search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "his election promises"

    • மிசாவையே தி.மு.க பார்த்துள்ளது.
    • தி.மு.க கூட்டணியை ஆதரித்து பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    ஈரோடு:

    தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை ஈரோட்டுக்கு வந்தார்.

    ஈரோடு மாவட்ட எல்லையான விஜய மங்கலத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் சு.முத்துசாமி, அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி வெங்கடாசலம், வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், ஆகியோர் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர்.

    இதேப்போல் கலெக்டர் கிருஷ்ணனுண்ணியும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்றார்.

    பின்னர் அமைச்சர் உதயநிதி பி.பி. அக்ரஹாரத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசா ரத்துக்கு வந்த போது 50 ஆயிரம் ஓட்டுக்கு மேல் வெற்றி பெற செய்தால் மாதம் ஒரு முறை ஈரோடு வந்து மக்களை சந்திப்பேன் என்றேன்.

    சட்டசபை கூட்டத்தொடர் இருந்ததால் தாமதமாக வந்துள்ளேன். தேர்தல் வாக்குறுதியாக கூறியவற்றில் இதுவரை 90 சதவீதத்தை முதல்- அமைச்சர் நிறை வேற்றி உள்ளார்.

    இன்னும் 3 ஆண்டுகள் காலம் உள்ளதால் முழுமையாக அனைத்து வாக்குறு திகளும் நிறைவேற்றப்பட்டு மேலும் புதிய திட்டங்களையும் நிறைவேற்றுவார்.

    அ.தி.மு.க.வில் பல அணிகள் உள்ளன. அவர்களை வைத்து ஐ.பி.எல். போட்டி கூட நடத்தலாம். அவர்களால் மக்களுக்கான திட்டங்களை எப்போதும் கொண்டு வரவோ, பேசவோ முடி யாது.

    பாராளுமன்ற த்தில் அதானி பற்றி ராகுல் பேசியதால் அவரது பதவியை பறித்தனர். முன்னாள் கவர்னர் சத்ய பால்சிங் மத்திய அரசை விமர்சித்ததால் அவரது வீட்டில் வருமான வரி சோதனை நடத்தினர்.

    அதுபோல எங்களிடமும் வருமான வரி சோதனை நடத்தினர். இதற்காக அச்சப்படுவோர் நாங்கள் இல்லை. மிசாவையே தி.மு.க பார்த்துள்ளது.

    இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியை ஆதரித்தது போல் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் தி.மு.க கூட்டணியை ஆதரித்து பா.ஜ.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார் .

    இதில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் கே.இ.பிரகாஷ், மேயர் நகரத்தினம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பி.கே.பழனிச்சாமி,

    மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம், மருத்துவ அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஜியாவுதீன், ஈரோடு தெற்கு மாவட்ட ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணி,

    பெருந்துறை நகர தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், பேரூர் செயலாளர் அக்ரம் பி.எஸ்.திருமூர்த்தி, தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் எம்.தனசேகர்,

    வி.எஸ்.சங்கர், கருங்கல்பாளையம் தி.மு.க. பிரமுகர் கேபிள் செந்தில்குமார், கவுன்சிலர் கீதாஞ்சலி செந்தில்குமார், ஈரோடு மாவட்ட ஆவின் இயக்குனர் என்.ஆர்.கோவிந்தராஜர்,

    மருத்துவ அணி டாக்டர்.ஜி.யுவபால குமரன், பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    ×