என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Puja"

    • குருபூஜை விழாவில் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.
    • அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

    காளையார்கோவில்

    மாமன்னர் மருது பாண்டியர்களின் 221-வது குருபூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நினைவிடத்தில் ஏராளமா னோர் அஞ்சலி செலுத்தினர்.

    அஞ்சலி செலுத்த வருவோர் முளைப்பாரி எடுத்தும், பால்குடம் எடுத்தும், வேல் குத்தியும் அஞ்சலி செலுத்தினர். சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் கண்காணி க்கப்படுகின்றனர்.

    மருதுபாண்டியர் குருபூஜையையொட்டி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் நேற்று முதல் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அஞ்சலி செலுத்த வருவோர் டூவீலரில் செல்ல அனுமதி இல்லை. வாடகை வாகனத்தில் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானா மதுரை, திருப்புவனம், இளையான்குடி, காளையார் கோவில், தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    அஞ்சலி செலுத்த வருவோருக்கு ஏதுவாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. திரளானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • மருது சகோதரர்களின் குருபூஜையை முன்னிட்டு செம்பிய நாட்டு மறவர் சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது.
    • இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    மருது சகோதரர்களின் 221-வது குருபூஜை விழாவை முன்னிட்டு பரமக்குடியில் செம்பிய நாடு மறவர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் பாரதி நகரில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவில் செம்பிய நாடு மறவர் சங்கத் மாநிலத் தலைவர் சி.எம்.டி ராஜாஸ் தேவர் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். மாநில பொருளாளர் எஸ்.செந்தில்ராஜா வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    இதில் நிர்வாகிகள் பேட்டா பாய்ஸ் மனோஜ், கண்ணா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழாவும் நேற்று அதிகாலை வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது.
    • வருகிற 3-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் ஸ்ரீபுரத்தில் உள்ள சூட்டுபொத்தையடி வாரத்தில் ஸ்ரீ முத்துகிருஷண சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 109-வது குருபூஜை விழாவும் கிரிவல தேரோட்டத்திருவிழாவும் நேற்று அதிகாலை வனவிநாயகர் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் காலை 10 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.

    இதில் ஆயிரகணக்கான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    திருவிழா நாட்களின் ஒவ்வொரு நாளும் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெறுகிறது. இரவு ஸ்ரீ முத்துகிருஷ்ணா சித்திரகூடத்தில் லலிதகலா மந்திர் கலைஞர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை பெரியபுராணம் நாட்டிய நாடகம் நடைபெற்றது.

    வருகிற 3-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி கிரிவல தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தைத் தொடர்ந்து சிறப்பு அன்ன தானம் வழங்கப்படுகிறது. 4-ந் தேதி காலை 10 மணிக்கு குருபூஜை நடைபெறுகிறது. 6-ந் தேதி சூட்டு பொத்தை மலைமீது திருகார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 7-ந் தேதி குருஜெயந்தி விழாவும் நடைபெறுகிறது.

    8-ந் தேதி பவுர்ணமி கிரிவல வழிபாடும் இரவு விளக்குபூஜை வழிபாடும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது.
    • இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் சுப்ரமணிய நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி தபோவனத்தில் ஸ்ரீ ஞான அகஸ்தியர் குருபூஜை விழா நடைபெற்றது. இதனையொட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றன.

    இந்த பூஜையில் 1008 வலம்புரி மற்றும் இடம்புரி சங்குகள் வைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி ஞான அகஸ்தியருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் 1008 சங்கு வைத்து பூஜை செய்து, பக்தர்கள் தங்கள் கைகளால் சங்காபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பூஜையில் வைக்கப்பட்ட இடம்புரி சங்குகள் 900 பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

    அதேபோல் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோட்டையூர் பகவதி சாமிகள், பண்ணவாடி சாமிகள், சன்னியாசிகள், அகோரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஸ்ரீ நவகோடி சித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் சித்தரசு சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கண்ணப்ப நாயனாரின் 7-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. சிவபெருமானுக்கு கண் கொடுத்தவரும், மிருக சீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்த 63 நாயன்மார்களில் ஒருவருமான கண்ணப்ப நாயனாரின் குருபூஜை விழாவை முன்னிட்டு, நேற்று மாலை 5 மணிக்கு மேல் பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள் ,திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கண்ணப்பநாயனார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் புதிய காசி விஸ்வநாதர், கண்ணப்ப நாயனார் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். குருபூஜை விழாவிற்கு இருக்கூர் பட்டக்காரரும், இடும்பை இளைய நாயகருமான சோமசுந்தரம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர் கலந்து கொண்டார்.

    விழாவில் பாண்ட மங்கலம் மற்றும் பரமத்தி வேலூர் தாலுகா பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணப்ப நாயனார், புதிய காசி விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் சித்திரை மாத சதய நட்சத்திரத்தை முன்னிட்டு திருநாவுக்கரசர் குருபூஜை விழா நடைபெற்றது. விழாவின் நிகழ்வாக திருநாவுக்கரசர் உடன் அப்பூதியடிகள் மற்றும் சண்டிகேஸ்வர பெருமான் மற்றும் அனைத்து மும்மூர்த்திகளுக்கும் பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் ,பஞ்சாமிர்தம், விபூதி, தேன் ,கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது .பின்னர் சிறப்பு அலங்காரத்தில் , அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உடன் அப்பூதியடிகள் மற்றும் சண்டிகேஸ்வர பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள திரளான சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும், அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருஞானசம்பந்தர் மடாலயத்தை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதலுடன் வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.
    • திருஞானசம்பந்தர் உடனே நால்வர் பெருமக்களுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் - பரமத்தி வேலூர் பேட்டை திருஞானசம்பந்தர் மடாலயத்தில் நேற்று திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தேவாரம் மற்றும் திருவாசகம் ஓதலுடன் வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருஞானசம்பந்தர் சுவாமிக்கு குருபூஜை நடைபெற்றது.

    திருஞானசம்பந்தர் உடனே நால்வர் பெருமக்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மதியம் மகேஸ்வர பூஜை நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது.

    • மாணிக்கவாசகரின் சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
    • அவரது படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசக சுவாமிகள் குருபூஜையை முன்னிட்டு நடராஜசுவாமி சன்னதியில் மாணிக்கவாசகர் உருவ சிலை வைக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    பின்னர் நடராஜர், தியாகராஜசுவாமிகள், மாணிக்கவாசகருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது. தொடந்து வேதாரண்யம் மேலவீதியில் உள்ள மாணிக்கவாசக சுவாமிகள் மடத்தில் மாணிக்கவாசகர் உருவ படத்துக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடந்தது.

    இதில் யாழ்பாணம் கரணவாய் வரணி ஆதினம் மற்றும் மாணிக்கவாசக மடத்தின் தர்மகர்த்த செவ்வந்திநாத பண்டார சந்நிதி, ஆதிவார மடம் நிர்வாகி குமரேசமூர்த்தி மற்றும் கல்லூரி பேராசிரியா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனர்.

    கோயில் ஓதுவார் மூர்த்தி பரஞ்சோதி ஓதுவார் தலைமையில் தேவார திருப்பதிகம் பாடப்பட்டது. அறுசுவை அன்னதானம் அளிக்கப்பட்டது.

    • மகாலிங்கம் சித்தர் குருபூஜை பெருவிழா நடைபெற்றது
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தலையாட்டி சித்தர் ஆசிரமத்தில், மகாலிங்கம் சித்தர் சுவாமிகள் குருபூஜை பெருவிழா நடந்தது. விழாவிற்கு ஆசிரம நிர்வாகி காமராஜ் தலைமை வகித்தார். இயக்குநர்கள் நந்தேஸ்வரன், சக்திஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக திருச்சி ஓங்கார குடில் பாம்பாட்டி சித்தரின் சீடர் வேலுதேவர் கலந்துகொண்டு யாக வேள்வியை தொடங்கி வைத்தார். கோமாதா பூஜை , 210 மகா சித்தர்கள் யாகமும், தொடர்ந்து அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் வஸ்திரதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தவயோகி மருதவேல் தேவர், எல்ஐசி முகவர் அசோகன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் குருபூஜை நடந்தது.
    • அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப் பட்டது.

    மதுரை

    மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத் துக்கோன் குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுரு–வப்படத்திற்கு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் சோழ–வந்தான் சட்டமன்ற உறுப்பி–னர்கள் வெங்கடேசன், அவைத் தலைவர் பாலசுப்பி–ரமணியம், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், அழகுபாண்டி, பகுதி செய–லாளர்கள் சசிகுமார், ராம–மூர்த்தி, செயற்குழு பூமிநா–தன், மேற்கு ஒன்றிய சேர்மன் வீரராகவன்,

    பேரூர் தலைவர் ரேணுகா ஈஸ்வரி, கவுன்சி லர்கள் ரோகினி பொம்மை தேவன், செல்வகணபதி, பாபு, இளைஞரணி அழகு பாண்டி, வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குருபூஜை விழா 37-ம் ஆண்டாக இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்றது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம்,வெங்கல் அணைக்கட்டு திருவிழா எனப்படும் மும் முனிவர் குருபூஜை விழா 37-ம் ஆண்டாக இன்றுடன் மூன்று நாட்களாக நடைபெற்றது.

    இதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை கணபதி பூஜையுடன் மூன்று நாள் திருவிழா துவங்கியது. எனவே, ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ செண்பகா தேவி அம்மன், ஸ்ரீ ஜெய் ஆஞ்சநேயர், மும்முனிவர் சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சனிக்கிழமை மாலை வெங்கல் மும்முனிவர் திருக்குற்றாலம் மெளன குரு சுவாமி படம் மற்றும் செண்பகாதேவி அம்மன் உற்சவர் ஆகியவற்றின் ஊர்வலம் அம்மணம்பாக்கம் கூட்டுச்சாலையில் இருந்து புறப்பட்டு அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. இன்று காலை அம்மணம்பாக்கம் அணைகட்டு ஸ்ரீ நவசக்தி விநாயகர், ஸ்ரீ வெங்கல் மும்முனிவர் திருக்குற்றால மௌன குரு சுவாமிகள் மற்றும் ஸ்ரீசெண்பகா தேவி அம்மன் உள்ளிட்டவைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பின்னர் உற்சவர் ஸ்ரீசெண்பகாதேவி அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அருட்பிரசாதமாக திருமாங்கல்யகயிறு, மஞ்சள், குங்குமம், விபூதி உள்ளிட்டவை வழங்கப்பட்டது. கோவிலுக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில், சுற்று வட்டாரத்தைச்சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் இக்கோவிலுக்கு

    வந்து தரிசனம் செய்தனர். இந்த அணைக்கட்டு திருவிழா துவங்கியபின் தான் பெரியபாளையம் ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோவிலின் ஆடித்திருவிழா துவங்கியதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழு தலைவர் எம்.கணேசன், செயலாளர் டி.ஆர்.நந்தகோபால், பொருளாளர் டி.கணேசன், கௌரவத் தலைவர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் விழா குழுவினர்கள் பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை விழா நடந்தது.
    • கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி சுவாதி நட்சத்திரத்தன்று சுந்தரர் குரு பூஜை சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று ஆடி சுவாதியை முன்னிட்டு இரவு சுந்தரர் குரு பூஜை விழா நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சுந்தர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் கோவில் உட்பிரகாரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுந்தரரை வழிப்பட்டனர்.

    ×