search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru transfer"

    • குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.26 மணிக்கு பெயர்ச்சி ஆனார்.
    • நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    கடலூர்:

    குரு பகவான் மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.26 மணிக்கு பெயர்ச்சி ஆனார். இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று இரவு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநாதேஸ்வரர் கோவி லில் நேற்றிரவு குருவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றன. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    இதேபோல நெல்லிக் குப்பம் பூலோகநாதர் கோவில், வரசித்தி விநா யகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை காண்பிக் கப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் விளக்கேற்றி குருவுக்கு மஞ்சள் ஆடை மற்றும் கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபட்டனர்.

    மேலும் குரு பெயர்ச்சி ஆவதால் பல்வேறு ராசிக் காரர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    • நவக்கிரக ஹோம யாகம், 27 நட்சத்திர பரிகார யாகம் ஆகிய சிறப்பு மகா யாக பூஜைகள் நடைபெறுகிறது.
    • விழா ஏற்பாடுகளை குரு பெயர்ச்சி வார வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.

    காங்கயம்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவிலில் குரு பகவான் மீனம் ராசியில் இருந்து மேஷம் ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு குரு பெயர்ச்சி மகா யாக பூஜை விழா நாளை 23- ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    விழாவை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு மங்கள இசை விநாயகர் வழிபாட்டுடன் விழா தொடங்கப்பட்டு நாட்டில் நல்ல மழை பெய்ய வேண்டியும், பொதுமக்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் பல்லாண்டு வாழ வேண்டியும், விவசாயம், தொழில், உத்தியோகம், செல்வம் அபிவிருத்தி பெற வேண்டியும், திருமண தடை நீங்கவும், குழந்தை இல்லா தம்பதிகள் விரைவில் குழந்தை பாக்கியம் பெற வேண்டியும் சங்கல்பம் யாகம், மேதா தட்சிணாமூர்த்தி யாகம், நவக்கிரக ஹோம யாகம், 27 நட்சத்திர பரிகார யாகம் ஆகிய சிறப்பு மகா யாக பூஜைகள் நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு தட்சிணாமூர்த்தி, குரு பகவான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் மகா தீபாராதனை பூஜை நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை குரு பெயர்ச்சி வார வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.

    ×