் இருந்து தினமும் அம்மன் ஒவ்வெரு வாகனத்திலும் வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    அதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 5-ந் தேதி குண்டம் திருவிழாவும், 7-ந் தேர் திருவிழா தொடங்கி 10-ந் தேதி வரை தேர் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்து அடையும்.

    தொடர்ந்து 11-ந் தேதி பரிவேட்டையும், 12-ந் தேதி வசந்தோற்சவத்துடன் திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    ×