search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "head office"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூகவலை தளங்களில் வெளியிட்டு வந்தார்.

    சென்னை:

    செங்கல்பட்டைச் சேர்ந்தவர் ரித்திக். இவர் ஜார்ஜியா நாட்டில் எம்.பி.பி.எஸ். படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களோடு ஜார்ஜியாவில் தங்கி இருந்து படித்து வரும் ரித்திக் அந்நாட்டில் உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதிக்கு சென்று வீடியோ எடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

    சில நேரங்களில் ரித்திக் தனியாக சென்று வீடியோ எடுத்து அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரித்திக் வழக்கம் போல காட்டுக்குள் சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மாணவன் ரித்திக் மலைப்பகுதிக்கு சென்ற இடத்தில் என்ன ஆனார்? அவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக ஜார்ஜியாவில் உள்ள ரித்திக்கின் நண்பர்கள் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரித்திக்கின் பெற்றோர் மகனின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாமல் கலங்கிப் போய் உள்ளனர்.

    இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் வந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்து முறையிட முடிவு செய்தனர்.

    இதற்காக தலைமை செயலகத்துக்கு வந்த அவர்கள் வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தங்களது மகன் மாயமாகி 4 நாட்களுக்கு மேலாகியும் அவனைப் பற்றி எந்த தகவலும் இல்லை. எனவே, தமிழக அரசு அதிகாரிகள் எங்கள் மகனை கண்டுபிடித்து கொடுக்க உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மாணவர் ரித்திக்கின் தாய் கதறி அழுதார். அவரை சமாதானப்படுத்திய அதிகாரிகள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவர் கண்ணீர் மல்க புகார் அளித்தார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவரை அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, இந்திய தூதரகம் மூலமாக ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளிடம் மாணவன் விவகாரத்தில் நடந்தது என்ன? என்பது பற்றி கேட்டுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம் என்று தெரிவித்தனர்.

    • அதிமுக அலுவலக விவகாரம் தொடர்பாக ஈபிஎஸ், ஓபிஎஸ்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ்.
    • கட்சி அலுவலகம், இரு தரப்பைச்சேர்ந்த தலைவர்கள் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு.

    சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக விவகாரம் தொடர்பாக வருவாய்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் E-2 ராயப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்திற்கு ஒரு பிரிவினர் சென்ற போது . அங்கிருந்த மற்றொரு பிரிவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் இருதரப்பினரும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டு , கற்களையும் எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர் .

    மேலும் அவர்கள் காவல்துறையினரை பணி செய்யாவிடாமல் தடுத்ததுடன் அவ்வை சண்முகம் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு தனியார் பேருந்துகள் மற்றும் கார்களை சேதப்படுத்தினர் . இது தொடர்பாக , பாசறை பாலசந்திரன் என்பவர் 13 நபர்களுடன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த போது போலீசார் அவர்களை கைது செய்து காவல்துறையினர் அவ்விடத்தில் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் .

    மேற்படி தாக்குதல் சம்பவத்தில் ஒரு தரப்பில் 24 நபர்களும் , மற்றொரு தரப்பில் 20 நபர்களும் காயமடைந்தனர்.மேலும் காவல் துறையைச்சேர்ந்த 2 நபர்களும் , மற்றும் ஒரு தனி நபர் என மொத்தம் 47 நபர்கள் காயமடைந்தனர் , காயமடைந்த நபர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை , இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை . கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் காவேரி மருத்துவனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

    இது குறித்து ராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில் , 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி வழக்கில் தொடர்புடைய 14 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

    மேலும் இச்சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெறப்பட்டு இது தொடர்பாக உரிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் .

    கட்சி அலுவலத்தின் உரிமையை கோருவது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் பொது அமைதி பாதிக்கப்பட்டதால், ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தென் சென்னை வருவாய் கோட்ட அலுவலர் அறிக்கை அளித்தார். அதன்பேரில் , வருவாய் கோட்ட அலுவலர் முதல் தகவல் அறிக்கை மற்ற ஆவணங்களை ஆராய்ந்து , சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மேலும் , உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனில் இப்பிரச்சனை தீவிர சட்டம் & ஒழுங்கு பாதிப்பையும், பொது அமைதியையும் சீர்குலைத்துவிடும் என்று கருதியதன் அடிப்படையில் கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவு செய்ய, வருகின்ற 25.07.2022 அன்று இரு தரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜர் ஆக வேண்டும் எனக் கூறி இருதரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கினார்.

    இதை தொடர்ந்து வருவாய் கோட்ட அலுவலர் பொது அமைதியை காக்கும் பொருட்டு பிரச்சனைக்குரிய கட்டிடத்தை ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பூட்டி சீல் வைத்து போதுமான பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.

    மேலும், இருதரப்பினரையும் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தேவையான உத்தரவுகளை பெறுமாறும் , மேற்படி சொத்திற்கு பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியர் அவர்களை நியமித்து , வருவாய் கோட்ட அலுவலரின் உத்தரவின்படி செயல்படப் பணித்துள்ளார் .

    மேற்படி பிரச்சனைக்குரிய அலுவலகத்தில் நடந்த சம்பவங்களைத் தொடர்ந்து, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட கட்சி அலுவலகம் மற்றும் இது தரப்பைச் சேர்ந்த தலைவர்கள் வீடுகளுக்கு தக்க காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்: வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்தார்.
    • ரிஷிவந்தியம் தனி தாலுகா உருவாக்குவது குறித்த அரசுகோப்புகளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்வசந்தம் கார்த்திகேயன்எம்.எல்.ஏ. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    ரிஷிவந்தியம் சட்டமன்றதொகுதி திருக்கோவிலூர், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று தாலுக்காவில் அடங்கி உள்ளது. எனது ரிஷிவந்தியம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த கோரிக்கையை 50 ஆண்டு காலத்திற்கு பின் கருணை உள்ளத்தோடு பரிசீலித்த முதல்வர் கடந்த சட்டமன்ற கூட்ட தொடரின்போது ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட வாணாபுரம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டமாக அறிவித்தார். இதேபோல் ரிஷிவந்தியம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பொதுமக்கள் பயனடையும் வகையில் வரும் 2023-24 நிதி ஆண்டில் ரிஷிவந்தியம் ஊராட்சியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டத்தை உருவாக்க அரசுக்கு பரிந்துரை செய்ய தொகுதி மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் உடனடியாக அரசின் கவனவத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கூறுகையில், நீண்டநாள் கோரிக்கையான ரிஷிவந்தியம் தொகுதியில் வாணாபுரம் தலைமை யிடமாககொண்டு தனி தாலுகா சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதேபோல் ரிஷிவந்தியம் ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரிஷிவந்தியத்தை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம் உருவாக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளேன். மேலும் வருகின்ற 9-ந் தேதி கள்ளக்குறிச்சிக்கு வருகை தரும் முதல்-அமைச்சரிடம் ரிஷிவந்தியம் தனி தாலுகா உருவாக்குவது குறித்த அரசுகோப்புகளை வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். எனவே வருகின்றசட்டமன்ற கூட்டதொடரில் ரிஷிவந்தியம் தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய செயலாளர் பெருமாள் மற்றும் நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

    பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
    பொள்ளாச்சி:

    மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மதியம் பொள்ளாச்சி வந்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

    அதன் பின்னர் கார் மூலம் பொள்ளாச்சி வந்தார். மாலை கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரவு 7.30 மணிக்கு பொள்ளாச்சியில் நடைபெற்ற பலூன் திருவிழாவை பார்வையிட்டார். இரவு மக்கள் நீதி மய்ய துணைத் தலைவரும், வேட்பாளர்கள் தேர்வுக் குழு தலைவருமான டாக்டர். மகேந்திரன் வீட்டில் தங்கினார்.

    இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பொள்ளாச்சி மகாலிங்க புரத்தில் கட்சியின் மேற்கு மண்டல தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் பங்கேற்று அலுவலகத்தை திறந்துவைத்தார். 11 மணிக்கு பொள்ளாச்சி-கோவை சாலையில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் பல்வேறு துறைகளில் சேவை புரிந்த 12 பேருக்கு சான்றோன் விருதை வழங்கினார்.

    டாக்டர்கள் உத்தர்ராஜ், கண்ணகி உத்தர்ராஜ் ஆகியோருக்கு மருத்துவ துறைக்காகவும், லட்சுமி டெக்டைல்ஸ் நிறுவனத்திற்கு சமூக நிறுவனத்திற்காகவும், கல்கி சுப்ரமணியத்திற்கு சமூக செயற்பாட்டிற்காகவும் விருது வழங்கப்பட்டது.

    தாகம் அமைப்பிற்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காகவும், பியூஜன் டிரஸ்ட் அமைப்புக்கு இளைஞர் சேவைக்காகவும், இயற்கை விவசாயத்திற்காக மது ராமகிருஷ்ணனுக்கும், பலவகை பயிர் விவசாயத்திற்காக ஓ.வி.ஆர். சோம சுந்தரத்திற்கும், கிராமப்புற வளர்ச்சி உதவிக்கு மணி சுந்தருக்கும், கலை மற்றும் இலக்கியத்திற்காக கவிஞர் சிற்பி பாலசுப்ர மணியத்திற்கும், விருது வழங்கப்பட்டது.

    கட்டபொம்மன் பன்னாட்டு கலைக் குழுவிற்கு பாரம்பரிய கலைகளுக்காகவும், நேயத்திற்காக சந்திர சேகர் சண்முகசுந்தரத்திற்கு, சமூக சேவைக்காக சுகுமாருக்கும் என மொத்தம் 12 பேர்களுக்கு சான்றோன் விருதை கமல்ஹாசன் வழங்கினார்.

    இந்த சான்றோன் விருது பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது. கட்சி சார்பில் வழங்கப்படும் சான்றோன் என்ற விருது முதலில் பொள்ளாச்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

    தமிழகம் முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் இந்த விருதுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படவுள்ளது.

    இன்று மதியம் 12 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். இதில் மேற்கு மண்டல அளவில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    மண்டல அளவிலான கட்சியின் முதல் கலந்துரையாடல் கூட்டமும் முதன்முதலாக பொள்ளாச்சியில்தான் நடைபெற்றது.

    இன்று மாலை பொள்ளாச்சி சிங்காநல்லூரில் தேவர் மகன் படப்பிடிப்பு எடுத்த வீட்டை கமல்ஹாசன் பார்வையிடுகிறார். அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    ஆனைமலையில் மக்கள் சந்திப்பும் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையத்தில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.

    பின்னர் இரவு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். #KamalHaasan #MakkalNeedhiMaiam

    அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் நாளை மாலை ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #ThiruvarurByElection #ADMK
    சென்னை:

    திருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் இன்று தொடங்கியது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
     
    இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற கட்சி தொண்டர்கள் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கும்படி அ.தி.மு.க., அறிவித்திருந்தது. இதனால் அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சி அலுவலகத்தில் குவிந்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் நேற்றும், இன்றும் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் ரூ.25 ஆயிரம் செலுத்தி விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்தனர்.

    உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் திருவாரூர் தொகுதி எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முகமது அஷ்ரப், கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் உள்பட பலர் மனு கொடுத்தனர். இன்று பெறப்படும் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

    இந்நிலையில், தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் நாளை மாலை அதிமுக ஆட்சிமன்ற குழு கூட்டம் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கூட்டத்தில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து பரிசீலனை நடைபெறும் என்றும், இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. #ThiruvarurByElection #ADMK
    ×