என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hero Xpulse 200"
- ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது.
- இது தவிர அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இது தவிர அப்டேட் செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. புது அறிவிப்பின் படி இருசக்கர வாகனங்கள் விலை ரூ. 3 ஆயிரம் வரை அதிகரிக்க இருக்கிறது. விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் சந்தைக்கு ஏற்ப வேறுபடும்.
தொடர்ச்சியாக செலவீனங்கள் அதிகரித்து வருவது மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு காரணமாக வாகனங்களின் விலை உயர்த்தப்படுவதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்து இருக்கிறது. விலை உயர்வு தவிர வாகனங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் எக்ஸ்-பல்ஸ் 200 4V மாடலை யூரோ 5 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய இருக்கிறது. இந்த மாடலில் மேம்பட்ட ஹெட்லைட் டிசைன், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ப்ரோஜெக்டர் எல்.இ.டி. ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்ற அப்டேட்கள் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 4V மாடலின் இந்திய வேரியண்டிலும் வழங்கப்படும் என தெரிகிறது.
ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளில் 200-சிசி 4-ஸ்டிரோக், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 18 பி.ஹெச்.பி. பவர் 17 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்குகிறது. ஹீரோ மோட்டோகார்ப் ஆய்வு மையத்தின் பொறியாளர்கள் இந்த இன்ஜினை உருவாக்கியுள்ளனர்.
5-ஸ்பீடு மேனுவல் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கும் இந்த இன்ஜின் எடை 140 கிலோ என்றும் இதை கொண்டு ஆன் மற்றும் ஆஃப் ரோடிங் பயணங்களை மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது. முன்புறம் மற்றும் பின்பக்கம் நீண்ட டிராவல் சஸ்பென்ஷன்: 21-இன்ச் டையர், 190 மில்லிமீ்ட்டர் ஃபோர்க்கள், பின்புற டையர் 19 இன்ச் யூனிட் மற்றும் மோனோஷாக் 180 மில்லிமீட்டர் சஸ்பென்ஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக், ஒரு சக்கரத்தில் சிங்கிள்-சேனல் ஏ.பி.எஸ். யூனிட் வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்போக்டு வீல் கொண்டிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 டியூப் கொண்ட டயர் வழங்கப்படுகிறது. டியூப்-லெஸ் டயர்களை கொண்டு ஆஃப்-ரோடிங் செய்ய முடியாது என்பதால் இவ்வகை டயர்கள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
தரையில் இருந்து 220 மில்லிமீட்டர் கிரவுன்ட் க்ளியரன்ஸ் கொண்டிருக்கும் இந்த மோட்டார்சைக்கிளில் எல்இடி ஹெட்லேம்ப், பாதுகாப்பு வழங்கும் வின்ட்-ஷீல்டு மற்றும் நக்கிள் கார்டுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு விற்பனைக்கு வரயிருக்கும் எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவில் ஒரு லட்சம் பட்ஜெட்டில் விலை நிர்ணயம் செய்யப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அந்த வகையில் ஹீரோ எக்ஸ் பல்ஸ் 200 இந்தியாவின் விலை குறைந்த ஆன்-ஆஃப் ரோடு மோட்டார்சைக்கிளாக இருக்கும். இதேபோன்ற வசதிகளை கொண்ட ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் இந்திய விலை ரூ.1.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்