search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heavy protection"

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலியாக கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #SriLankablasts
    கன்னியாகுமரி:

    இலங்கையில் கிறிஸ்தவ ஆலயம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தது. தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கர தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர்.

    இதைத்தொடர்ந்து இலங்கையையொட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதாலும், அவர்களால் தமிழகத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற முன் எச்சரிக்கை காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நேற்று குமரி மாவட்டத்தின் கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தமிழகம் வருகையை யொட்டியும் கடல் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி இன்று குமரி கடல் பகுதியில் ‘சவுகாஜ்’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஈடுபட்டனர்.

    குமரி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் உத்தரவின்படி சப்-இன்ஸ்பெக்டர்கள் நீலமணி, நாகராஜன், சுடலைமணி மற்றும் அனில்குமார், சுப்பிரமணி ஆகியோர் அதிநவீன படகு மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கூடங்குளம் அணுமின் நிலையம் கடல் பகுதி வரை குமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் பாதுகாப்பு எல்லை உள்ளது. இதனால் கூடங்குளம் அணுமின் நிலையம் பகுதியில் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் இன்று ஈடுபட்டனர்.

    அதேப்போல குமரி மாவட்டத்தின் ஆரோக்கிய புரம் முதல் நீரோடி வரை உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து வாகனம் மூலம் ரோந்துப்பணியும் நடத்தப்பட்டது.

    இந்த பகுதியில் உள்ள 72 கிலோ மீட்டர் தூர கடல் பகுதியில் படகு மூலமும் கண்காணிப்பு நடந்தது. கடலோர பாதுகாப்பு குழும போலீசாரின் கட்டுப்பாட்டில் கன்னியாகுமரி, சின்ன முட்டம், மகாதானபுரம், தேங்காய்பட்டணம் உள்பட 11 இடங்களில் சோதனைச் சாவடிகள் உள்ளது. இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனகளும் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. நாளை காலை 10 மணி வரை இந்த கண்காணிப்பு பணி நீடிக்கும்.  #SriLankablasts

    இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #Srilankablast
    சென்னை:

    சென்னையில் நேற்று மாலையில் இருந்தே சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணிக்கிறார்கள். பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

    எழும்பூர், அண்ணாநகர், அயனாவரம், புரசைவாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    நுங்கம்பாக்கக்தில் உள்ள இலங்கை தூதரகம், ஏர்லைன்ஸ் அலுவலகம் ஆகியவற்றில் எப்போதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து இந்த இரண்டு இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் கலியன் மேற்பார்வையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    எழும்பூரில் உள்ள புத்தமட அலுவலகத்திலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #Srilankablast
    ×