search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Incidental Leave"

    • மல்லிகா தற்செயல் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.
    • திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் என மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.

    நாகப்பட்டினம்:

    ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளராக மல்லிகா பணியாற்றி வருகிறார். 1984 ஆம் ஆண்டு அரசு பணியில் சேர்ந்த இவர் திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், நாகப்பட்டினம் என மாவட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.

    இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்த அலுவலர் மல்லிகா உதவியாளர், விரிவாக்க அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர் என உயர் பதவிகளை அடைந்து தற்போது நாகை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலராக பணியாற்றினார்.

    இந்தநிலையில் அரசு அலுவலர் மல்லிகாவின் பணி ஓய்வு நிகழ்ச்சி ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடைபெற்றது. 65 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடம் பணியாற்றிய அனுபவம் கொண்ட மல்லிகா தனது அரசு பணியில் 39 வருடம் 6 மாதங்கள் 9 நாட்கள் தற்செயல் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி சாதனை படைத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற பணி ஓய்வு நிகழ்ச்சியில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பிரியா விடைகொடுத்தனர்.

    ×