search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ilayaraja"

    இசையமைப்பாளர் இளையராஜா தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை கிண்டல் அடித்து கங்கை அமரன் பதிவு செய்துள்ளார். #Ilayaraja
    இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை கல்லூரிகள் கொண்டாடி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகள் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அவரும் விழாக்களில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியும், பாடி, இசையமைத்தும், தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

    சென்னை ராணி மேரி கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்த இளையராஜா, இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று தெரிவித்ததாக செய்தி பரவியது. இது சர்ச்சையானது.



    இதற்கு இயக்குனரும் இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கைஅமரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலை பதிவிட்டார்.

    இளையராஜா தெரிவித்ததை அப்படியே பதிவிட்டுள்ள அவர் தன்னுடைய பதிவாக, ’மன்னிக்கவும், நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.



    இளையராஜா பேசியதன் முழு வீடியோ வெளியாகி அவர் அந்த பொருளில் சொல்லவில்லை என்பது தெரிய வந்தது. இதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் கங்கை அமரனின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் விமர்சனங்களை பதிவிட தொடங்கினார்கள். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘நானாவது அண்ணனை மிஞ்சுவதாவது. நானும் அண்ணனும் இப்படி அடிக்கடி கிண்டல் செய்து பேசிக்கொள்வோம். அவர் எனக்கு அண்ணன் மட்டும் இல்லை. அம்மா’ என்று கூறி இருக்கிறார். #Ilayaraja
    பொறியியல் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாடிய இளையராஜா, புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை என்று கூறியிருக்கிறார். #Ilayaraja
    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில், இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இளையராஜாவுக்கு இதுபற்றி கல்லூரி நிர்வாகத்தின் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு ஆண்டிப்பட்டி பொறியியல் கல்லூரிக்கு இளையராஜா வந்தார்.

    கல்லூரி மாணவ-மாணவிகளுடன் இளையராஜா தனது பிறந்தநாளை கொண்டாடினார். இசையின் மேன்மை பற்றியும், இசைத்துறையில் தன்னுடைய அனுபவத்தை பற்றியும் மாணவ-மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். அவர் இசையமைத்த சில பாடல்களை மாணவ-மாணவிகள் முன்பாக பாடினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ‘‘அறிவார்ந்த சிந்தனைகளால் மனிதர்களிடத்தில் வேற்றுமை இல்லை. மனிதனுடைய அனைத்து செயல்களும் இறைவன் அருளாசியுடன்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இறைவன் ஆசியுடன்தான் நான் இந்த அளவுக்கு இசையமைக்கிறேன். என் புகழை ஒருபோதும் தலைக்கு ஏற்றிக் கொள்வதில்லை.



    மாணவ-மாணவிகள் தங்கள் சக்தியை முறையாக பயன்படுத்தி, திடமான நம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’’

    இவ்வாறு இளையராஜா பேசினார்.
    பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ராயல்டி கேட்பது தவறு என்றும், தயாரிப்பாளர்களுக்கே உரிமை உள்ளது என்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார். #Ilayaraja
    கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்தவ மத நல்லிணக்க விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கோருவது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

    இளையராஜா ராயல்டி கேட்பது ஏற்புடையதல்ல. என்ஜினீயர், மேஸ்திரி, கொத்தனார், கையாள், கார்பெண்டர், பெயிண்டர், என பலரும் சேர்ந்து வீட்டை உருவாக்கினாலும் வேலை முடிந்தவுடன் அந்த வீடு உரிமையாளருக்கு சொந்தமாகும். இது எல்லா தொழிலுக்கும் பொருந்தும்.

    படம் தயாரிப்பது கடினமான தொழில், வீட்டை விற்று, நிலத்தை விற்று, அவமானங்களை சந்தித்து படங்களை தயாரிக்கிறார்கள். இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அதிக படங்கள் தோல்வி அடைந்து விடுகின்றன. அத்தனை இன்னல்களையும் சந்திக்கும் தயாரிப்பாளர்களுக்குதான் பாடல் உரிமை சென்றடைய வேண்டும்.

    படத்தில் பணிபுரியும் இயக்குனர், ஒளிப்பதிவாளர், சண்டை இயக்குனர், கலை இயக்குனர், நடிகர், நடிகைகள், எல்லோரும் சம்பளம் வாங்கி கொண்டு வேலை செய்கிறார்கள். இவர்கள் யாருமே ராயல்டி கேட்பதில்லை. அதுபோல்தான் இசையமைப்பாளரும் கேட்பது தவறு. அவருடைய வேலைக்கு என்ன சம்பளமோ அதை வாங்கி விடுகின்றனர். எனவே பாடல்களின் உரிமை தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும். தயாரிப்பாளர்கள் இந்த ராயல்டியை பெற ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்”

    இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறினார்.
    மாரி 2 பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்றது என்னால் மறக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார். #Dhanush #Maari2
    தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் தனுஷுடன் சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். பாலாஜி மோகன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தனுஷ், ‘எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மாரி. எனவே இந்த படத்தின் அடுத்த பாகத்திற்காக நான் காத்திருந்தேன். மாரி நல்லவனும் இல்லை, கெட்டவனும் இல்லை. அப்படிப்பட்ட கதாபாத்திரம். ஜாலியான என்டர்டைன்மெண்ட் படமாக இருக்கும். 

    மாரி 2 படத்தோட வெற்றிக்கு பின் பாகம் 3 பத்தி யோசிக்கணும். யுவன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இளையராஜா அவர்கள் இந்த படத்தில் பாட்டு பாடி இருக்கிறார். அது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசிர்வாதம். நான் எழுதிய வரியை பார்த்து, முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் சம்மந்தமே இல்லை என்றார். பின்னர் படித்து பார்த்து பாடி கொடுத்தார்.



    என் கிட்ட ஒரு சில வீடியோக்கள் இருக்கிறது அதை அப்புறம் பகிர்கிறேன். ஒரு குழந்தையாக, ஒரு பக்தனாக அவர் முன்னாடி நின்ற சில நேரங்கள் என்னால் மறக்கவே முடியாது’ என்றார்.
    நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கிறார் காயத்ரி. #VijaySethupathi #Gayathri
    ‘96’  படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சீதக்காதி’. இப்படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், காயத்ரி, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    இந்நிலையில், அடுத்ததாக சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியானது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இவர் இதற்குமுன் விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், ரம்மி, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது 7வது முறையாக இப்படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்.



    இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே சீனுராமசாமி, விஜய் சேதுபதி, யுவன் கூட்டணியில் ‘தர்மதுரை’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. 
    இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 நிகழ்ச்சிக்காக 2 நாள் படப்பிடிப்புக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. #Ilayaraja
    1000 திரைப்படங்களுக்கு மேலும், 5000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தும், 500-க்கும் மேற்பட்ட பாடல்களை தனது சொந்த குரலில் பாடியும் 5-முறை தேசிய விருதுகளை பெற்று திரையுலகில் இன்றும் மாபெரும் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இசையராஜா-75 என்ற பெயரில் அவரை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அளவில் பிரம்மாண்டமான இசைவிழாவை வெகு சிறப்பாக நடத்த இருக்கிறார்கள்.

    மேற்படி விழாவானது, 2019-பிப்ரவரி மாதம் 2-3ம் தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இளையராஜாவுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், இசை கலைஞர்கள் பங்கு பெற்று அவருக்கு பெருமை சேர்க்க இருக்கிறார்கள்.

    எனவே பிப்ரவரி 2-3 தேதிகளில் அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகில் சார்பாக அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டு என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.


    இசைஞானி இளையராஜா தனக்கு மூன்று முறை பெயர் மாற்றப்பட்டதாகவும், தான் ஊரில் இருந்து புறப்படும் போது பிளாட்பாரத்தில் வாசித்து பிழைப்பேன் என்று தன் அம்மாவிடம் கூறிவந்ததாகவும் தெரிவித்தார். #Ilayaraja
    எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற பராம்பரிய தினம் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது மாணவிகள் இளையராஜாவின் பாடல்களை பாடியும், ஆடியும் கலை நிகழ்ச்சிகளை அவர் முன் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இளையராஜா பதிலளித்தார்.

    மாணவிகள் கேள்விகளுக்கு இளையராஜா அளித்த பதில்களின் தொகுப்பு:-

    சென்னைக்கு நான் வரும் போது கையில் காசு கிடையாது. காசு இல்லாமல் சென்னைக்குப் போய் என்னப்பா பண்ணுவே என்று அம்மா கேட்டார். இல்லம்மா. ஏதாவது லைட் மியூசிக்கில் வாசித்து சம்பாதிப்பேன் என்றேன்.

    உடனே அதில் எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வாய் எனக் கேட்டார். பிளாட்பாரத்தில் உட்கார்ந்து வாசிப்பேன் கிடைக்கும் என்றேன்.

    கையில் எதுவுமே இல்லாமல், நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு வந்தேன். நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள்.

    முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். தன்னம்பிக்கையை மட்டும் தான் எடுத்து வந்தேன். அதே போல், நீங்களும் தன்னம்பிக்கையை விட்டுவிடக்கூடாது. எதையும் எதிர்பார்க்காதீர்கள். எது அமைகிறதோ, அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

    நான் படித்த படிப்பு என்னுடைய வாழ்க்கை மட்டுமே. இப்போது, உங்கள் முன் அமர்ந்திருக்கிறேன். நீங்கள் என் பாடல்களை பாடுகிறீர்கள். இப்படி ஒரு காலம் அமைந்துவிட்டது.



    1974-ல் சினிமாவில் உதவி இசை அமைப்பாளராக பணிபுரிந்து வந்தேன். கடவுள் நம்பிக்கையே இல்லாத நான், மூகாம்பிக்கை கோயிலுக்குள் முதல் அடி எடுத்து வைத்தேன். என் நெஞ்சில் ஒரு மின்னல் தாக்குதல். கடவுள் இல்லையென்றால் நம்முள் என்னது இது என்று எண்ணினேன். இது என்ன, என்ன என்று கோயிலைச் சுற்றி வருவதற்குள் தாய் மூகாம்பிக்கை என்னை ஆட்கொண்டுவிட்டாள்.

    என்னுடைய எந்தப் பாடலாக இருந்தாலும் செவியோடு போவது கிடையாது. உள்ளே இறங்கி நெஞ்சை தைக்கும். எனது அனைத்து பாடல்களுமே பக்திப் பாடல்கள் தான்.

    உங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்வு வந்தே தீரும். ஆகையால், மாணவிகளே சிறகடித்து பறங்கள். வானமே எல்லை.

    நீங்கள் இங்கு படிக்கும் படிப்பும், பார்க்கப்போகும் வேலைக்கும் சம்பந்தமே இருக்கப்போவதில்லை. நான் படித்த படிப்பு 8-ம் வகுப்பு. 9-ம் வகுப்பு பணம் கட்ட அம்மாவிடம் காசு இல்லை. நான் படித்த படிப்புக்கும் செய்யும் வேலைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?

    நீங்கள் கேட்பது மாதிரியான பாடல்களை நான் கேட்க முடியாது. நீங்கள் இசையை உள்வாங்குவது, நான் இசையை உள்வாங்குவது வேறு மாதிரி இருக்கும். நான் ஒரு பாடலைக் கேட்கும் போது, நமக்கு வராத ஐடியா இவனுக்கு வந்துருச்சே என்று ஆச்சர்யப்படணும்.

    அப்படி இதுவரை நடந்ததில்லை. இப்படியொரு பல்லவி நமக்கு வரவில்லையே என்று நான் ஏங்கிய பல்லவிகள் நிறைய இருக்கிறது. அவையெல்லாம் முன்னோர்களுடையது.

    வருங்கால இசை அமைப்பாளர்கள் கொடுக்கும் பாடல்களில் வி‌ஷயம் இருக்க வேண்டும். காற்றடிப்பது, புழுதி பறப்பது போல பாடல்கள் இருந்தால், அவை பாடல்களே அல்ல.



    ஒரு பாடல் என்பது உங்களை எங்கேயாவது அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால், எத்தனை ஜென்மமோ இது நமக்கு தொடர்புடையது என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும். அதுவும் இப்போது நடப்பதில்லை. அது உங்களுக்கு நடக்கவில்லை என்றால், பாடல் இல்லை என்று ஒதுக்கிவிடுங்கள்.

    எங்கள் அப்பா எனக்கு ராஜய்யா, ஞானதேசிகன் என்று இரண்டு பெயர் வைத்தார். ஞானதேசிகன் என்பதை என் ஜாதகம் பார்த்து வைத்தார். பள்ளியில் சேர்க்கும் போது சுருக்கமாக இருக்க வேண்டும் என்று ராஜய்யா என வைத்தார். சென்னைக்கு வந்தவுடன் ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் மியூசிக் கற்றுக்கொள்ளச் சென்றேன்.

    பெயர் என்ன எனக் கேட்டார். ராஜய்யா என்றவுடன், நல்லாயில்லை ராஜா என வைத்துக்கொள் என பெயரை மாற்றினார். இசை அமைப்பாளராக ஆனவுடன் என் பாடல்களுக்காக ஒரு கதையை உருவாக்கி ‘அன்னக்கிளி’ என்ற படம் எடுத்தார் பஞ்சு அருணாச்சலம்.

    அப்போது ராஜா என்று ஒருவர் இருக்கிறார். அதனால் இளையராஜா என்று வைச்சுக்கோ என்றார். அப்படித்தான் இளையராஜா என்ற பெயர் வந்தது.

    இசை தான் ஆன்மீகம். ஆன்மீகம் தான் இசை. தமிழகத்தில் பானுமதி மற்றும் எஸ்.வரலட்சுமி ஆகியோரின் குரல் தனித்துவமானது. அதைப் போலவே என் மகள் பவதாரணியின் குரல் வித்தியாசமானது.

    இவ்வாறு அவர் பேசினார். #Ilayaraja

    இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமையை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். #Ilayaraja #Royalty
    திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமையை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    என் பாடல்களை பாடுவதற்கு முன்னர், என்னிடம் முன் அனுமதி பெற்று, அதற்குரிய வி‌ஷயங்களை முறைப்படி செய்துவிட்டு, அதன் பின் பாடுவதுதான் முறையானதாகும். இல்லையென்றால் சட்டப்படி குற்றமாகும்.

    என்னிடம் முன் அனுமதி பெறாமல் பாடுகிறவர்களோ, இசை வாசிக்கிறவர்களோ அப்படிச் செய்வது தவறு என்பதை தாங்கள் உணர வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுவரை ஐ.பி.ஆர்.எஸ்.(இந்திய படைப்பு காப்புரிமைக்கான அமைப்பு) யில் உறுப்பினராக இருந்தேன். நான் இப்போது உறுப்பினராக இல்லாத காரணத்தால் இதுவரை என் சார்பாக வசூலித்துக்கொண்டிருந்த ராயல்டி தொகையை வசூலிக்கும் உரிமையை நமது தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்துக்கு வழங்கி இருக்கிறேன்.



    ஐ.பி.ஆர்.எஸ். அமைப்புக்கு பதிலாக இசைக்கலைஞர்கள் சங்கம் இந்த ராயல்டி தொகையை வசூல் செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாடகர்களும், பாடகிகளும் இதில் அடங்குவார்கள் எல்லோரும் இந்த வி‌ஷயத்தைச் சரியாக புரிந்துகொள்ளவேண்டும். நீங்கள் பாடுவதற்கு நான் தொல்லை கொடுக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர நீங்கள் பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை.

    நீங்கள் இலவசமாகப் பாடினால், இலவசமாகப் பாடிவிடலாம். அதற்கு பணம்கொடுக்கத் தேவையில்லை. இதைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள். பணம் வாங்குகின்றீர்கள் அல்லவா? என் பாடல் என்றபோதும் பணம் எப்படி இல்லாமல் போகும். பங்கு ஒரு சின்ன தொகை.

    சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தான் பங்கு கேட்கிறோம். வரும் தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக இருக்கும். முன் உதாரணமாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #Ilayaraja #Royalty

    இளையராஜா பேசிய வீடியோவை காண:

    இசையமைப்பாளர் இளையராஜா பாடல்கள் காப்புரிமை பற்றி குற்றவியல் வழக்கின் தீர்ப்பு வெளியாகிய நிலையில், அதுகுறித்து இளையராஜா விளக்கம் அளித்துள்ளார். #Ilayaraja
    இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்கள் பற்றிய காப்புரிமை வழக்கின் தீர்ப்பு பற்றி விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு:-

    நான் 2014-ம் ஆண்டு தொடர்ந்த எனது பாடல்களை பயன்படுத்த தடை கோரிய வழக்கின்படி இன்றளவும் எனது பாடல்களை பயன்படுத்த கோர்ட்டால் பிறப் பிக்கப்பட்ட தடை செல்லும்.

    அந்த தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை. அதை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு விரைவில் வெளிவரும். நான் 2010-ம் ஆண்டு எக்கோ நிறுவனத்தின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் போலீசில் புகார் அளித்தேன்.

    சட்டத்துக்கு புறம்பாக என் பாடல்களை விற்பனை செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சிடிக்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். அந்த குற்றவியல் நடவடிக்கை வழக்கை ரத்து செய்யக்கோரி அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பே நேற்று வெளிவந்தது.



    அதில் நீதிபதி எக்கோ நிறுவனம் மீதான குற்றவியல் நடவடிக்கையை மட்டுமே ரத்து செய்துள்ளார். எனது காப்புரிமை செல்லாது என்று அறிவிக்கவில்லை. இந்த வழக்குக்கும் எனது பாடல்களின் உரிமை மீதான வழக்குக்கும் எந்த தொடர்பும் இல்லை.

    சிலர் என்னுடைய வழக்கே ரத்து என்று செய்தி வெளியிடுகிறார்கள். 4 ஆண்டுகள் வழக்கு நடத்தி இறுதி தீர்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் இதுபோன்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்’.

    இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Ilayaraja

    இசைஞானியுடன் ஒருநாள் என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இளையராஜா, இதுவரை நான் எதிர்பார்த்த பாடல் அமையவே இல்லை என்று கூறியிருக்கிறார். #Ilayaraja
    இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ‘இசைஞானியுடன் ஒருநாள்’ என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடிய இளையராஜா தன் மெட்டுக்களால் மாணவர்களை அசத்தினார்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் இளையராஜாவின் பாடல்களைப் பாடி அசத்த, அதை அகம் மகிழ்ந்து ரசித்தார். ஒரு மாணவி அவரிடம் ’இதுவரை நீங்கள் இசை அமைத்த பாடல்களில் நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாத பாடல் எது?’ என்று கேட்க, ``இதுவரை நான் இசையமைத்ததில் எந்தப் பாடலுமே நான் எதிர்பார்த்தபடி அமைந்த தில்லை. ஒவ்வொரு பாடலிலும் எங்கேயாவது தவறு இருக்கும்.



    இசையில் அனைத்துச் செல்வங்களும் இருக்கின்றன. அதைச் சரியாக பயன்படுத்த வேண்டும். இசைக்கு வெற்றி, தோல்வி எதுவுமே கிடையாது. வெற்றி -தோல்வி என்பதை மாணவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது. மற்றவர்களுக்குதான் நான் இசைஞானி. எனக்கு நான் இன்னமும் இசைஞானி இல்லை. சொல்லப்போனால் எனக்கு நான் இளையராஜாவே இல்லை’’ என்று பதில் அளித்தார்.

    கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டத்தற்கு இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் கருத்து கூற மறுத்து விட்டனர். #Vairamuthu
    கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பாடகி சின்மயி குற்றம் சாட்டி வருகிறார். தமிழ் சினிமாவிலும் பொதுவெளியிலும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் இந்த குற்றசாட்டுகளுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் குரல்கள் எழுந்துள்ளன.

    கவிஞர் வைரமுத்துவுடன் இணைந்து பயணித்தவர்கள் டைரக்டர் பாரதிராஜாவும், இசையமைப்பாளர் இளையராஜாவும். பல வெற்றி படங்களை கொடுத்த இந்த கூட்டணி பிரிந்தது.

    இலங்கை நாட்டில் கிளி நொச்சியில் ஒளிப்படப் பிடிப்பாளர் சங்கம் நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் மூத்த ஒளிப்படப் பிடிப்பாளர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    இலங்கை எம்.பி.சி.சிறிதரனும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து மீதான ‘மீ டூ’ பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த பாரதிராஜா “என் தொழில் தொடர்பாக சினிமா தொடர்பாக எது கேட்டாலும் பதில் சொல்வேன். டூ மீட் மீ ஐ மீட் யூ அவ்வளவுதான்” என பதில் அளித்தார்.

    ‘ஒரு இயக்குனராக பாலியல் புகார்கள் குறித்து என்ன கருதுகிறீர்கள்?’ என பாரதிராஜாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாரதிராஜா “மீ டூ என்றால் என்ன? சொல்லு. மீ டூன்னா என்னா? என்ன பிரச்சனை? என்ன பிரச்சினை” என கேள்வி கேட்டவரிடம் கோபப்பட்டார்.

    மற்றொரு பத்திரிகையாளர், ‘வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்படுகிறதே?’ என கேள்வி எழுப்ப “நீ பார்த்தியா? நீ பார்த்தியா? கேள்விப்பட்டிருக்கிறே... கேள்விபட்டதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆதாரம் இருந்தால் பதில் சொல்லலாம்” என்று சொல்லிவிட்டு வேகமாக முடித்துக் கொண்டார்.

    இளையராஜாவின் 75 வது பிறந்தநாள் நேற்று தனியார் கல்லூரி ஒன்றில் கொண்டாடப்பட்டது.

    இதில் கலந்துகொண்ட இளையராஜா நிகழ்ச்சி முடிந்ததும் பேட்டி அளித்தார். அப்போது மீடூ பற்றி கேள்வி கேட்டதற்கு ’ரொம்ப நன்றாக கேள்வி கேட்கிறாய்’ என்று சொல்லி விட்டு பதில் அளிக்காமல் மறுத்து சென்றுவிட்டார்.
    தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுடன் இணைந்து இசை ராஜா 75 என்று இசை திருவிழா நடத்த இருக்கிறார்கள். #ILayaraja
    இசைஞானி என்று பலராலும் போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா. இவர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவரது இசைக்கு பலரும் அடிமையாகி இருக்கிறார்கள்.

    இந்நிலையில், இளையராஜாவை வைத்து ‘இசைராஜா - 75’ என்ற இசை திருவிழா நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.



    இந்த பிரமாண்டமான இசை திருவிழா அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்க இருக்கிறது. #TFPC
    ×