என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Holy Miracle Panimata"
- பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றதது.
- திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா அலங்கார தேர் பவனி நடைபெற்றது.
கடந்த 4-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப் பட்டது. மாலை 6 மணிக்கு இரக்கத்தின் ஆண்டவர் கெபிதிறப்பு விழா நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றதது.
இரவு 10 மணிக்கு மலை யாளத்தில் திருப்பலியும் அதையடுத்து வானவேடிக்கையும் நடைபெற்றது.இரவு 12 மணிக்கு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அதிசய பனிமாதா அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடைபெற்றது.
இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபட்டனர். நேற்று 10-ம் திருவிழாவில் அதிகாலை 5.15 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடை–பெற்றது. மாலை 3 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனியும் மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர்வாதமும் நடை–பெற்று திருவிழா நிறைவு அடைந்தது. இன்று சனிக்கிழமை மாலை6.30 மணிக்கு அன்னையின் திருச்சுரூப பவனி திருபலி முதல்சனி வழிபாடுகளும் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த், பங்குதந்தை ஜெரால்டு ரவி, உதவி பங்கு தந்தை சிபு ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.