search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ice lingam"

    • அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
    • அமர்நாத் பனிலிங்கத்தை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் தரிசனம் செய்துள்ளனர்

    ஸ்ரீநகர்:

    அமர்நாத்தில் உள்ள பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 29-ம் தேதியில் இருந்து பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்நிலையில், மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பால்தால் மற்றும் பஹல்காம் ஆகிய இரு வழிகளில் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கிறார்கள். இரண்டு இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டு அங்கிருந்து பக்தர்கள் பாத யாத்திரை செல்கிறார்கள்.

    வானிலை சீரடைந்தபின் யாத்திரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானோர் அமர்நாத் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை காலத்தில் பனி லிங்கத்தை தரிசித்தவர்கள் எண்ணிக்கை 2.5 லட்சத்தை கடந்தது. #Amarnathyatra
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு மாவட்டத்தில் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 3880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஜூன் 28-ம் தேதி முதல் யாத்ரிகர்கள் குழு புறப்பட்டு சென்றது.

    மழையினால் சில நாட்கள் தடைபட்ட யாத்திரை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு யாத்திரை காலத்தின் 30 நாளான இன்று 2,776 யாத்ரீகர்கள் பனி லிங்கத்தை தரிசினம் செய்தனர்.

    இவர்களுடன் சேர்த்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 996 பக்தர்கள் இதுவரை பனி லிங்கத்தை தரிசித்துள்ளதாக  அமர்நாத் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. #Amarnathyatra
    ×