search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hawala money smuggling"

    கேரளாவில் தனது ஆடைக்குள் ரூ. 14 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தியவரை போலீசர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல் மண்ணா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் லால் இன்று காலை விருந்து மண்ணா பஸ் நிறுத்தம் பகுதியில் ரோந்து சென்றார்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.

    இதனை தொடர்ந்து அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் தனது ஆடைக்குள் ரூ. 14 லட்சத்தை மறைத்து வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    விசாரணையில் அவர் கோடூர் பகுதியை சேர்ந்த சைனுதீன் (47) என்பது தெரிய தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    சைனுதீன் வைத்திருந்தது ஹவாலா பணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மலப்புரத்தை சேர்ந்த ரசீது என்பவர் தன்னிடம் கொடுத்து பாலக்காட்டில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரிடம் கொடுக்கும் படி கூறியதாக கைதான சைனுதீன் தெரிவித்தார். அவரிடமிருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. #tamilnews
    கேரள மாநிலம் பாலக்காடு ரெயில்வே சந்திப்பில் போலீசார் நடத்திய சோதனையில் கோவையில் இருந்து சென்ற ரெயிலில் ரூ.69 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைதானார்கள்.
    கோவை:

    கேரள மாநிலம் பாலக்காடு ரெயில்வே சந்திப்பில் ரெயில்வே போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகள், பாலக்காடு ரெயில்வே போலீசார் கூட்டாக சோதனை நடத்தினர்.

    அப்போது கோவையில் இருந்து தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. இதில் இருந்து இறங்கிய 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

    இதனையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கத்தை கத்தையாக ரூ.69 லட்சம் பணம் இருந்தது. உரிய ஆவணங்கள் இன்றி பணம் கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சசிகாந்த் (வயது 22), தியானேஸ் (19) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் கூறும்போது, வாணியம்பாடியில் இருந்து திருச்சூருக்கு இந்த ஹவாலா பணத்தை கடத்தி வந்ததாக கூறினர். இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
    ×