search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Independence Day"

    • சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • அவ்விழாவில் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் புறா பறக்க விடப்பட்டது.

    சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், பாஜக எம்.எல்.ஏ. புன்னுலால் மோஹ்லே மற்றும் மாவட்ட ஆட்சியர் ராகுல் தியோ மற்றும் காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் ஆகியோர் அமைதி மற்றும் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஆளுக்கொரு புறாவை பறக்க விட்டனர்.

    அதில் மாவட்ட எஸ்.பி. பறக்க விட்ட புறா, பறக்காமல் கீழே விழுந்துள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    இதனையடுத்து, உடல்நலம் குன்றிய புறாவை நிகழ்ச்சிக்கு வழங்கியது குறித்து விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு எஸ்.பி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது.
    • நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்'

    அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்றிணைத்து நியூ யார்க் நகரில் இந்திய சுதந்திர தினத்தை பேரணி நடத்தி பிரமாண்டமான முறையில் கொண்டாடினர். கடந்த 41 ஆண்டுகளாக நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின பேரணி நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்த வருடம் நடந்த 42 வது பேரணியில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியும் இடம்பெற்றது. பாலிவுட் நட்சத்திரங்கள் சோனாக்சி சின்ஹா, பங்கஜ் திரிபாதி, ஜாகீர் இக்பால் கலந்து கொண்டனர். அதேபோல் மனோஜ் திவாரி எம்.பி.யும் கலந்து கொண்டார்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் குவீன்ஸ் 9 இந்தியா பேரணியில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் முன் உரையாற்றிய நியூ யார்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் இந்தியா என்பதற்கு பதிலாக பாகிஸ்தான் என்று பலமுறை தவறுதலாக உச்சரித்தார். 'என்னை இந்த நிகழ்வுக்கு வர அனுமதித்ததற்கு மிகவும் நன்றி. உங்களை எனக்கு நீண்டகாலமாக தெரியும். குவீனஸ் நகர் லிட்டில் பாகிஸ்தானில் இருந்து ப்ரூக்லின் நகர் லிட்டில் பாகிஸ்தான் வரை நியூ யார்க் நகரின் நிர்மாணத்துக்கு அடித்தளமிட்டதில் முக்கிய பங்குவகிக்கிறீர்கள். நியூ யார்க் என்பது அமெரிக்காவின் நியூ டெல்லி.எனவே உங்களின் சுதந்திரதினத்தை ஒன்றிணைந்து கொண்டாடுவோம்' என்று தெரிவித்தார்.

    லிட்டில் இந்தியா என்று சொல்வதற்கு பதிலாக லிட்டில் பாகிஸ்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புலப்பெயர்ந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியை லிட்டில் என்ற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம். அவ்வாறே அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் அதிகம் வசிக்கும் பகுதிகள் லிட்டில் இந்தியா, லிட்டில் பாகிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தனுக்கும் இடையில் வித்தியாசங்கள் நம்மிடையே பெரிதாக தெரிந்தாலும்,வெளிநாடுகளில் வாழும் மக்கள் இரு நாட்டவரையும் குழப்பிக்கொள்வது வழக்கம். 

    • டெய்லர் கடையை மூவர்ண மலர் மற்றும் பலூன்களால் அலங்கரித்துள்ளார்.
    • தேசியக்கொடியுடன் பாலஸ்தீன கொடியையும் ஏற்றியதால் உள்ளூர் பாஜகவினர் புகார் அளித்தனர்.

    இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அரசு அலுவலகம், பள்ளிக் கூடங்கள், வீடுகளில் தேசியக் கொடியை அவமதிக்காத வகையில் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள டெய்லர் கடைக்காரர் அவரது கடைக்கு முன் பாலஸ்தீன கொடியை ஏற்றியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் போலீசார் புகார் அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து தேசிய மரியாதையை அவமதிப்பதை தடுக்கும் சட்டம் 1971 கீழ் தேசிய கொடியை அவமதித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவரை துணை கமிஷனர் ஜெயிலில் அடைத்துள்ளார்.

    ஹனீப் கான் (வயது 40) தனது கடையை காவி, வெள்ளை, பச்சை கலர் பலூன் மற்றும் மலர்களால் அலங்கரித்திருந்தார். ஆனால், தேசிக்கொடியுடன் பாலஸ்தீன கொடியையும் சேர்த்து ஏற்றிருந்தார். போலீசார் பாலஸ்தீன கொடியை அகற்றி அவரை கைது செய்தனர்.

    • குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது
    • குர்மீத் ராம் ரஹீம் சிங் [பிறந்தநாள் கொண்டாடவும்], ஆஷ்ரம் பாபு [Asaram Bapu] ஆயுர்வேத சிகிச்சை பெறவும் தற்போது பரோலில் வெளி வந்துள்ளதுள்ளனர்

    நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி மிக நீண்ட உரையினை நேற்றைய தினம் நிகழ்த்தினார். அவரது உரையில், எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க இது அவசியம்.

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்களில் அதிகம் பேசுகிறது. ஆனால், இப்படிப்பட்ட வக்கிரமானவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது செய்திகளில் பெரிதாகக் காணப்படுவதில்லை. குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது. இந்த பயத்தை உருவாக்குவது முக்கியம் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இதை விமர்சிக்கும் வகையில் நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது. மோடியின் உரையைப் பகிர்ந்து அவர், மணிப்பூர் முதல் கன்னியாகுமரி வரை விடுதலையாகி வெளியே உள்ள பாலியல் குற்றவாளிகள் [RAPISTS] தற்போது சிரித்துக் கொண்டுள்ளனர் [Laughing in the corner]. எப்போது நீங்கள் சொல்வதுபோல் நடந்து கொல்லப்போகிறீர்கள்#justasking என்று பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக, பாலியல் குற்ற வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் மதத் தலைவர்களான குர்மீத் ராம் ரஹீம் சிங் [பிறந்தநாள் கொண்டாடவும்], ஆஷ்ரம் பாபு [Asaram Bapu] ஆயுர்வேத சிகிச்சை [பெறவும்] தற்போது பரோலில் வெளி வந்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை.
    • கடந்த 1947-ம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.

    புதுடெல்லி:

    பிரதமர் மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் ஆற்றிய சுதந்திர தின உரைதான், அவரது சுதந்திர தின உரைகளிலேயே மிக நீளமானது. 98 நிமிட நேரம் அவரது உரை நீடித்தது. இந்திய வரலாற்றில் எந்த பிரதமரின் சுதந்திர தின உரையை ஒப்பிட்டாலும், இதுதான் மிக நீண்ட உரை ஆகும். இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

    பிரதமர் மோடி, கடந்த 2014-ம் ஆண்டு முதல்முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றியபோது, 65 நிமிடம் உரையாற்றினார்.

    2015-ம் ஆண்டு 88 நிமிடங்களும், 2016-ம் ஆண்டு 96 நிமிடங்களும், 2017-ம் ஆண்டு 56 நிமிடங்களும், 2018-ம் ஆண்டு 83 நிமிடங்களும், 2019-ம் ஆண்டு 92 நிமிடங்களும், 2020-ம் ஆண்டு 90 நிமிடங்களும், 2021-ம் ஆண்டு 88 நிமிடங்களும், 2022-ம் ஆண்டு 74 நிமிடங்களும், 2023-ம் ஆண்டு 90 நிமிடங்களும் அவரது சுதந்திர தின உரை நீடித்தது.

    இதற்கு முன்பு, அவரது நீண்ட உரை 2016-ம் ஆண்டு ஆற்றிய உரையாகவும், மிக குறைந்த நேர உரை 2017-ம் ஆண்டு ஆற்றிய உரையாகவும் இருந்தது.

    பிரதமர் மோடிக்கு முன்பு, கடந்த 1947-ம் ஆண்டு நேரு 72 நிமிடங்களும், 1997-ம் ஆண்டு குஜ்ரால் 71 நிமிடங்களும் உரையாற்றியது நீண்ட நேர உரையாக இருந்தன.

    கடந்த 1954-ம் ஆண்டு நேரு 14 நிமிடங்களும், 1966-ம் ஆண்டு இந்திரா காந்தி 14 நிமிடங்களும் பேசியது, குறைந்த நேர சுதந்திர தின உரைகளாக உள்ளன.

    கடந்த 2012-ம் ஆண்டு மன்மோகன்சிங்கின் சுதந்திர தின உரை 32 நிமிடங்களிலும், 2002-ம் ஆண்டு வாஜ்பாயின் சுதந்திர தின உரை 25 நிமிடங்களிலும் முடிவடைந்தன.

    • விஜய் வசந்த் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
    • வீடுகளை இழந்த மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று நாகர்கோவிலில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினருடன் விஜய் வசந்த் எம்.பி., தேசிய கொடியேற்றினார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் அலுவலகத்தில், மாணவர்களுக்கு கல்வி ஊக்க தொகை வழங்கப்பட்டதாக விஜய் வசந்த் எம்.பி., தெரிவித்தார். 

    மேலும், விஜய் வசந்த் சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில், "அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நாம் சுவாசிக்கும் இந்த சுதந்திர காற்றை பெற்று தர தியாகங்கள் பல மேற்கொண்ட சுதந்திர போராட்ட வீரர்களை இன்று நினைவு கூர்வோம். நாம் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க வேண்டியது நமது கடமை. அதற்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்" என்றார்.

    இதைதொடர்ந்து, கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செம்பருத்திவிளையில் மழை வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்த மக்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    பாதுக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்க ஆவன செய்யப்படும் என்றும், சம்பத்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொண்டதாகவும் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று நன்றி தெரிவித்து கொண்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும்.
    • வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம் என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து 140 கோடி இந்தியர்கள் கவலைப்படுகிறார்கள்.

    வங்கதேசத்தின் முன்னேற்றத்திற்கு இந்தியா எப்போதும் நலம் விரும்பியாக இருக்கும். வங்கதேசத்தில் நிலைமை விரைவில் சீராகும் என நம்புகிறோம்.

    வங்கதேசத்தில் உள்ள இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என இந்தியர்கள் விரும்புகின்றனர் என தெரிவித்தார்.

    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்.
    • இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது அவர் நாட்டு மக்களிடம் பேசியதாவது:

    விமானப்படை, ராணுவம், கடற்படை மற்றும் விண்வெளித்துறை உள்பட பல துறைகளில் பெண்களின் தலைமைத்துவத்தை நாடு காண்கிறது. ஆனால், சில கவலையான சம்பவங்களும் நடைபெறுகின்றன.

    இன்று செங்கோட்டையில் இருந்து எனது வலியை வெளிப்படுத்த விரும்புகிறேன். ஒரு சமூகமாக, நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும்.

    எங்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்தக் கோபத்தை நான் உணர்கிறேன். நாடு, சமூகம், நமது மாநில அரசுகள் இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவில் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். சமூகத்தில் நம்பிக்கையை உருவாக்க இது அவசியம்.

    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும்போது ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால், இப்படிப்பட்ட வக்கிரமானவர்களுக்கு தண்டனை கிடைத்தால் அது செய்திகளில் பெரிதாகக் காணப்படுவதில்லை.

    குற்றவாளிகள் பயப்படும் வகையில் தண்டனைகள் குறித்தும் பரவலாக விவாதிக்கப்பட வேண்டும் என காலம் கோருகிறது. இந்த பயத்தை உருவாக்குவது முக்கியம் என தெரிவித்துள்ளார்.

    • சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
    • நாமக்கல் கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

     

    அண்ணா விளையாட்டு அரங்கில் கடலூர் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் கொடியேற்றினார்.

     

    கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேலு தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    கள்ளக்குறிச்சி கலெக்டர் பள்ளி மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

     

    நாமக்கல் கலெக்டர் உமா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    கோவை கலெக்டர் கிராந்திகுமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    புதுக்கோட்டை கலெக்டர் அருணா ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றினார்.

     

    திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

     

    ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

    ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேசியக்கொடி ஏற்றி வைத்து கலெக்டர் சந்திரகலா மரியாதை செலுத்தினார்.

    தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் பிரியா பங்கஜம் ஏற்றுக்கொண்டார்.

     

    நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கலெக்டர் ஆகாஷ் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

    திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்த கலெக்டர் பிரதீப் குமார் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

     

    • பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.
    • முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும் மற்றும் அவைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறப்பாக செயல்படும் ஒரு மண்டலம், சிறப்பாக செயல்படும் ஒரு மாநகராட்சி, ஒரு நகராட்சி மற்றும் ஒரு பேரூராட்சி ஆகியவற்றுக்கு முதலமைச்சர் விருது சுதந்திர தின விழாவின்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கீழ்க்கண்ட உள்ளாட்சிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

    சிறந்த மாநகராட்சி-கோவை-ரூ.50 லட்சம், சிறந்த நகராட்சி-திருவாரூர் ரூ.30 லட்சம், சிறந்த பேரூராட்சி-சூலூர் (கோவை மாவட்டம்) ரூ.20 லட்சம்.

    பெருநகர சென்னை மாநகராட்சியில் சிறந்த மண்டலம்-14-வது மண்ட லம் ரூ.30 லட்சம்.

    முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்கான ரொக்கப்பணம் ரூ. 50 ஆயிரத்து 800-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    2024-ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதிற்காக 3 ஆண்கள் மற்றும் சிறப்பு நிகழ்வாக 4 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆண்கள் பிரிவில் நெ. கதிரவன் (ஈரோடு மாவட் டம்), ஜோஷன் ரெகோ பெர்ட் (கன்னியாகுமரி மாவட்டம்), சி.ஜெயராஜ் (கடலூர் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் செ.நிதிதா (கடலூர் மாவட் டம்), கவின்பாரதி (புதுக்கோட்டை மாவட்டம்), ச.உமாதேவி (விருதுநகர் மாவட்டம்), கா.ஆயிஷா பர்வீன் (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

    • பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழு சார்பில் கொடியேற்றப்பட்டது.
    • கொடியேற்ற நிகழ்ச்சியில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழுவுடன் பலர் கலந்து கொண்டனர்.

    78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் (Beach boys walkers) சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றபட்டது. இந்த நிகழ்ச்சியில் பால சுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார்.

    இந்த ஆண்டு கொடியேற்ற விழாவில் அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் திரு. கே.டி. வெங்கடேசன், பீச் பாய்ஸ் அட்மின் மோகன் ராகவன், முன்னாள் அட்மின் ஏழுமலை, மீடியா95 சிஇஓ பழனி ராஜா மற்றும் பீச் பாய்ஸ் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     


    கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பீச் பாய்ஸ் வாக்கர்ஸ் குழு சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தேசிய கொடி ஏற்றி வருவது குறிப்பிடதக்கது.

    • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுதந்திர தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் தேசியக்கொடி ஏற்றினார்.
    • ஒடிசாவில் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் கலையை உருவாக்கினார்.

    இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அதைத்தொடர்ந்து குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், கெடாவில் உள்ள நாடியாத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சுதந்திர தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் தேசியக்கொடி ஏற்றினார்.

    டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர் ஜேபி நட்டா தேசியக்கொடி ஏற்றினார்.

    டெல்லியில் உள்ள AICC தலைமையகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேசியக் கொடியேற்றினார்.

    சுதந்திர தினத்தை முன்னிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பாட்னாவில் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

    ஒடிசாவில் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் மணல் கலையை உருவாக்கினார்.

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

    ×