என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hemorrhage"
- பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் அபாயகரமானது.
- புற்றுநோய் முதலில் அறிகுறிகளை காட்டுவது இல்லை.
உலக அளவில் புற்றுநோய் மரணங்களில் பெருங்குடல் புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மனித உடலில் பெருங்குடலானது உணவை உறுஞ்சி கழிவுப்பொருட்களை அகற்ற உதவும் உறுப்பாக உள்ளது. பொதுவாக பெருங்குடலில் புற்றுநோய் கட்டிகள் தோன்றினால் முதலில் எந்தவிதமான அறிகுறிகளும் தோன்றாது. இருந்தாலும் வலி ஏற்படும்போது கட்டாயம் மருத்துவ நிபுணரை சந்திப்பது அவசியம். இதில் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோய் மிகவும் அபாயகரமானது.
இந்த வகை புற்றுநோய் முதலில் அறிகுறிகளை காட்டுவது இல்லை. இருந்தாலும் மலக்குடலில் இருந்து ரத்தபோக்கு அல்லது மலத்தில் ரத்தம் ஏற்பட்டால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். அதேபோல் ரத்தசோகை காரணமாக சிலருக்கு மலக்குடலில் ரத்தபோக்கு இருக்காது. இவர்களுக்கு சோர்வு அல்லது வெளிர்நிறத்தில் தோலின் நிறம் மாறும்.
அதேபோல் வயிற்றில் கடுமையான வலி வருவது புற்றுநோயின் அறிகுறியாகும். வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், பலவீனம், சோர்வு, வயிற்றில் வீக்கம், எதிர்பாராத எடையிழப்பு போன்ற அறிகுறிகள் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகளாகும். பெருங்குடலில் புற்றுநோயானது பெரும்பாலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதிகமாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
உலகில் பெருங்குடல் புற்றுநோய்தான் புற்றுநோய் இறப்புகளில் 2-வது அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பாதிப்பாக உள்ளது. சிகரெட் புகைப்பது, தினமும் மது அருந்துவது, அதிக எடை, வழக்கமான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்றவைகள் இந்த புற்றுநோய் வருவதை அதிகரிக்க கூடிய காரணிகளாகும். எனவே பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க 45 வயதுக்கு பிறகு குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சியை தினமும் செய்யவேண்டும். உடலில் சரியான எடையை பராமரிக்க வேண்டும். உணவில் அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சி உண்ணுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்