என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "gutka smuggled"
- 9 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.
- ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை
கோவை ரெயில் நிலையம் பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். 1-வது பிளாட்பாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தன்பாத்தில் இருந்து ஆலப்புழா செல்லும் ரெயில் கோவை வந்தது. உடனே போலீசார் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். ரெயில் பெட்டியில் கழிவறை அருகே ஒரு வெள்ளை மூட்டை இருந்தது. போலீசார் அந்த மூட்டை குறித்து விசாரணை நடத்தினர்.
ஆனால் ரெயிலில் இருந்த பயணிகள் அது யாருடையது என தெரியவில்லை என்றனர். சந்தேகம் அடைந்த போலீசார் அதனை சோதனை செய்தனர். அதில் 9 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் எடுத்துச் சென்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குட்காவை கடத்தி வந்தது யார்? எங்கிருந்து கடத்தி வரப்பட்டது ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- வாலிபர்கள் 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
- பெரியநாயக்கன்பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை பெரிய நாயக்கன் பாளையம் போலீசாருக்கு அந்த பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுக நயினார், ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் வீரமணி, பாலசுப்பிரமணி, கோகுலகண்ணன், தனிபிரிவு போலீஸ் கங்காதரவிஜயகுமார் ஆகியோர் பெரிய நாயக்கன் பாளையம் முழுவதும் தீவிர ரோந்து சென்றனர்.
அப்போது குப்பிச்சிபாளையம் அருகே உள்ள வளம் மீட்பு பூங்கா குப்பை கிடங்கு அருகே ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் 2 கார்கள் இருந்தது. இதனை பார்த்த போலீசார் அதன் அருகே சென்று அங்கிருந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர்.
அவர்கள் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கிருந்த காரை பரிசோதனை செய்தனர். அதில் காரில் மூட்டை மூட்டையாக ரூ. 5 லட்சம் மதிப்பிலான 544 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் பழைய சந்தை ரோட்டை சேர்ந்த முகமது யூசப் (வயது 31), தாசாம்பாளையம் பகுதியை சேர்ந்த தாஜிதின் (42), கருமமேடு தாமஸ் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதில் தாஜிதின் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 டன் குட்கா கடத்தி வந்த கும்பலில் இருந்து தப்பிய முக்கிய குற்றவாளி என்பதும், இவர்கள் குட்காவை வடநாட்டில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து மேட்டுப்பாளையம், காரமடை, பெரிய நாயக்கன் பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனைக்கு கொடுத்து வந்ததும் தெரிவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- 5 கிலோ கஞ்சாவை போலீசார் பிடித்தனர்.
- லாரியை சோதனையிட்டபோது குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது.
சூலூர்,
சூலூர் அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கோவை நோக்கி வந்த லாரி ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுப ட்ட னர். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்றை போலீசார் சோதனை யிட்டனர்.
அப்போது லாரி டிரைவர் கீழே இறங்கி ஓட முயற்சித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் டிரைவரை துரத்தி பிடித்து விசாரித்தனர். மேலும் லாரியை சோதனை யிட்டபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
விசாரணையில் டிரைவர் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக டிராவல்ஸ் நிறுவ னத்தில் டிரைவராக பணியாற்றி உள்ளார். தற்போது பணத்துக்கு ஆசைப்பட்டு அவர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஈஸ்வரவனை போலீசார் சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அவர் கடத்தி வந்த 120 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
சூலூர் அருகே பாரதிபுரத்தில் வசிப்பவர் செல்வம்.இவர் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு குட்கா சப்ளை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சூலூர் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் போலீசார் பாரதிபுரம் பகுதியில் ரகசிய சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் செல்வம் (35) குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடத்தி வந்த 100 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சூலூர் அருகே தென்ன ம்பாளையம் சாலையில் பொத்தியாம் பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சூலூர் போலீசார் சப்-இன்ஸ்பெ க்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் பொத்தியாம் பாளையம் பகுதியில் தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது ஒரு இளைஞர் இருசக்கர வாகனத்தில் வேகமாக அவ்வழியே வந்தார். அவரை நிறுத்தி சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த 5 கிலோ கஞ்சா வை போலீசார் பிடித்தனர். விசாரணையில அவர் வாக ரையாம் பாளையம் பகுதி யைச் சேர்ந்த ஸ்ரீதரன் (19) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்