என் மலர்
நீங்கள் தேடியது "imprisonment"
- ஒரு நபர் ஹேமந்தின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
- இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மாதம் 26- ந் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் ஹேமந்தின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெரு பகுதியைச் சேர்ந்த பிரதாப் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சேலம் 4- ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி யுவராஜ், செல்போன் பறித்த வழக்கில் பிரதாப்புக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
- காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த வாலிருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி உள்ளார்
அரியலூர்:
ஆண்டிமடம் அருகேயுள்ள சாதனப்பட்டு கிராமம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அருமைநாதன் மகன் ஆனந்தராஜ்(வயது 27). இவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2016-ம் வருடம் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி உள்ளார். இதையடுத்து அந்த பெண், தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டபோது, ஆனந்தராஜ் மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி ஆனந்தராஜ்க்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆனந்தராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகி வாதிட்டார்.
- கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- நிவாரண தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு தரப்பிடம் இருந்து வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போஸ்கோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆதித்யா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3½ ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பிற்கு நிவாரணத் தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு திரைப்படம் இருந்து வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
- ராமேசுவரம் கடலில் தங்க கட்டிகளை வீசிய கொள்ளையர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
- இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை
ராமேசுவரம் கடல் பகுதியில் தங்கம் கடத்தி வரப்படுவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது நாட்டுப் படகில் தங்கம் கடத்தி வந்த நாகூர் ஹனி (32), முகமது சமீர் (29), முகமது இப்ராஹிம் மகன் சகுபர் சாதிக் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நடுக் கடலில் வீசிய ரூ. 150 கோடி மதிப்புடைய 17.74 கிலோ தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டன.
பிடிபட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தங்கம் கடத்தலில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கொடைக்கானலில் இருந்து தப்பி வந்து மதுரையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் ஜஹாங்கீர் அப்பாஸ் (29), முகமது சாதிக் (33), அசாருதீன் (25) என்பது தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். ராமேசுவரம் கடலில் தங்கம் கடத்தி வந்த மேற்கண்ட 6 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
- ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.
- முதிர்வு காலம் வந்தபின் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை. என்னிடம் இருந்து ரூ.2.92 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர் எனக் கூறியிருந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முனியப்பன் நகரை சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார்.
அதன்மூலம் சேலத்தை சேர்ந்த ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாக பணத்தை முதலீடு பெற்றனர். தொடர்ந்து, அயோத்தியாப்பட்டணம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமுதசுரபி என்ற பெயரில் கூட்டுறவு கடன் சங்கங்களை தொடங்கி நடத்தினர். தனியாக ஏ.டி.எம். கார்டுகளை வழங்கி, அதற்கான எந்திரங்களையும் அந்தந்த கூட்டுறவு கடன் சங்க கிளைகள் முன் ஏற்படுத்தினர்.
இந்நிலையில் சேலம் அம்மாபேட்டை தங்க செங்கோடன் தெருவை சேர்ந்த பாஸ்கரன்(52) என்பவர், சேலம் பொருளா தார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அமுதசுரபி கூட்டுறவு சங்க முகவராக செயல்பட்ட குமரேசன் என்பவர் மூலம் அதிக வட்டி கிடைக்கும் என்ற ஆசையில் அவர்களது கூட்டுறவு சங்கத்தில் பணத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்தேன்.
ஆனால் முதிர்வு காலம் வந்தபின் தனக்கு சேர வேண்டிய பணத்தை தரவில்லை. என்னிடம் இருந்து ரூ.2.92 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர் எனக் கூறியிருந்தார். இதுபற்றி பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்பது போலியாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அந்த கூட்டுறவு கடன் சங்கத்தை ஏற்படுத்திய ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரும் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் கிளைகளை ஏற்படுத்தி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் தெரிந்தது.
இதனிடையே சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து புகார்களை கொடுத்தனர். இதைதொடர்ந்து, போலி கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், இயக்குநர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகிய 4 பேர் மீதும் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.
ஒட்டு மொத்தமாக 1000-க்கும் மேற்பட்டோரிடம் ரூ.58 கோடி அளவிற்கு மோசடி செய்திருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இன்னும் தொடர்ந்து பொதுமக்கள் புகார்களை கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே அமுத சுரபியின் அனைத்து கூட்டுறவு சங்க அலுவல கங்களிலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, ஆவணங்களையும், ஏ.டி.எம் கார்டு, எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஜெயவேல் உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.
இந்நிலையில் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் ஜெய வேலைஅதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் சொத்துக்கள் வாங்கி குவித்து வைத்துள்ளாரா?, வேறு எங்கும் பணமாக பதுக்கி வைத்துள்ளாரா? என்ற கோணத்தில் விசாரித்தனர்.
பின்னர், அவரை கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோரை போலீ சார் தேடி வருகின்றனர்.
- கே.எஸ் சபீனா குற்றவாளிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து காளியப்பனை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.
அவினாசி :
நெய்வேலியை சேர்ந்த ஜெகதீஸ் ( வயது 22) என்பவர் கடந்த 2014ம் ஆண்டு அவினாசியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது அவினாசி பெருமாநல்லூர் ரோடு ராயம்பாளையம் பிரிவு அருகே ரோட்டோரமாக நின்றுகொண்டிருந்தார் .
இந்தநிலையில் அவினாசி சீனிவாசபுரத்தை சேர்ந்த காளியப்பன் (41) என்பவர்அப்பகுதியில் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் தண்ணீர் டேங்க் லாரியை ஓட்டிவந்து ஜெகதீஸ் மீது மோதியுள்ளார் .இதில் பலத்த காயமடைந்த ஜெகதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து காளியப்பனை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் அவினாசி நடுவர் நீதிமன்ற நீதிபதி கே.எஸ் சபீனா குற்றவாளிக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
- வருமான வரி தாக்கல் செய்ததில் முறைகேடு செய்த நல்லாசிரியர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி காவல் நிலைய சரகம் கீழம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் கே.ராமச்சந்திரன்(38) என்பவருக்கு கடந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இவரது சகோதரர் பஞ்சாட்சரம் என்பவர் வருமான வரி தொடர்பான நிறுவனத்தை மதுரை, ராமநாத புரம் ஆகிய இடங்க ளில் நடத்தி வருகிறார்.
இதன் மூலம் வருமான வரி தாக்கல் செய்யும் போது அதிகமான நபர்களுக்கு குறைவாக கணக்கு காண்பித்து பணம் திரும்ப பெற்று கொடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக ரூ. 2 கோடியே 84 லட்சம் திரும்ப பெற்றுக் கொடுத்ததாக வருமான வரித்துறையினர் புகாரின் பேரில் சி.பி.ஐ. கடந்த 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்து 2022ம் ஆண்டு பஞ்சாட்சரத்தை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி பிணையில் வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆசிரியர் ராமச்சந்திரனுக்கு அவரது சகோதரர் ரூ. 12 லட்சம் வங்கி மூலம் பணம் அனுப்பி உள்ளார். மேலும் இருவருக்கும் வங்கி மூலம் பணம் பரிவர்த்தனை இருப்பதால் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் ஆசிரியர் ராமச்சந்திரனை கைது செய்து மதுரை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். பின்னர் மதுரை மாவட்ட சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் 15நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
- விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார்
- வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா குமாரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (வயது 60) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி வெள்ளையம்மாள். இவர்களது மகன் விஜயராம் (36). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஜயராமின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு அம்மா வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க அவருடைய அப்பா பாலுச்சாமி, அம்மா வெள்ளையம்மாளிடம் வலியுறுத்தினார்.
இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வீட்டில் இருந்த அருவா மனையால் தந்தை பாலுச்சாமியை விஜயராம் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே பாலுசாமி இறந்துவிட்டார். மேலும், இவரது தாயார் வெள்ளையம்மாள் தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது இதில் தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், தாயாரை தலையில் அடித்து காயம் ஏற்படுத்தியதற்காக 3 ஆண்டு சிறையும் ரூ.1000 அபராதமும் விதித்து நீீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து விஜய்ராமனை உளுந்தூர்பேட்டை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது.
- சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டம், உடுமலை அமராவதி நகரைச் சோ்ந்தவா் கோகுலகண்ணன் (வயது 21). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தெரிகிறது. இதனால் அந்த சிறுமி கா்ப்பமடைந்துள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கடந்த 2022ல் உடுமலை மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரின் பேரில் போக்சோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் கோகுலகண்ணனை கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி பாலு தீா்ப்பு வழங்கினாா். இதில், கோகுலகண்ணனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்தாா். இந்த சிறுமிக்கு தற்போது குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஜாகிர் அம்மாபாளையத்தில் மளிகை கடை யில் வேலை செய்து வந்தார்.
- கடைக்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகினார். திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்தார்.
சேலம்:
சேலம் கருப்பூர் அடுத்த தேக்கம்பட்டி வட்டக்காட்டை சேர்ந்தவர் வினித் (வயது 23). திருமண மாகி மனைவி மற்றும் ஒன்றரை வயதில் மகன் உள்ளார்.
இவர் ஜாகிர் அம்மாபா ளையத்தில் மளிகை கடை யில் வேலை செய்து வந்தார். அப்போது கடைக்கு வந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் பழகினார். திருமணமானதை மறைத்து மாணவியை காதலித்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அவர் மாண வியை மறைவான இடத் திற்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே காத்திருந்த வினித்தின் தம்பி விக்னேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகாஷ் (19), அருள்குமார் (23), சீனிவாசன் (23) ஆகியோர் சிறுமிக்கு அடுத்த டுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.
அதேபோல மறுநாளும் அந்த மாணவிக்கு 5 பேரும் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தந்தையிடம் கூறி கதறி அழுதார். மாணவியின் தந்தை புகாரின்படி, சூரமங்க லம் மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட பிரிவு களில் வழக்கு பதிவு செய்து, அண்ணன், தம்பி உட்பட 5 பேரை நேற்று கைது செய்த னர். 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட னர்.
- குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவரது தோட்டம் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது.
- தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (வயது 52). விவசாயி. இவரது தோட்டம் ஜேடர்பாளையம்-நல்லூர் செல்லும் சாலையில் உள்ளது. இங்கு இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுற்றி சூரிய மின்கம்பி வேலி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரைப்பா ளையம் பகுதியைச் சேர்ந்த நித்யா என்ற இளம்பெண் படு கொலை செய்யப்பட்டார். இவரது உறவினரான குழந்தைவேல் மீது சிலர் காழ்ப்புணர்ச்சியில் இருந்து வந்தனர்.
இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பவர் டில்லர் தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும் விவசாயத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை மர்மநபர்கள் அடித்து நொறுக்கினர்.
இதுமட்டுமின்றி தோட்டத்தின் நுழைவா யிலில் அடைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டில், மின்சாரம் பாய்ச்சி கொலை முயற்சி யிலும் ஈடுபட்டிருந்தனர்.
இதுகுறித்து குழந்தைவேல் நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதில், வெல்லம் தயாரிக்கும் ஆலை உரிமையாளர் சதாசிவம், தமிழரசன், மோகன்ராஜ், ரமேஷ், சந்திரசேகர் மற்றும் அங்கு வேலை செய்யும் ஆட்கள் மீது புகார் தெரிவித்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் தமிழரசன், மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை நாமக்கல் ஜே 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் இரு வரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார்
- திண்டிவனம் மேம்பாலம் அருகே வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
விழுப்புரம்:
புதுச்சேரி-திண்டிவனம் 4 வழிச்சாலை கிளியனூர் அருகே எடையார்குளம் மெயின் ரோட்டில் மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை ஒரு வாலிபர் வந்தார். அந்த வாலிபர் தான் வந்த மோட்டார் சைக்கிள் பாதி வளியில் பழுதாகி நின்றது. அதனை சரி செய்ய மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடை ஊழியரை அழைத்தார். இல்லையெனில் மோட்டார் சைக்கிளை சரிசெய்யும் பொருளை அந்த வாலிபர் கேட்டார். அப்போது மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் கடையில் ேவலைபார்க்கும் சிறுவன் கடை உரிமையாளர் இல்ைல அதனால் தரமுடியாது என்று கூறி கடையின் உள்ளே சென்றார். இந்நிலையில் அந்த வாலிபர் கடையின் வெளியில் சாவியுடன் நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றார்.
உடனே மோட்டார் சைக்கிள் கடையில் வேலை பார்க்கும் சிறுவன் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார் இதனால் அருகில் இருந்தவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளில் சினிமா பாணியில் அந்த வாலிபரை பின்தொடர்ந்து சென்று திண்டிவனம் மேம்பாலம் அருகே அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுச்சேரி மாநிலம் சக்தி நகர் சாரம் பகுதியை சேர்ந்த கோவிந்த ராஜ் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் போலிசார் கோவிந்தராஜை வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.