என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Hyundai N"
- ஹூண்டாய் நிறுவனம் விரைவில் புது N பிராண்டு மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த மாடல்களுக்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் நிறுவனம் ஜூலை 15, 2022 அன்று N தினத்தை கொண்டாட இருக்கிறது. இந்த நாளில் மூன்று புதிய N மாடல்களை அறிமுகம் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. முன்னதாக மூன்று N மாடல்களுக்கான டீசர்களை ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டு இருந்தது.
டீசர்களின் படி முதல் கார் லோ-ஸ்லங் ஸ்போர்ட்ஸ் கூப் மாடலாகவும், மற்றொரு மாடல் எலெக்ட்ரிக் வாகன ரேசிங் மாடலாகவும் மூன்றாவது மாடல் ஐயோனிக் 6N என்றும் தெரியவந்துள்ளது. லோ-ஸ்லங் ஸ்போர்ட்ஸ் கார் கூப் மாடல் போன்று காட்சி அளிக்கிறது.
இரண்டாவது கார் ஐயோனிக் 5 ஆக இருக்கும் என தெரிகிறது. இந்த டீசரில் தெளிவற்ற படம் இடம்பெற்று உள்ளது. எனினும், இதில் நீள நிற N சிக்னேச்சர் மற்றும் பிளாக் அக்செண்ட்கள் மட்டும் தெரிகிறது. கடைசி டீசரில் இருப்பது மட்டும் ஐயோனிக் 6 மாடல் ஓரளவு தெளிவாக அறிய முடிகிறது. இது பற்றிய முழு விவரங்கள் ஜூலை 15 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.
- ஹூண்டாய் நிறுவனம் N பிராண்டிங்கில் புது காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த கார் கான்செப்ட் மாடலாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் N பெர்ஃபார்மன்ஸ் பிராண்டு புது மாடல்களுக்கான டீசர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன்படி புது கார் ஜூலை 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் ஒரு டீசர் தெளிவற்ற நிலையில் கார் வேகமாக செல்லும் போது எடுக்கப்பட்ட படம் இடம்பெற்று இருக்கிறது. மற்றொரு டீசரில் முழுமையாக மறைக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் படம் இடம்பெற்று உள்ளது. புது மாடல் பற்றி ஹூண்டாய் நிறுவனம் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.
எனினும், இந்த மாடல் ஹூண்டாய் மற்றும் ரிமக் நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. டீசரில் நீண்ட லோ-செட் பொனெட், முன்புறம் பம்ப்பரில் ஸ்ப்லிட்டர் வழங்கப்பட்டு இறுக்கிறது. இத்துடன் ஃபிளாட் ரூஃப், ரேக்டு ரியர் விண்ட் ஸ்கிரீன் மற்றும் பூட் லிட் மீது ஸ்பாயிலர் காணப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் ஐயோனிக் 5 மாடலின் மற்றொரு வேரியண்டை உருவாக்கி வருகிறது. இந்த மாடல் N பாரம்பரியத்தின் எதிர்காலத்தை பிரதிபலிக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த கார் அடுத்த தலைமுறை பெர்ஃபார்மன்ஸ் காராக இருக்கும் என தெரிகிறது.
மேலும் ஹூண்டாய் நிறுவனம் ப்ரி-ப்ரோடக்ஷன் ப்ரோடோடைப் மாடல்களை சர்வதேச சாலைகளில் சோதனை செய்து வருகிறது. இதன் ப்ரோடக்ஷன் வேரியண்டில் கியா EV6 மாடலில் வழங்கப்பட்டதை போன்ற பவர்டிரெயின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது டீசரில் இருக்கும் மாடல், ஹூண்டாய் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐயோனிக் 6 எலெக்ட்ரிக் காரின் N வேரியண்ட் ஆக இருக்கும் என தெரியவந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் தனது சாதாரண கார்களின் N பிராண்டு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்