search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka merchant arrest"

    பெங்களூரில் இருந்து வந்த சென்னை ரெயிலில் குட்கா கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    பெரம்பூர்:

    சென்னை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாக செம்பியம் இன்ஸ்பெக்டர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்று அதிகாலை அவர் பெரம்பூர் ரெயில் நிலையத்துக்கு போலீசாருடன் விரைந்தார். அதிகாலை 4.30 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு பெங்களூர் ரெயில் வந்தது. அதில் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஒரு குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அதில் பெட்டி பெட்டியாக குட்காக்கள் இருந்தன. குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்த நேமிஸ்சந்த், சசி குமார் என்று தெரியவந்தது. அவர்கள் ஆவடியில் அறை எடுத்து தங்கி இருப்பதும் அங்குள்ள குடோன்களில் குட்காவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

    ரெயிலில் வந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆவடியில் குடோனில் இருந்த குட்காவை பறிமுதல் செய்து ஆவடி போலீசில் ஒப்படைத்தனர்.

    தாம்பரம் அருகே காரில் குட்கா-புகையிலை கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே புற வட்டச் சாலையில் நேற்று இரவு பீர்க்கன்கரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சென்னை நோக்கி வந்த காரில் சோதனை செய்தபோது அதில் 250 கிலோ குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    காரில் இருந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். வேலூரில் இருந்து குட்கா, புகையிலை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து குட்கா, புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூரில் தொடர்புடைய குட்கா வியாபாரிகள் யார்-யார்? இங்கு எந்தெந்த பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    ×