search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Himachal"

    • ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இமாச்சல பிரதேசம்:

    இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் நகர்ப்புறங்களில் உள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய வரியை அரசு அறிவித்துள்ளது.

    இந்த புதிய விதியின் கீழ், மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் மாதாந்திர கட்டணம் செலுத்த வேண்டும்.

    ஒவ்வொரு கழிவறைக்கும் ரூ. 25 கட்டணம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் சுமார் 10 லட்சம் குடியிருப்பாளர்களை பாதிக்கும் ஒரு முடிவாகும்.


    இந்த கட்டணம் ஏற்கனவே செலுத்தி வரும் கழிவுநீர் வடிகால் கட்டணத்துடன் சேர்க்கப்படும் என்றும், சேகரிக்கப்பட்ட தொகை ஜல் சக்தி துறைக்கு செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    பல நகர்ப்புற வீடுகளில் பல கழிப்பறைகள் இருப்பதால் நகர்ப்புறங்களில் இந்த வரி குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, கழிவறை கட்டுவது அவசியம் என்று அரசு ஒருபக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தது. இப்போது கழிப்பறைக்கு வரி போடப்படுகிறது. இதனால் குடும்பங்களுக்கு நிதி சுமை அதிகரிக்கிறது.

    இந்த புதிய வரி விதிப்புக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    • போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
    • 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டும் சுற்றுலா பயணிகள் தங்களின் கொண்டாட்டத்திற்காக குலு மணாலியில் குவிந்தனர்.

    இதனால், அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக, சுமார் 3 கிலோ மீட்டருக்கும் மேல் வாகனங்கள் வரிசைக்கட்டி நின்றது.

    இதேபோல், தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்திற்கு வாகனங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இதனால், லஹாவுல் மற்றும் ஸ்பிட்டி போலீசார் அங்கு ட்ரோன் மூலம் தொடர்ந்த கண்காணித்து வருகின்றனர். 

    மோசமான தட்பவெப்ப நிலையால் பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டது.
    சிம்லா:

    இமாசல பிரதேச மாநிலத்தில் கடைசி கட்ட பாராளுமன்ற தேர்தல் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மாண்டி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆஷ்ரே சர்மாவை ஆதரித்து சுந்தர்நகர் பகுதியில் அக்கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் செய்ய நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதேபோல் சிம்லா பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சாண்டிலை ஆதரித்து தியோங் என்ற இடத்திலும் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்ய இருந்தார்.

    ஆனால் மோசமான தட்பவெப்ப நிலையால் தரம்சாலா அருகே உள்ள ககல் விமான நிலையத்தில் பிரியங்கா காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து பிரியங்கா காந்தியின் இமாசல பிரதேச பயணம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

    இது குறித்து அக்கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாததால் தன்னை காண பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த மக்களிடம் பிரியங்கா காந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். எனினும் அவர் சுந்தர்நகர் பகுதிக்கு மீண்டும் வந்து பிரசாரம் செய்வார் என தெரிவித்தனர்.

    இமாசல பிரதேசத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 2 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 70-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கித்தவித்து வருகின்றனர். #HimachalRains #HeavyRainfall
    புதுடெல்லி:

    இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை மற்றும் வெள்ளத்தால் குலு மற்றும் காங்ரா உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    பீஸ் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டு உள்ளன. காங்ரா மாவட்டத்தின் லஸ்க்வாரா கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். குலு மாவட்டத்தின் பஜோரா கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.



    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தின் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    மழை மட்டுமல்லாது மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவும் சேர்ந்து மக்களை பாடாய் படுத்தி வருகிறது. மழை மற்றும் வெள்ளத்தால் மணாலி சுற்றுலாத்தலம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த பஸ் ஒன்று, நிலச்சரிவு காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த பஸ் பீஸ் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தின் போது பஸ்சில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    இந்தநிலையில் தமிழகத்தின் ஓசூர், திருவண்ணாமலை மற்றும் திருச்சி பகுதிகளில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 70-க்கும் மேற்பட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து கார் மற்றும் பஸ்களில் குலுமணாலிக்கு சுற்றுலா சென்றனர்.

    அவர்கள் தற்போது வெள்ளத்தின் பிடியில் சிக்கி தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் ஊரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    வெள்ளநீர் வடிந்து நிலைமை சீராவதற்கு இன்னும் 4 நாட்கள் ஆகும் எனவும், அதுவரை விடுதிகளிலேயே தங்கியிருக்க நேரிடும் என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. அவர்களுக்கு தேவையான உணவு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை இமாசல பிரதேச அரசு செய்து கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் 170 மி.மீ. மழை பதிவானது. சுற்றுலா பகுதியான மணாலியில் மட்டும் 121 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் பஞ்சாப், சத்தீஷ்கார், அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களிலும் பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த மாநிலங்களும் பாதிக்கப்பட்டன.  #HimachalRains #HeavyRainfall 
    இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லாவில் ஜீப் ஒன்று சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். #Shimla
    சிம்லா:

    இமாச்சல பிரதேசம் மாநிலம் சிம்லா மாவட்டத்தில் உள்ள தியுனி சாலையில் ஸ்னைல் என்ற பகுதி அருகே இன்று காலை பயணிகளுடன் வந்து கொண்டிருந்த ஜீப், எதிர்பாராத விதமாக சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிலரது உடல்நிலை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×