search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Harrasement"

    கோவை பீளமேடு மகளிர் விடுதியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக புகார் கூறப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன் நெல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். #Coimbatore #HostelOwner
    கோவை:

    கோவை பீளமேட்டில் உள்ள மகளிர் விடுதியில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் விடுதி உரிமையாளர் ஜெகநாதனை (48) போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

    2 வருடங்களாக இயங்கி வரும் இந்த விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன், விடுதியில் தங்கிய மாணவிகள், இளம்பெண்களை தனது வலையில் வீழ்த்த பல்வேறு வகைகளில் முயற்சி செய்ததாக புகார் எழுந்துள்ளது. கணவரை பிரிந்து வாழும் வார்டன் புனிதா (வயது 32), விடுதியில் தங்கியிருந்த மாணவிகளிடம் கனிவாக பேசி வலை விரித்துள்ளார். 

    இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஜெகநாதன் மற்றும் புனிதாவை போலீசார் தேடி வந்தனர். இருவரும் செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகினர். அவர்களை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.



    இந்த நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த தனியார் ஜெகநாதன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெல்லை ஆலங்குளம் அருகே கிணற்றில் இருந்து ஜெகநாதன் உடலை போலீசார் மீட்டனர். ஜெகநாதன் உயிரிழப்பு, தற்கொலையா? கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே நேற்று முன்தினமே விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலானோர் விடுதியை காலி செய்து வேறு விடுதிகளுக்கு சென்றுவிட்டனர். மும்பை, டெல்லி உள்பட வெளி மாநிலங்களை சேர்ந்த ஒரு சிலர் மட்டும் உள்ளனர். அவர்களும் விரைவில் வேறு விடுதிக்கு செல்லவிருகின்றனர். #Coimbatore #HostelOwner

    ஊட்டியில் இன்று நடைபெற இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. போலீசார் கைதுக்கு பயந்து திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. #MahaAkshay #MithunChakraborty
    ஊட்டியில் இன்று நடைபெற இருந்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. மணமகன் தலைமறைவாகி விட்டார்.

    பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது மகன் மஹா அக்‌ஷய். இவர் மும்பையை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி இருக்கிறார். அவரை மிதுன் சக்கரவர்த்தி குடும்பத்தினர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் அப்பெண் குடும்பத்தினர் டெல்லி சென்று குடியேறி விட்டனர். இந்த நிலையில் டெல்லி சென்றும் அந்த பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த பெண் டெல்லி போலீசில் புகார் செய்து இருந்தார். அதனைத் தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி மகனை போலீசார் தேடி வந்தனர்.



    மிதுன் சக்கரவர்த்தி மகன் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மும்பை கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    எப்படியும் முன் ஜாமீன் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் மிதுன் சக்கரவர்த்தி மகன் மஹா அக்‌ஷய்க்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஊட்டியில் இன்று இந்த திருமணம் நடைபெறுவதாக இருந்தது. மிதுன் சக்கரவர்த்திக்கு ஊட்டியில் பங்களா மற்றும் தோட்டங்கள் உள்ளது. இதனால் இங்கு வைத்து திருமணத்தை ரகசியமாக நடத்த திட்டமிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மிதுன் சக்கரவர்த்தி மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நீங்கள் டெல்லி நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

    இதனால் கைது செய்யப்படுவோம் என நினைத்த மஹா அக்‌ஷய் தலைமறைவாகி விட்டார். அவருக்கு இன்று ஊட்டியில் நடைபெற இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டது. #MahaAkshay #MithunChakraborty

    நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #MahaAkshay #MithunChakraborty
    முன்னாள் பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.

    இவரது மகன் மஹா அக்‌ஷய். இவரும் நடிகர் ஆவார். இந்தி மற்றும் போஜ்புரி மொழி படங்களில் நடிக்கிறார்.

    இந்த நிலையில் மஹா அக்‌ஷய் மீது மும்பையை சேர்ந்த போஜ்பூரி நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    திருமணம் செய்வதாக கூறி மஹா அக்‌ஷய் என்னை கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் நான் கர்ப்பம் ஆனேன். இதை தொடர்ந்து மாத்திரைகள் கொடுத்து கருவை கலைக்க வற்புறுத்தினார். இதை அறிந்த மஹா அக்‌ஷயின் தாயாரும், முன்னாள் நடிகையுமான யோசிதா பாபி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.



    இந்த மனுவை டெல்லி தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரட் ஏக்தா கவுபா விசாரித்தார்.

    இதுதொடர்பாக நடிகர் மஹா அக்‌ஷய், அவரது தாயார் யோசிதா பாலி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். #MahaAkshay #MithunChakraborty

    நடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பெண் நீதிபதியை நியமிக்க கோரிய நடிகை தரப்பின் கோரிக்கையை, கேரள கோர்ட் நிராகரித்தது. #ActressAbductionCase #Dileep
    கேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையை கடத்தி சென்றதாக பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று எர்ணாகுளம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைத்து பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

    இதனை எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஏற்க மறுத்தார்.

    இதையடுத்து திலீப் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என பட்டியலிட்டு கோர்ட்டில் மனு செய்யும் படியும், அதனை பரிசீலித்து கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.



    இது போல நடிகை கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் தர வேண்டும் என்று நடிகர் திலீப் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதுகுறித்து நீதிபதி கூறும் போது, குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் அவர்களின் வக்கீல் கோர்ட்டு அறையில் வீடியோ ஆதாரங்களை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

    தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ActressAbductionCase #Dileep

    நடிகை கடத்தப்பட்ட வழக்கில் சிறை சென்று திரும்பிய திலீப், வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற்றார். #ActressAbductionCase #Dileep
    பிரபல மலையாள நடிகர் திலீப். கடந்த ஆண்டு நடிகை ஒருவரை கடத்திய வழக்கில் சிறை சென்றார். 83 நாட்கள் சிறைவாசத்துக்கு பின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்ற அனுமதியுடன் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

    கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்த திலீப், அதில் அடுத்து தான் நடிக்கவிருக்கும் `புரபசர் டிங்கன்' படத்துக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறும், சில நிபந்தனைகளை தளர்த்துமாறும் கோரிக்கை விடுத்து இருந்தார்.

    அந்த மனு விசாரணையில் இருக்கும்போதே நேற்று திடீர் என்று வாபஸ் வாங்கிவிட்டார். அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்பதால் மனுவை திரும்ப பெற்றுவிட்டதாக திலீப்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #ActressAbductionCase #Dileep
    ×