search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hunting mob"

    • கடமானை துப்பாக்கியால் சுட்டு கொன்று வேட்டையாடியது தெரிய வந்தது.
    • வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தென் பர்கூர் காப்புக்காடு வரட்டு ப்பள்ளம் அணை பீட் சரக வனப்பகுதியில் வனச்சர அலுவலர் உத்திரசாமி தலைமையில் வனவர்கள் சக்திவேல், திருமூர்த்தி மற்றும் வனக்காப்பாளர் சதீஸ்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, வரட்டு ப்பள்ளம் அணை பகுதியில் புதர் மறைவில் மறைந்திருந்த 2 பேரை வனத்துறை குழுவினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கோவிலூரை சேர்ந்த முருகேசன் (40), எண்ணமங்கலத்தை சேர்ந்த பிரகாஷ் (44) என்பதும், இவர்கள் மற்றும் கோவிலூரை சேர்ந்த பிரபு , சடையப்பன், மந்தையை சேர்ந்த முருகேசன், விளாங்குட்டையை சேர்ந்த ராசு என 6 பேர் கொண்ட கும்பல் வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த கடமானை துப்பாக்கியால் சுட்டு கொன்று வேட்டையாடியது தெரிய வந்தது.

    மேலும் கடமானை துண்டு, துண்டாக வெட்டி 4 சாக்குகளில் கட்டி வெளியே எடுத்து வரும் போது வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர்.

    அவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரபு, சடையன், முருகேசன் மற்றும் ராசு ஆகிய 4 பேரும் வனப்பகுதி யில் சுட்டு கொன்ற கடமானின் கறி ,4 சாக்குகள் , துப்பாக்கி ஆகியவற்றை எடுத்து கொண்டு தப்பி மறைந்திருந்தனர்.

    இதில் வனத்துறையினரை கண்டு 2 பேர் தப்பி ஓடி விட்டதும், மற்ற 2 பேர் வனத்துறையினரிடம் சிக்கி கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனையடுத்து, முருகேசன் மற்றும் பிரகாஷ் ஆகியோரை கைது செய்த வனத்துறையினர் உயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரை கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடிவருகிறார்கள்.

    ×