search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Erode Corporation area"

    • குடியிருப்புகளில் வீடுகளில் 2 சாரைப்பாம்புகளை பிடித்தார்.
    • பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த சில நாட்களாக பாம்புகள் படையெடுப்பது தொடர் கதையாகி வருகிறது.

    இன்று காலை ஈரோடு ரங்கம் பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே பழைய பொருட்கள் வைக்க ப்பட்டிருந்த பகுதியில் சுமார் 8 அடி நீளம் உள்ள சார பாம்பு இருந்ததை பாம்பு பிடி வீரர் யுவராஜ் பிடித்தார்.

    இதேபோல் ஈரோடு ெரயில்வே காலனி பகுதி யில் உள்ள குடியிருப்புகளில் 2 வீடுகளில் 8 முதல் 10 அடி உயரம் உள்ள 2 சாரைப்பாம்புகளை அவர் பிடித்தார்.

    ஈரோடு இந்தியன் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாம்பு புகுந்ததாக அவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் யுவராஜ் சென்று பாம்பை தேடி தேடினார்.

    அப்போது அங்கு டி.வி.யில் சாரை ப்பாம்பு ஒளிந்து கொண்டிருப்பதை கண்டு பிடித்தார். இவ்வாறாக ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 2 நாட்களில் 10-க்கும் மே ற்பட்ட பாம்புகளை அவர் பிடித்துள்ளார்.

    பின்னர் அனைத்து பாம்புகளையும் வனத்துறையினர் மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டார்.

    தற்போது வெ யிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குளிர்ச்சியான இடங்களை நோக்கி பாம்புகள் வருவதால் வீடுகளை நோக்கி வருகிறது என்றும், பொதுமக்கள் ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், காலனி வைக்கும் இடம், பழைய பொருட்கள் வைக்கும் இடத்தை கவனமாக கையாள வேண்டும் என்றும் அவர் கூறினார். 

    ×