என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hospital sealed"
- ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது.
- வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவகாமி புரத்தை சேர்ந்தவர் ஜீவா (வயது 35) என்ற பெண் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவர் ஜெயராமன்(38) டிப்ளமோ பார்மசி முடித்துள்ளார். இவர்களது கிளினிக் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலையில் சிவகாமிபுரம் விலக்கில் இயங்கி வந்தது.
மருத்துவர் ஜீவா அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்லும் நேரங்களில் அவரது கணவர் ஜெயராமன் கிளினிக்கில் மருத்துவராக செயல்பட்டு வந்துள்ளார். பல நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததில் அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு அவர்கள் மற்றொரு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது குறித்து முதலமைச்சரின் தனி பிரிவிற்கு புகார் சென்றது
அதன் பேரில் தென்காசி ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பிரேமலதா, ஆலங்குளம் தாசில்தார் கிருஷ்ணவேல் ஆகியோர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜெயராமன் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து மருந்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாவூர்சத்திரம் போலீசார் அவரை கைது செய்தனர்.
மேலும் ஜெயராமன் கைது செய்யப்பட்ட நிலையில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பெயரில் ஆர்.டி.ஓ. லாவண்யா, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஜெயராமன் நடத்தி வந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.