search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Head Coach of Indian Cricket Team"

    • விராட் கோலியுடன் நான் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன்.
    • பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியுடன் சில மெசேஜ்களை பகிர்ந்து கொண்டேன்.

    இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத வகையில் டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.

    ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக கூட நியமிக்கபடாமல் இருப்பது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதே போன்று ருதுராஜ், அபிஷேக் சர்மா ஆகியோரும் இலங்கை தொடரில் இடம் பெறவில்லை.

    இப்படி இருக்க அடிக்கடி கம்பீருடன் சண்டை போடும் விராட் கோலியின் நிலைமை என்னனாகுமோ என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில், ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு தாமும் விராட் கோலியும் எதிரிகள் அல்ல என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தலைப்புச் செய்தி தரும் வகையில் என்னால் பேச முடியாது. கோலிக்கும் எனக்குமான உறவு, எங்கள் இருவருக்கும் இடையேயானது. களத்தில் நாங்கள் ஒரே பகுதியில் இருக்க வேண்டும். விராட் கோலியுடன் நான் நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறேன். பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் விராட் கோலியுடன் சில மெசேஜ்களை பகிர்ந்து கொண்டேன். ஆனால் பயிற்சியாளராக வருவதற்கு முன்பாக அல்லது பின்பாக நாங்கள் என்ன விவாதித்தோம் என்பது முக்கியமல்ல.

    அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். நாங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்வோம் என்று நம்புகிறேன். ஒன்றாக சேர்ந்து நன்றாக செயல்பட்டு வெற்றியை பெற்றுக் கொடுத்து நாட்டை பெருமைப்பட வைப்பதே எங்களுடைய வேலை. நாங்கள் கோடிக்கணக்கான மக்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறோம். எனவே நாங்கள் ஒன்றாக ஒரே பக்கத்தில் நின்று செயல்படுவது அவசியம்.

    இவ்வாறு கம்பீர் கூறினார்.

    ×