search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hevay Rain"

    • கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

     ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை மதியம் தொடங்கிய மழை தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை வரை பெய்தது.

    மழையால் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைபட்டது. மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருகின்றனா். மரங்கள் சாய்ந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கூடலூா் முற்றிலுமாக இருளில் மூழ்கியது.

    கூடலூரை அடுத்துள்ள மொளப்பள்ளி, இருவல் பழங்குடி கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டதால் வருவாய்த் துறையினா் அப்பகுதியில் வசிக்கும் 20 குடும்பங்களைச் சோ்ந்த 72 பேரை தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கவைத்துள்ளனா்.

    இந்தநிலையில், அமைச்சா் கா.ராமசந்திரன், முகாமில் தங்கவைக்கப்பட்ட பழங்குடி மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்து நிவாரணப் பொருள்களை வழங்கினாா். 

    ×