search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hangzhou"

    • முன்னதாக சீனாவுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது
    • வங்காள தேசத்துடனான ஆட்டத்தில் முதற்பகுதி கோல் ஏதும் இல்லாமல் தொடர்ந்தது

    ஆசியாவிலுள்ள நாடுகளுக்கிடையே நடைபெறும் பல்வேறு போட்டிகளை உள்ளடக்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் (Asian Games) நாளை மறுநாள் தொடங்கி அக்டோபர் 8 வரை சீனாவில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், சீனாவின் ஹேங்ஜவ் நகரில் ஜியாவோஷான் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குரூப் ஏ (Group A) விளையாட்டுகளில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று 1-0 எனும் கோல்கணக்கில் தோற்கடித்தது.

    கடந்த செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் சீனாவிடம் இந்தியா 5-1 எனும் கோல்கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்தது. தற்போதைய வங்காள தேச போட்டியில் கிடைத்த வெற்றியின் மூலம், இந்தியா இப்போட்டி தொடரில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.

    ஆட்டத்தின் முதற்பகுதியில் இந்தியா கோல் போடுவதற்கு கிடைத்த பல நல்ல சந்தர்ப்பங்களை கோட்டை விட்டது. ஆட்டத்தின் இரண்டாவது பகுதியிலும் கிட்டத்தட்ட இதே நிலை நீடித்தது.

    ஆனால் ஆட்ட நேரத்தின் 85-வது நிமிடத்தில் வங்காள தேசத்தின் கேப்டன் ரஹ்மத் மியா ஃபவுல் ஆட்டம் ஆடியதை தொடர்ந்து இந்தியாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அப்போது இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முன்வந்து சிறப்பாக கோல் போட்டார்.

    இதன் மூலம் 1-0 எனும் கோல் கணக்கில் இந்தியா வென்று, ஆட்டத்தொடரிலிருந்து வெளியேறாமல் தனது நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.

    ×