search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inauguration of the new building"

    • கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும்
    • திருப்பத்தூர் கலெக்டர் எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சின்னாரம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் ரூ. 29.4 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தார். திருப்பத்தூர் எம்.எல்.ஏ., நல்லதம்பி, ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஊரக வளர்ச்சி திட்ட முகமை திட்ட இயக்குநர் செல்வ ராசு, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் விஜயகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது, கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறியதாவது:-

    திருப்பத்தூர் மாவட்ட த்தை பொறுத்தவரையில் பாலின வித்தியாசம் அதிக அளவில் உள்ளது. இந்த வித்தியாசம் ஏற்பட்டதற்கு காரணம் சில நபர்கள் பெண் குழந்தையை வேண்டாம் என நினைக்கிறார்கள்.

    கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பரிசோதனை செய்வது சட்டப்படி குற்றமாகும். யாராவது பரிசோதனை செய்வது தெரிய வந்தால், அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படும்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை அறவே தவிர்க்க வேண்டும். உறவுகளுக்குள் திரும ணத்தையும் தவிர்க்க வேண்டும். குழந்தை திருமணத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்களோ, யாரை வைத்து திரு மணத்தை நடத்துகிறீர்களோ அவர்கள் அனைவருக்கும் சட்டப்படி தண்டனை வழங்கப்படும்.

    குழந்தை திருமணத்தில் அவர்களது வீட்டுக்கு சென்று வந்தால், அவர்களது வீட்டில் உணவு அருந்தினால், மொய் மட்டும் வைத்து விட்டு வந்தேன் என்றாலும் தண்டனை உண்டு.

    ஆகவே, குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வதும் குழந்தை திருமணத்தை சொல்லாமல் இருப்பதும் சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×