என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "handloom exhibition"
- இந்திய திருநாட்டில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவுத் தொழில் ஆகும்.
- ஆகஸ்ட் 7ம் நாள் ”தேசிய கைத்தறி தினம்” சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தேசிய கைத்தறி தினத்தினை முன்னிட்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை கலெக்டர் வினீத் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது :- இந்திய திருநாட்டில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக உள்ள தொழில் நெசவுத் தொழில் ஆகும். அத்தொழிலினை சிறப்பிக்கவும், வளர்ச்சியடையச் செய்யவும் இந்திய அரசினால் 2015 ம் ஆண்டு அறிவித்து ஆண்டுதோறும் கைத்தறி துறையினால் ஆகஸ்ட் 7ம் நாள் "தேசிய கைத்தறி தினம்" சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கைத்தறி ஆணையரால் 8-ஆவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சிகள் நடத்த அறிவுரைகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் சிறப்பு கைத்தறி கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்பட்ட மென்பட்டு சேலைகள், கோரா காட்டன் சேலைகள், கோரா சேலைகள், காட்டன் சேலைகள், பெட்ஷீட்கள், துண்டு வகைகள், மிதியடிகள் மற்றும் பட்டு அங்கவஸ்திரங்கள் போன்ற சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. 30-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை நடைபெற உள்ளது. மேற்படி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கைத்தறி ரகங்களின் விற்பனைக்கு தமிழக அரசினால் அனுமதிக்கப்படும் 20 சதவீதம் தள்ளுபடி மான்யம் வழங்கப்படுகிறது.மேலும், 7 கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.50,000 மதிப்பீட்டில் கடன் உதவிகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, திருப்பூர் சரகத்தின் கீழ் செயல்படும் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உள்ள வயதான (60 வயதிற்கு மேற்பட்ட) நெசவாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் சிறப்பு பரிசுகள் வழங்கியும், மாநில அளவில் விருது பெற்ற சிறந்த வடிவமைப்பாளர் கோயில்வழி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் வடிவேல் , சிறந்த நெசவாளர் விருது பெற்ற சுமதி, திறன்மிகு நெசவாளர் விருது பெற்ற தந்தை பெரியார் கோயில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கம் தமிழ்ச்செல்வி ஆகியோருக்கு பரிசு மற்றும் பொன்னாடைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கைத்தறித்துறை உதவி இயக்குநர் கே.வெற்றிவேல், கணபதிபாளையம் தந்தை பெரியார் கோயில்வழி கைத்தறி கூட்டுறவு சங்கங்களின் மேலாண்மை இயக்குநர் பழனிசாமி, கைத்தறி அலுவலர் பிரேமலதா மற்றும் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு கைத்தறி துறை இணைந்து நடத்தும் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி கும்பகோணத்தில் தொடங்கியது. ஜனவரி 11ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தயாரிக்கப்பட்ட கைத்தறி ஆடைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கைத்தறி துணி வகைகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கண்காட்சி மூலம் 50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். #HandloomExhibition
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்