search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Imam Ul Haq"

    • விராட் கோலி 3ஆம் இடத்திலும், ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.
    • பந்து வீச்சாளர் தரவரிசையில் பும்ரா 5வது இடத்தில் இருக்கிறார்.

    ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் இமாம் உல்ஹக், இந்திய வீரர் கோலியை பின்னுக்கு தள்ளி 815 புள்ளிகளுடன் 2 வது இடத்தை பிடித்துள்ளார்.

    சொந்த மண்ணில் நடந்த மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

    இந்த பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 892 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 811 புள்ளிகளுடன் விராட் கோலி 3ஆம் இடத்திலும், 791 புள்ளிகளுடன் ரோகித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர்.

    பந்து வீச்சாளர் தர வரிசையில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இரண்டு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

    ஆஸ்திரேலிய ஹேசில்வுட் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.இந்த தரவரிசையில் இந்தியாவின் பும்ராவிற்கு 5வது இடம் கிடைத்துள்ளது.


    இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 151 ரன்கள் அடித்த இமாம் உல் ஹக், அதிக ரன் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று பிரிஸ்டோலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 131 பந்தில் 151 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் 2-வது போட்டியில் பகர் ஜமான் 138 ரன்களும், 1999-ல் இஜாஸ் அகமது 137 ரன்களும், 1987-ல் மியான்தத் 113 ரன்களும் அடித்துள்ளனர்.
    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் அடித்துள்ளது. #AsiaCup2018 #INDvPAK
    இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சூப்பர் 4 சுற்று ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் பகர் சமான், இமாம் உல் ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். புவனேஸ்வர் குமார், பும்ரா பந்து வீச்சை தொடங்கினார்கள்.

    புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா பந்து வீச்சை பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் எதிர்கொள்ள திணறினார்கள். அதேவேளையில் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். முதல் 7-வது ஓவரில் பாகிஸ்தான் விக்கெட் ஏதும் இழக்கவில்லை. 8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் இமாம் உல் ஹக் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 20 பந்தில் 10 ரன்கள் அடித்தார்.



    அடுத்து பாபர் ஆசம் களம் இறங்கினார். பாகிஸ்தான் முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 28 ரன்கள் சேர்த்துள்ளது. பகர் சமான் 12 ரன்னுடனும், பாபர் ஆசம் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    ஜிம்பாப்வே அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 399 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்தது பாகிஸ்தான். #PAKvZIM
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 113 ரன்களும், பகர் சமான் 210 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.

    இதன்மூலம் பாகிஸ்தான் அணி பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பாகிஸ்தான் இதற்கு முன்பு 385 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அது தற்போது 399 ரன்னாக உயர்ந்ததுள்ளது. ஒருநாள் போட்டியில் எந்தவொரு தொடக்க ஜோடியும் முச்சதத்தை தொட்டது கிடையாது. முதன்முறையாக பகர் சமான் - இமாம்-உல்-ஹக் ஜோடி 304 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.



    கிறிஸ் கெய்ல் - சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதன்பின் தெண்டுல்கர் - டிராவிட் 331 ரன்களும், கங்குலி - டிராவிட் 318 ரன்கள் குவித்துள்ளது. தற்போது இந்த ஜோடி 304 ரன்கள் குவித்துள்ளது.

    பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பும் இதுதான். இதற்கு முன் சோஹைல் - இன்சமாம் உல் ஹக் ஜோடி 263 ரன்கள் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
    இமாம்-உல்-ஹக்கின் அபார சதத்தால் முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயின் வெற்றிக்கு 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #ZIMvPAK
    ஜிம்பாப்வே, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் முடிவடைந்த நிலையில், ஜிம்பாப்வே- பாகிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி இமாம்-உல்-ஹக், பகர் சமான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 60 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் அசாம் 20 ரன்னும், சோயிப் மாலிக் 22 ரன்னும், ஆஷிப் அலி 46 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    ஆனால் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹச் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 134 பந்தில் 128 ரன்கள் சேர்த்தார். இவரது சதத்தால் பாகிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் குவித்தது. 5 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள இமாம்-உல்-ஹக்கின் 2-வது சதம் இதுவாகும். இதனால் ஜிம்பாப்வே அணிக்கு 309 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான்.

    309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே விளையாடி வருகிறது.
    ×