search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gunder act"

    • குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.
    • இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரம் மத்திய காவல் நிலையத்துக்குட்பட்ட சுபாஷ் பள்ளி சாலை பகுதியில் சிபிகாா்த்திக் என்பவரை 2 மா்ம நபா்கள் கடந்த ஜூலை 31 ந் தேதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா்.

    இது தொடா்பாக இடுவம்பாளையத்தைச் சோ்ந்த என்.அசோக்குமாா் (19), பெரியாண்டிபாளையத்தைச் சோ்ந்த எஸ்.மோகன்குமாா் (21) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

    இந்த இருவரும் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1 ஆண்டு சிறையில் அடைக்க மாநகரக் காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டாா்.

    இதற்கான உத்தரவு நகலை சிறையில் உள்ள இருவரிடமும் காவல் துறையினா் வழங்கினா் .

    • ஏவிஎஸ் காா்டன் பகுதியில் திவாகரன் என்பவா் கடந்த ஜுன் 30 ந் தேதி நடந்து சென்றுள்ளாா்.
    • குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 42 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டி அருகே வழிப்பறி வழக்கில் கைதான 3 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இது குறித்து திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏவிஎஸ் காா்டன் பகுதியில் திவாகரன் என்பவா் கடந்த ஜுன் 30 ந் தேதி நடந்து சென்றுள்ளாா். அப்போது, அந்த வழியாக வந்த 3 போ் அவரைத் தடுத்து நிறுத்தி செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றனா்.

    இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் திவாகரன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ராயபுரத்தைச் சோ்ந்த எபின் (19), சாமுண்டிபுரத்தை சோ்ந்த தமிழ்செல்வன் (20), பவானி சாகரை சோ்ந்த விமல்குமாா் (20) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

    இந்த 3 பேரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவா்களை குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா்.

    இந்த உத்தரவுக்கான நகலை கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரிடமும் திருமுருகன்பூண்டி காவல்துறையினா் இரவு வழங்கினா். திருப்பூா் மாநகரில் நிகழாண்டு தொடா் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக 42 போ் குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×