என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "hotel owner"
- காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் சமீப காலமாக இந்தியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்தில் காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்த சீக்கியர் ஒருவருக்கு சொந்தமான கார்கள் சேதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இங்கிலாந்தில் உணவகம் நடத்தி வருபவர் ஹர்மன் சிங். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டு முன்பு 2 கார்களை நிறுத்தி வைத்து இருந்தார். இந்த கார்களை சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தினார்கள். கண்ணாடிகளும் உடைக்கப்பட்டது. மேலும் கார்களின் முன்புறத்தில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிகப்பு நிற பெயிண்டும் அடிக்கப்பட்டு இருந்தது. இந்த செயலின் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளதாக ஹர்மன் சிங் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
காலிஸ்தான் அமைப்புக்கு எதிராக சமூகவலைதளத்தில் வீடியா பதிவிட்டு வந்ததால் கடந்த 6 மாதங்களாக எனக்கு 100-க்கும் மேற்பட்ட கொலை மிரட்டல் வந்தது. 8 மாதங்களில் 4 முறை நான் தாக்கப்பட்டு உள்ளேன். எனது மனைவி மற்றும் மகளுக்கு பாலியல் தொடர்பாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர் பாக உள்ளூர் போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது குடும்பத்தினருக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து வருகிறது. போலீசார் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- ஓட்டல் உரிமையாளரை தாக்கினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.
மதுரை
மதுரை காமராஜபுரம் மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது40). இவர் முனிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு சையது இப்ராகிம் (38) என்பவர் தினமும் வந்து பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது தம்பியும் பணம் கொடுக்காமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை மணிமாறன் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ராகிம், மணிமாறனை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மணிமாறன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.
- பெனடிக்ட் அந்தோணி ராஜ் கடந்த 7-ந்தேதி தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்.
- பாளை பர்கிட் மாநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
நெல்லை:
பாளை செயின்ட்பால்ஸ் ரோட்டை சேர்ந்தவர் பெனடிக்ட் அந்தோணி ராஜ்(வயது 47). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். மேலும் ஓட்டலும் நடத்தி வந்தார்.
கடந்த 7-ந்தேதி இவர் தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்திற்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். பாளை பர்கிட் மாநகர் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் பெனடிக்ட் அந்தோணிராஜ் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாளை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நெல்லை மாவட்டம் மூலக்கரைப் பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜநாராயணன். இவர் நெல்லை சந்திப்பில் பிரபல வணிக வளாகம் மற்றும் ஓட்டல் நடத்தி வந்தார்.
- இவர் நேற்று மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.
களக்காடு:
நெல்லை மாவட்டம் மூலக்கரைப் பட்டி அருகே உள்ள கூந்தன்குளம் பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜநாராயணன். இவர் நெல்லை சந்திப்பில் பிரபல வணிக வளாகம் மற்றும் ஓட்டல் நடத்தி வந்தார்.
இவர் நேற்று மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். தகவல் அறிந்த நாங்குநேரி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து ராஜநாராயணன் உடலை மீட்டனர். மூலக்கரைப்பட்டி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திகனர். ராஜநாராயணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது.
மகனுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் ராஜநாரா யணனுக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் இதய நோய் பாதிப்பால் நெல்லையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
நேற்று மதியம் சொந்த ஊரான கூந்தன்குளத்திற்கு சென்றுவிட்டு காரில் மீண்டும் நெல்லைக்கு அவர் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது மூலக்கரைப்பட்டி அருகே கார் பின்பக்க டயர் பஞ்சராகி உள்ளது. உடனே அவரது மகனை செல்போனில் அழைத்துள்ளார். அவர் சிறிது நேரத்தில் வந்து விடுவதாக கூறி உள்ளார்.ஆனால் அதற்கு ராஜ நாராயணன் கோபம் அடைந்துள்ளார்.
ஏற்கனவே குடும்ப பிரச்சினையில் இருந்து அவர், உடல்நிலை பாதிப்பாலும் அவதிப்பட்டு வந்ததால் இந்த தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- செண்பகராமநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவர் நாங்குநேரியில் ஒட்டல் நடத்தி வருகிறார்.
- ஆத்திரம் அடைந்த சிவா, கந்தசாமியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள செண்பகராமநல்லூர், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது39). இவர் நாங்குநேரியில் ஒட்டல் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான வயல் செண்பகராமநல்லூரில் உள்ளது.
அதில் அவர் கடந்த 5 ஆண்டுகளாக பயிர் செய்யவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று கந்தசாமி தனது வயலுக்கு சென்ற போது, பக்கத்து வயலுக்கு சொந்தகாரரான காக்கைகுளத்தை சேர்ந்த சிவா என்பவர், கந்தசாமி வயலில் வேலி கற்களை பிடுங்கி எறிந்து விட்டு, உள்ளே புகுந்து, பனங்கிழங்கை நடவு செய்து கொண்டிருந்தார்.
இதைப்பார்த்த கந்தசாமி தட்டிக் கேட்டார். இதையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சிவா, கந்தசாமியை மண்வெட்டியால் சரமாரியாக தாக்கினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதனால் காயம் அடைந்த கந்தசாமி சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிவாவை தேடி வருகின்றனர்.
- கணேசனின் ஓட்டலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
- கடந்த 15-ந் தேதி கடையில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை.
நெல்லை:
நெல்லை டவுன் கீழரதவீதியை சேர்ந்தவர் கணேசன் (வயது47). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி சமீபத்தில் இறந்துவிட்டார்.
மேலும் கணேசனின் ஓட்டலில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 15-ந் தேதி கடையில் இருந்து வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை.
இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேசன் எங்கு சென்றார்?என அவரை தேடி வருகின்றனர்.
- செந்தில்குமார் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
- பாண்டி செல்வி கணவரிடம் கோபித்துக்கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்றார்
கோவை:
கோவை காந்திபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 30). இவர் நகர பஸ் நிலையம் அருகே ஓட்டல் கடை வைத்து நடத்தி வந்தார்.
இவரது மனைவி பாண்டி செல்வி (27). மது பழக்கத்துக்கு அடிமையான செந்தில்குமார் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைந்த பாண்டி செல்வி கணவரிடம் கோபித்துக்கொண்டு அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த செந்தில்குமார் மனைவி கோபித்து சென்றதால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்கு திரும்பிய பாண்டி செல்வி கணவர் தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த தகவல் கிடைத்ததும் ரத்தினபுரி போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செந்தில்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள ராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் ராம்குமார் (48). லோடுமேன். சம்பவத்தன்று இவர் திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து மதுவுடன் ஆசிட்டை கலந்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ராம்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராம்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வெரைட்டிஹால் ேராடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நெய்வேலியில் ஓட்டல் உரிமையாளரிடம் 3 பவுன் நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
- நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நெய்வேலி பிளாக் 29 சேர்ந்தவர் வெங்கடேசன். (வயது 40). இவர் அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஓட்டலில் மூடி விட்டு வெளியில் படுத்து தூங்கினார். பின்னர் எழுந்து பார்க்கும் போது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாசரேத்:
நாசரேத்- வகுத்தான் குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜா மகன் சிவக்குமார் (வயது30) இவர் நாசரேத் மர்காஷிஸ் மெயின் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத் தன்று இரவு இவரது கடைக்கு செம்பூரை சேர்ந்த குணசேகரன் மகன் விக்னேஷ் (31), தங்கராஜ் மகன் பாலமுருகன் (29) ஆகிய 2 பேர் சென்று சிவக்குமாரிடம் கடனுக்கு 5 புரோட்டா கேட்டுள்ளனர். ஆனால் அவர் புரோட்டா தீர்ந்துவிட்டது என கூறியுள்ளார்.
இதையடுத்து ஆத்திரமடைந்த விக்னேஷ், பாலமுருகன் ஆகியோர் சிவக்குமாரை அவதூறாக பேசியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிவக்குமார் நாசரேத் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப் - இன்ஸ்பெக்டர் தயாளந்த் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி விசாரணை நடத்தி விக்னேஷ், பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்தார்.
பண்ருட்டி அடுத்த அம்மாபேட்டை மெயின்ரோட்டை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 55). இவரது மகன் பிரகதீஸ்வரன்(20). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகின்றார். நேற்று மாலை 4 மணியளவில் பிரகதீஸ்வரன் ஒட்டலில் இருக்கும் போது நத்தம் கிராமத்தை சேர்ந்த திருவேங்கடம்(42) என்பவர் பிரகதீஸ்வரினிடம் டிபன் கேட்டார். அதற்கு டிபன் இல்லை என அவர் கூறினார்.
இதன் காரணமாக திருவேங்கடம் பிரகதீஸ்வரனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த பிரகதீஸ்வரன் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் அருணாசலம் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து திருவேங்கடத்தை கைது செய்தனர். #tamilnews
சுங்குவார்சத்திரம் அடுத்த பாப்பான்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (47). இவர் சந்தவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார்.
ஓட்டலில் வியாபாரம் சரியாக இல்லாததால் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். கடன் தொல்லை தாங்காமல் ராஜேஷ் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக இறந்தார். சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினார். #tamilnews
ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சி அடுத்த எழுமாத்தூர் பஸ்நிறுத்தம் பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் சந்திரசேகர் (வயது 49).
இவர் கடந்த 4 ஆண்டுகளாக இங்கு கடை வைத்து நடத்தி வந்தார்.
கடந்த சில மாதங்களாக வியாபாரம் சரியாக நடக்காமல் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த விஷத்தை (எலி மருந்து) எடுத்து சந்திரசேகர் குடித்துவிட்டார். இதனால் அவர் மயங்கி விழுந்து உயிருக்காக போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்