என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "illegal liquor"
- புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
- எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது.
அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார்.
- கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா, மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் உள்பட 9 போலீசார் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக ரஜத் சதுர்வேதி நியமனம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய சாவு சம்பவத்தின் எதிரொலியாக புதிய போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட78 போலீசாரை பணியிடமாற்றம் செய்து அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த அலெக்ஸ் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுருகன் மணலூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், வடபொன்பரப்பி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், உளுந்தூர்பேட்டை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் பிரபாவதி உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை திருக்கோவிலூர் அமலாக்க மதுவிலக்கு பிரிவிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 14 போலீசார், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 10 போலீசார், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் பணியாற்றி வந்த 10 போலீசார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த போலீசார், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் ஒரே நாளில் 5 சப்-இன்ஸ் பெக்டர்கள் உள்பட 78 போலீசாரை பணியிட மாற்றம் செய்திருப்பது சக போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது.
- காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான்.
சென்னை:
சென்னையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விவகாரத்தில் உண்மை வெளிவரவே சிபிஐ விசாரணை கோருகிறோம்.
மரக்காணம் கள்ளச்சாராய பலி குறித்த சிபிசிஐடி விசாரணை என்ன ஆனது? இதுவரை விசாரணை நீண்டுகொண்டே இருக்கிறது. முடிவு இல்லை.
எங்கும் கள்ளச்சாராயம். இதற்கெல்லாம் முழு பொறுப்பு திமுக அரசாங்கம், முதலமைச்சர் தான். காவல்துறை, உள்துறையை கையில் வைத்திருப்பது முதலமைச்சர் தான். இதற்கெல்லாம் அவர் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அனைவரும் கேட்டார்கள். இது தொடர்பான துறை அமைச்சர் விளக்கம் கூட அளிக்கவில்லை.
முதலமைச்சர் இந்த சம்பவத்தில் மக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்கள் சொன்னார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கள்ளச்சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். சிபிஐ விசாரித்தால் முழு உண்மையும் வெளிவரும்.
திமுக-வினர் கவனத்தை வளர்ச்சியில் செலுத்த வேண்டும். மதுவில் செலுத்தக்கூடாது என்று கூறினார்.
- ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். மதுபான ஆலைகளை மூட வேண்டும்.
- குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.
* 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவர்னரிடம் கொடுத்துள்ளோம்.
* சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை.
* கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
* அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும்.
* ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். மதுபான ஆலைகளை மூட வேண்டும்.
* கவர்னர் நாங்கள் கூறிய கருத்துகளை மிக கவனமாக கேட்டார்.
* போதைப்பொருள் பழக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் வேதனை தெரிவித்தார்.
* கவர்னர் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
* குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.
* இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறினார்.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
- இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்.
சென்னை:
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்துக்கு பின்னால் அண்ணாமலையின் சதி இருக்கலாம் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை தொடர்புபடுத்தி அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி, ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது வக்கீல், பா.ஜனதா மாநில துணைத்தலைவர் பால்கனகராஜ் வாயிலாக நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், 'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை திசை திருப்பும் வகையில், ஆர்.எஸ்.பாரதி அவதூறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஆதாரமின்றி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். நோட்டீஸ் பெறப்பட்ட 3 நாட்களுக்குள் இதற்கு, அவர் மன்னிப்பு கோரவில்லை என்றால், ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மது மறுவாழ்வு மையம் அமைக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா்.
- கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 63 போ் உயிாிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரி நாளை அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளது.
இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். அதில், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நேர்மையான விவாதம் மறுக்கப்பட்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது அடிப்படை ஜனநாயகத்திற்கு விரோதமானது
எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மடைமாற்ற அரசியலால் கடந்துவிட முயற்சிக்கும் திமுக அரசிற்கு எனது கடும் கண்டனம்.
எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி வழங்காததைக் கண்டித்தும், கள்ளச்சாராய மரணங்கள் குறித்து CBI விசாரணை கோரியும் எனது தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை (27.06.2024- வியாழக்கிழமை) சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டம் மேற்கொள்ளவுள்ளோம்!
கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதி கிடைக்கும் வரை அஇஅதிமுகவின் போராட்டம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
- கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
- கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் 6 பெண்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.
இதற்காக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
புதுடெல்லி:
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கள்ளச்சாராய வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
- சிபிஐ (அ) சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ள 156 பேரில் 96 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 8 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளநிலையில், கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் சிபிஐ (அ) சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடுமாறு ஐகோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிபிசிஐடி விசாரித்தால் நியாயமாக இருக்காது என பாமக வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் புதிய மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.
- மெத்தனால் கலந்த சாராயம் விற்றதாக சின்னதுரை, ஜோசப்ராஜ், ஷாகுல் அமீது, கண்ணன், ராமா் ஆகிய 5 பேரை போலீசாா் கைது செய்து விசாாித்தனா்.
- பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதம், சிவக்குமார் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்ததில் 58 போ் உயிாிழந்தனா். இச்சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும் இந்த சம்பவம் தொடா்பாக ஏற்கனவே கருணாபுரத்தை சோ்ந்த கண்ணுக்குட்டி என்கிற கோவிந்தராஜ், இவருடைய மனைவி விஜயா, சகோதரா் தாமோதரன் ஆகிய 3 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசாா் கைது செய்து விசாரணை நடத்தினா்.
மேலும் மெத்தனால் கலந்த சாராயம் விற்றதாக சின்னதுரை, ஜோசப்ராஜ், ஷாகுல் அமீது, கண்ணன், ராமா் ஆகிய 5 பேரை போலீசாா் கைது செய்து விசாாித்தனா். அதில் புதுச்சோி மடுகரையை சோ்ந்த மாதேஷ், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இருந்து மெத்தனால் வாங்கி பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைத்ததும், பண்ருட்டியை சோ்ந்த சக்திவேல் என்பவரது கடையின் ஜி.எஸ்.டி. பில் மூலம் பல்வேறு பகுதிகளை சோ்ந்த வியாபாாிகளுக்கு பணம் அனுப்பியதும் தொியவந்தது. இதையடுத்து இச்சம்பவத்தின் முக்கிய புள்ளியான மாதேஷ் மற்றும் மெத்தனால் அனுப்பி வைத்த சென்னை மதுரவாயலை சோ்ந்த சிவக்குமாா், சக்திவேல் ஆகியோரை நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசர் கைது செய்து விசாரணை நடத்தினா்.
சாராய விற்பனையில் தொடா்புடையதாக சூளாங்குறிச்சி பகுதியை சோ்ந்த கதிரவன் (வயது 30), கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சோ்ந்த தெய்வீகன் (35), தியாகதுருகம் பகுதியை சோ்ந்த அய்யாசாமி (30), மற்றும் அரிமுத்து (30) ஆகிய 4 பேரை நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாா் கைது செய்தனா். இவா்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தனித்தனி இடங்களில் வைத்து ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதற்கிடையே சென்னையை சேர்ந்த சிவக்குமார், சென்னை மாதவரம், பூங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் ஆலையில் இருந்து மெத்தனாலை வாங்கி விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்துள்ளதாக போலீசாாிடம் தொிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனங்களை சோ்ந்த 5 ஆலை உாிமையாளா்கள் உள்பட 7 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களிடம் ஆலைக்கு உாிமம் உள்ளதா?, மெத்தனால் தயாாிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? என சி.பி.சி.ஐ.டி. போலீசாா் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பென்சிலால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை, கௌதம், சிவக்குமார் ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் மெத்தனாலை பெரிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கி தனி நபர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்ட 7 பேரையும் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
- இந்த நாட்டில் அதிகபட்ச நிவாரணம் எதுக்கு கொடுக்கிறார்கள். சாராயம் குடிச்சி இறந்ததற்குத்தான்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராய மரணங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், களலச்சாரயம் குடித்து இறந்தவர்களின் மீது எனக்கு அனுதாபம் கிடையாது. ஆத்திரம் தான் வருகிறது. இந்த நாட்டில் அதிகபட்ச நிவாரணம் எதுக்கு கொடுக்கிறார்கள். சாராயம் குடிச்சி இறந்ததற்குத்தான். இது நாடா? சுடுகாடா?
குடிக்க வைச்சி தாலியை அறுக்கறுது தான் அரசின் பொறுப்பா? கள்ளச்சாராயம் குடிச்சி இறப்பவர்களை அரசு ஊக்குவிக்கிறது.
நீங்க 10 லட்சம் நிவாரணம் அறிவிக்க உடனே கள்ளச்சாராயம் குடிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமாகி வீட்டுக்கு போனவன் மறுபடியும் கள்ளச்சாராயம் குடிக்கிறான். அந்த 10 லட்சம் பணத்திற்காக...
குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய்தான் குடிச்சி செத்தா 10 லட்சம் எப்படி இருக்கு... கேவலம்" என்று சீமான் தெரிவித்தார்.
- தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு CBI விசாரணை வேண்டும் என அதிமுக வலியுறுத்தி வருகிறது.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் மற்றும் மாதவச்சேரியை சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு CBI விசாரணை வேண்டும் என அதிமுக சார்பில் புதுச்சேரியில் நடந்த போராட்டத்தில், 'CPI விசாரணை வேண்டும்' என சிலர் பதாகை ஏந்தி நின்றிருந்தனர்.
இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்