search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "high level committee"

    • ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும்.
    • தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழுவிற்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

    அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம்.

    ஒன்றிய ஆளுங்கட்சியும் பெரும்பான்மை இழந்தால்- ஆட்சி கவிழும். அது போன்ற நிகழ்வில் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற முன்னெடுப்பிற்கு மீண்டும் இடையூறு ஏற்படும் என்பதைக் கூட ஆலோசிக்காமல் "ஒரே நாடு ஒரே தேர்தல்" முயற்சி நடப்பது நடைமுறை சாத்தியமற்றது.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேசியக் கட்சிகளுக்கும்- மாநில கட்சிகளுக்கும் இடையே தேர்தல் களத்தில் சம நிலையிலான போட்டியை ஏற்படுத்தி தராது

    உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்த முயற்சிப்பது எழுத்தறிவு இன்னும் பெற வேண்டிய கிராமப்புற மக்கள் மத்தியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் விரைந்துள்ளார். #HIVBlood #PregnantWoman
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த 23 வயது பெண் எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    எனக்கு ஏற்பட்ட பாதிப்பு வேறு யாருக்கும் வரக்கூடாது. அரசு ஆஸ்பத்திரியை நம்பிச்சென்ற நான் இன்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளேன்.

    ரத்தத்தை முறையாக பரிசோதிக்காமல் எனக்கு செலுத்தி எச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியவர்கள் இதற்கு வேறு ஊசி போட்டு என்னை கொலை செய்திருக்கலாம்.

    தவறு நடந்த பிறகு என்னை சந்திக்கும் மருத்துவ துறையினர் உங்களுக்கு கூட்டு சிகிச்சை அளிக்கிறோம். இதனை பெரிதுபடுத்தாதீர்கள். அரசு வேலை மற்றும் நிவாரணம் பெற்று தருகிறோம். என்றெல்லாம் கூறுகின்றனர்.

    அவர்களது தவறான செயலால் இந்த சமுதாயம் என்ன புறந்தள்ளக்கூடாது. எனக்கு தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும்.

    மேலும் தவறுசெய்தோர் மீது நடவடிக்கை எடுக்க சாத்தூர் போலீஸ் நிலையம் மற்றும் கலெக்டர் அலுவலகம் சென்று புகார் கொடுக்க உள்ளேன். என் வாழ்க்கையை நரகத்தில் தள்ளியவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதன்பின்னர் தனது கணவருடன் சென்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் சாத்தூர் கோட்டாட்சியர் காளிமுத்து, தாசில்தார் சாந்தி ஆகியோர் இன்று காலை பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் டெல்லியில் இருப்பதால் நாங்கள் வந்தோம். அவர் வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுக்கு தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள் உரிய நிவாரணம் பெற்று கொடுக்கப்படும் என்றனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறுகையில்:-

    எங்களுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அழுது அழுது கண்ணீர் வற்றியது தான் மிச்சம். தற்போது எங்களால் வெளியே தலைகாட்ட முடியவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட ரத்தம் முறையாக பரிசோதனை செய்யப்படாதது மக்களுக்கு அரசு மருத்துவமனையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

    எங்களுக்கு அரசும் அரசியல் பிரமுகர்களும் உதவ வேண்டும் என்றார்.



    இதற்கிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர் விரைந்துள்ளார். #HIVBlood  #PregnantWoman

    பசு காவலர்கள் மற்றும் குழந்தை கடத்தல் வதந்தியை நம்பி சட்டத்தை கையில் எடுத்து கும்பலாக தாக்குதல் சம்பவங்களை கட்டுப்படுத்த, மத்திய உள்துறை மந்திரி தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. #MobLynching
    புதுடெல்லி:

    பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அப்பாவி மக்களை கடுமையாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் வடமாநிலங்களில் சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. மேலும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் குழந்தை கடத்தல் வதந்திகளை நம்பி பலர் அப்பாவிகளை அடித்துக்கொன்றுள்ளனர்.

    இதுபோன்ற வெறியாட்டத்தை அண்மையில் கடுமையாக கண்டித்த சுப்ரீம் கோர்ட்டு இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமல்ல, மிகப்பெரிய குற்றமும் ஆகும் என்று கூறி யாரும் சட்டத்தை கைகளில் எடுத்துக்கொள்ள மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது. மேலும், இதனை தடுக்க புதிய சட்டத்தை அரசு இயற்றலாம் எனவும் கருத்து தெரிவித்திருந்தது.

    சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசு குண்டர்களால் ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த வகை கும்பல்களின் அட்டகாசத்தை அடக்க புதிய சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



    இதன் முதல்கட்ட பணியாக மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு நான்கு வாரங்களில் இது தொடர்பான பரிந்துரைகளை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையிலான மூத்த மந்திரிகள் குழுவிடம் சமர்பிக்கும்.

    ராஜ்நாத் சிங் தலைமையிலான மந்திரிகள் குழு இந்த பரிந்துரைகளை பரிசீலித்து, அதில் உள்ள அம்சங்களை ஆராய்ந்து பின்னர், தங்களது பரிந்துரையை பிரதமர் மோடியிடம் சமர்பிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×