search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegal sales"

    • சட்ட விரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு.
    • தேவைப்படுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வந்ததாக புகார்.

    மும்பை:

    ரெயில்களில் படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை முன்பதிவுக்கு கடும் போட்டி நிலவுவதால், பல்வேறு தரப்பினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.

    ரெயில்வே முன்பதிவு இணைய தளத்தில் சட்ட விரோத மென்பொருளை பயன்படுத்தி பயணச்சீட்டை முன்பதிவு செய்து, தேவைப்படுபவர்களுக்கு அதிக விலைக்கு விற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதை தடுக்க ரெயில்வே பாதுகாப்புப்படையினர் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மேற்கு ரெயில்வே பாதுகாப்புப் படையினர் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதில் 43 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1688 முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மும்பை, ராஜ்கோட், சுல்தான்பூர் பகுதிகளை சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் இவர்கள் 28.14 கோடி ரூபாய்க்கும் அதிக கமிஷன் பெற்று, ரெயில் டிக்கெட்டுகளை வாங்கி சட்ட விரோதமாக விற்றுள்ளதாகவும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ×