search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hairstyle"

    • அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயங்களில் மணமகளின் அலங்காரமும் ஒன்று.
    • மணப்பெண்களுக்கான சிகை அலங்காரங்கள் ஏராளமாக இருக்கின்றன.

    திருமண நிகழ்வுக்கு வரும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் விஷயங்களில் மணமகளின் அலங்காரமும் ஒன்று, பளபளக்கும் ஆடைகள், ஜொலிக்கும் ஒப்பனை என்பதைத் தாண்டி மணமகளின் சிகை அலங்காரம் பலரின் பார்வைகளில் பட்டுச்செல்லும், இந்திய மணப்பெண்களுக்கான சிகை அலங்காரங்கள் ஏராளமாக இருக்கின்றன. அதில் தற்போது டிரெண்டாகும் சில ஹேர் ஸ்டைல்கள்.

     பாலேரினா பன்:

    பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த இந்த சிகை அலங்காரம், பழங்கால நினைவை தூண்டக்கூடியது. இந்த சிகை அலங்காரத்தை பொறுத்தவரை, அவரவர் கற்பனைத்திறனுக்கு ஏற்ப எந்த வகையான கொண்டையாகவும் போடலாம். அதை இயற்கையான மற்றும் செயற்கையான மலர்கள், சிறிய நகைகள் கொண்டு அலங்கரிக்கலாம். புடவை முதல் மாடர்ன் உடைகள் வரை எந்த வகையான ஆடைகளுக்கும் இந்த சிகை அலங்காரம் பொருந்தும். நீள்வட்ட முக வடிவம். பெரிய கன்னம் உள்ளவர்களுக்கு இவ்வகை அலங்காரம் பொருத்தமாக இருக்கும். இதற்கு கண்களை அழகாய் எடுத்துக் காட்டும் வகையில் மேக்கப் போடலாம்.

     சிக்னான்:

    இது 90-களில் பிரபலமாக இருந்த ஹேர் ஸ்டைல். எந்த வகையான கூந்தல் உள்ளவர்களுக்கும் பொருந்தக்கூடியது. அடிப்படையில் கொண்டை போன்று இருந்தாலும், பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாக இருக்கும். தளர்வாக இருப்பதால், நவீன தோற்றத்தை விரும்பும் பெண்களுக்கு இது ஏற்றது.

    ஆப் பைரட்ஸ்:

    குறைவான நீளமுள்ள கூந்தல் உள்ளவர்களுக்கும் பொருந்தும் வகையிலான சிகை அலங்காரம் இது. முடியின் ஆரம்பத்தில் இருந்து பாதிவரை சில பின்னல்களை போட்டு மிதமுள்ள முடியை அப்படியே விட்டுவிடலாம். இதில் மீதமுள்ள முடியை சுருள் சுருளாக மாற்றினாலும் பார்க்க அழகாக இருக்கும். ரோஜா இதழ்கள், செயற்கையான பூ மொட்டுகள், பூச்சரம் கொண்டு அலங்கரிக்கலாம். இது கூந்தலை அடர்த்தியாக காட்டும்.

     லூஸ் ஹேர்:

    மணமகள் மட்டுமின்றி அனைவரின் தேர்வாகவும் இருப்பது இந்த ஹேர் ஸ்டைல். திறந்தவெளி, கடலோர பகுதிகளில் திருமணம் நடத்த திட்டமிட்டால் கவுன் போன்ற மாடர்ன் உடைகள் அணியும்போது இந்த ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடுக்கலாம். இதில் கூந்தல் அலை அலையாக கர்லிங் ஹேர் ஸ்டைலை தேர்வு செய்யலாம். நீண்ட மற்றும் அடர்த்தியான முடி உள்ளவர்களுக்கு இந்த சிகை அலங்காரம் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த சிகை அலங்காரத்தை மேலும் அழகாய் காட்ட ஃபினிஷிங் ஸ்பிரேயை பயன்படுத்தலாம். கிளிப் பூக்கள், ஹெட் பேண்டுகள் அணிந்தால், வித்தியாசமான தோற்றம் தரும்.

     நீண்ட பின்னல்:

    பாரம்பரிய முறையில் கூந்தலை நீண்ட ஜடைபோல பின்னிக்கொள்ளும் சிகை அலங்காரம் இது, திருமண நாளன்று அழகாக தோற்றமளிக்க இந்த சிகை அலங்காரம் ஏற்றதாக இருக்கும். இதிலும் பிரெஞ்சு முதல் கிளாசிக் திரீ ஸ்ட்ராண்ட் புல் த்ரூ ஜடை டச்சு என பலவகை பின்னல்கள் உள்ளன. இவற்றை மலர்களைக் கொண்டு அலங்கரித்தால், இந்த வகை சிகை அலங்காரம் பலரது கவனத்தையும் ஈர்க்கும்.

    • மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி பகுதியிலுள்ள அரசுமேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஓழுங்கீனமாக சிகை அலங்காரம் செய்து வருவதாக பண்ருட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீஸ் டி.எஸ்.பி. ஷபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மேற்பார்வையில் பயிற்சி சப்.இன்ஸ்பெக்டர் விஜய் பள்ளி வளாகத்திற்கு இன்று நேரில்சென்று பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். பின்னர்ஒழுங்கீனமாகவும்,தாறுமாறாகவும்சிகை அலங்காரம்செய்து வந்தமாணவர்களைஅழகு சாதன நிலையத்திற்கு அழைத்துச்சென்று முடி திருத்தம் செய்துபள்ளிக்கு அனுப்பிவைத்தார். போலீசாரின் செயலை பொதுமக்கள் பாராட்டினார்.

    ஹேர்கட் செய்துகொள்வதற்கு முன்பு, உங்கள் பணி மற்றும் வயதையும் கருத்தில்கொண்டு தேர்வுசெய்வது அவசியம். எந்த மாதிரி முகத் தோற்றத்துக்கு என்ன வகையான ஹேர்கட் செட் ஆகும் என்று பார்க்கலாம்.
    ஒவ்வொரு வடிவ முகத்துக்கும் ஒவ்வொரு முடி வடிவமைப்புப் பொருத்தமாக இருக்கும். அதைக் கவனமாகத் தேர்வுசெய்வதில்தான் இருக்கிறது நமக்கான ஃபேஷன். எந்த மாதிரி முகத் தோற்றத்துக்கு என்ன வகையான ஹேர்கட் செட் ஆகும் என்று பார்க்கலாம்.

    நீள் வடிவ முகம்:

    நீள் வடிவ முகம் உடையவர்களுக்கு, தாடைப் பகுதி நீளமாக இருக்கும். இவர்கள், முடியை லூஸ்ஹேர் விடாமல், நடு வகிடு எடுத்து, முடியை இழுத்துப் பின்னலிட்டால், முகம் எடுப்பாகத் தெரியும். நீள் வடிவ முகம் உடையவர்கள், முடியை நெற்றியில் விழுவது போன்ற ஸ்டைலை முயற்சிக்க வேண்டாம். இது, உங்கள் முகத்தை மெச்சூர்டாகக் காண்பிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    முக்கோண வடிவ முகம்:

    நெற்றி பெரியதாகவும் தாடை சிறியதாகவும் உள்ளது எனில், உங்களுக்கு முக்கோண வடிவ முகம். இத்தகையவர்கள் முடியை முன்னால் வெட்டிக்கொள்வது பொருந்தாது. `யூ' கட் அல்லது `வி' கட் செய்து, ஹை பொனிடை போட்டுக்கொண்டால், டிரண்ட்லி லுக் பெறலாம்.

    நீள் வட்ட வடிவம்:

    நீள் வட்ட வடிவ முகம் உடையவர்கள் அதிர்ஷடசாலிகள் என்றே சொல்லலாம். இவர்கள் எல்லா வகையான ஹேர் கட்டையும் முயன்று பார்க்கலாம். எந்த விதமான முடி அமைப்பிலும் நீள் வடிவ முகம் அழகாக இருக்கும்.

    சதுர முகம்:

    நெற்றி, தாடை, கன்னங்கள் எல்லாமே சமமாக இருந்தால், உங்கள் முகம் சதுரவடிவ அமைப்பைக் கொண்டது. இவர்களுக்குத் தோள்பட்டை வரை முடியை வைத்துக்கொள்ளும் `யூ' கட் பொருத்தமாக இருக்கும். அல்லது ஸ்கோயர் கட் முறையை முயன்று பார்க்கலாம்.

    வட்ட முகம்:

    முன் நெற்றியையும் கன்னங்களையும் இணைக்கும் விதமாகக் காதுகளுக்குப் பின்னால் முடிவருவது போன்ற லேயர் கட் பொருத்தமாக இருக்கும். லேயர் கட்டில் 90 டிகிரி லேயர் கட், 1 டிகிரி லேயர் கட், க்ராஜூவேடட் லேயர் கட், யூனிஃபார்ம் லேயர் கட் என நிறைய வகை உள்ளன. 90 டிகிரி லேயர் கட் என்பது, நிறைய லேயர்களாக முடியை வெட்டிக்கொள்வது. முடி அதிகம் உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். 1 டிகிரி லேயர் கட் என்பது, லேயர்கள் குறைவாக உள்ளது. முடியின் அடர்த்தி குறைவாக உள்ளவர்கள் இதனைத் தேர்வுசெய்யலாம். க்ராஜூவேடட் லேயர் கட் என்பது, சில இடங்களில் லேயர்களாகவும், சில இடங்களில் நார்மலாகவும் இருக்கும் .யூனிஃபார்ம் லேயர் கட் என்பது, எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான லேயர்களாக இருக்கும். முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருப்பவர்கள் இதனை யூனிஃபார்ம் கட் தேர்வுசெய்யலாம்.
    ×