search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "health risks"

    • காஃபி குடிக்காதவர்கள் ஆறு மணி நேரம் தினமும் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம்.
    • காஃபி குடிப்பவர்கள் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் உயிரிழக்கும் அபாயம் குறைவு.

    காஃபி உடல் நலத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. காபி குடிக்காதவர்கள் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது உடல் நலத்திற்கு கேடு என்றும், காபி குடிக்கக் கூடியவர்கள் குறைந்த நேரம் உட்கார்ந்தால் அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவு என ஆய்வு ஒன்று மூலம் தெரியவந்துள்ளது. பயோமெட் சென்ட்ரல் (BioMed Central) இதழ் ஒன்று வெளியிட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரை மூலம் இது தெரியவந்துள்ளது.

    காஃபி குடிக்காத தனி நபர்கள் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தினமும் உட்கார்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டால் அவர்கள் உயிரிழக்க 60 சதவீதம் வாய்ப்புள்ளது. அதேவேளையில் காஃபி குடிக்கக்கூடியவர்கள் ஆறு மணி நேரத்திற்கு குறைவாக உட்கார்ந்து இருப்பவர்களாக இருந்தால் உயிரிழக்க வாய்ப்பு குறைவு என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் கடந்த 13 வருடம் 10 ஆயிரத்திற்கு அதிகமானோரிடம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அந்த ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.

    தினந்தோறும் ஆறு மணி நேரத்திற்கு அதிகமாக உட்கார்ந்து இருக்கக்கூடிய நபர்கள் காஃபி குடிப்பவர்களை விட காஃபி குடிக்காதவர்களுக்கு ஆபத்து அதிகம் என சீனாவில் சூசோப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரி என்று ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடித்ததாக தெரிவித்திருந்தது. காஃபி குடிப்பவர்கள் 24 சதவீதம் குறைவான உயிரிழப்பு ஆபத்தை எதிர்கொள்ளவதாக அந்த ஆய்வு தெரிவித்தது.

    உட்கார்ந்து இருக்கும் பழக்கம் உடையவர்களின் உடல்நலத்தை காஃபி மேம்படுத்துவதாக ஆய்வு மேற்கொண்டோர் தெரிவித்துள்ளனர்.

    காஃபியே குடிக்காதவர்களைவிட அதிகமாக காஃபி குடிப்பவர்களுக்கு அனைத்து வகையிலான ஆபத்தில் இருந்து 33 சதவீதம் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    காஃபியில் உள்ள வேதிப்பொருட்கள் இயற்கையில் எதிர்ப்பு சக்தி கொண்டவையாக கருதப்படுகிறது. இருப்பினும், இறப்பதற்கான ஆபத்தை குறைக்க காபி உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    மேலும், ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்திருப்பது 40 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்றும், இதய நோயால் இறக்கும் அபாயம் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் அதிகம் என்றும் ஆராய்சிக்குழு கண்டறிந்துள்ளது.

    ×