search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Householders"

    • 30 ஆண்டுகளாக வீட்டுமனைப்பட்டா கேட்டு மீனவர்கள் போராடி வருகின்றனர்.
    • அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள் ளனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சிந்தனை சிற்பி சிங்கார வேலர் நகர் லாஞ்சியடி பகுதியானது விசைப்படகு மீனவர்கள் வசிக்கும் கடலோர கிராம மாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் சுமார் 30 ஆண்டுகளாக வசித்து ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்ற னர்.

    இங்கிருந்து ஆழ்கடலில் பிடித்து வரும் இறால், நண்டு, கனவாய், மீன் போன்ற கடல் உணவுப் பொருட்களை கேரளா போன்ற வெளி மாநிலங்க ளுக்கு மற்றும் வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இதனால் நேரடியாகவும், மறைமுக மாகவும் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

    இங்கு உள்ள விசைப்படகு மீனவர்களுக்கு மீன் துறை மூலமாக ஆழ்கடல் சென்று மீன் பிடிக்கும் டோக்கன் எனப்படும் அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. வாரத்தில் சனி, திங்கள், புதன் கிழமைகளில் கட லுக்கு சென்று மீன் பிடித்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் கிழமைகளில் கரை திரும்புவர். அவ்வப் போது புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் கடலுக்கு செல்ல முடிவதில்லை.

    மேலும் வருடத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன் பிடி தடைக் காலத்தில் மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதில்லை. இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் 30 ஆண்டுகளாக சாலை, குடிநீர் போன்ற எந்தவித அடிப்படை வசதியில்லா மலும், வீட்டு மனை பட்டா கூட இல்லாமலும் வாழ்ந்து வருகின்றனர்.

    இது சம்பந்தமாக அரசுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இப்பகுதி விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    வாழ்வாதாரம் கேட்டு பல ஆண்டுகள் போராடி எந்த பயனும் இல்லாததால் தமிழக முதல்வரை சந்தித்து மனு கொடுக்க திட்ட மிட்டுள்ளனர். அரசிடம் இருந்து உரிய பதில் கிடைக்கும் வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள் ளனர்.

    ×